லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிரிட்டன் மன்னர் பதவியை இழக்கும் சார்லஸ்! மகாராணி இறப்பை கூறியவரின் 400 ஆண்டு முந்தைய பகீர் கணிப்பு

Google Oneindia Tamil News

லண்டன்: மகாராணி 2ம் எலிசபெத்தின் மறைவையொட்டி பிரிட்டனின் புதிய மன்னராக அறிவிக்கப்பட்டுள்ள சார்லஸ் விரைவில் பதவியை இழப்பார் என 400 ஆண்டுக்கு முன்பே ஜோதிட நிபுணர் ஒருவர் கணித்துள்ளார். மகாராணியின் இறப்பு, ஹிட்லரின் எழுச்சி பற்றி அவரது கணிப்புகள் பலித்த நிலையில் தான் பிரிட்டனின் புதிய மன்னரான சார்லஸ் தொடர்பான கணிப்பு பலிக்குமா? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரிட்டன் மகாராணியாக 1952ம் ஆண்டில் தனது 21 வயது வயதில் அரியனை ஏறியவர் தான் 2ம் எலிசபெத். இவர்
70 ஆண்டு காலமாக பிரிட்டன் மகாராணியாக செயல்பட்டு வந்தார்.

வயது முதிர்வு காரணமாக அவர் சமீபத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். அரசு விழா, பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் தவிர்த்து வந்தார்.

உங்களோடு கைக்குலுக்கியது தான் உள்ளங்கை பெருமை.. பிரிட்டன் மகாராணி எலிசபெத்துக்கு, வைரமுத்து இரங்கல் உங்களோடு கைக்குலுக்கியது தான் உள்ளங்கை பெருமை.. பிரிட்டன் மகாராணி எலிசபெத்துக்கு, வைரமுத்து இரங்கல்

 காலமான மகாராணி

காலமான மகாராணி

இந்நிலையில் கடந்த 8 ம் தேதி இரவில் உடல்நலக்குறைவால் காலமானார். நேற்று அவரது உடல் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு கொண்டு வரப்பட்டது. தற்போது வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கில் மகாராணி எலிசபெத்துக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். வரும் 19ம் தேதி அவருக்கு இறுதி சடங்குகள் நடைபெற உள்ளது. இதில் இந்தியா சார்பில் ஜனாதிபதி திரெளபதி முர்மு பங்கேற்க உள்ளார்.

புதிய மன்னரான சார்லஸ்

புதிய மன்னரான சார்லஸ்

மகாராணி எலிசபெத்தின் மறைவால் புதிய மன்னராக அவரது மூத்த மகன் சார்லஸ் அறிவிக்கப்பட்டார். பிரிட்டன் மன்னராக ஏற்கனவே 2 பேர் சார்லஸ் என்ற பெயரில் இருந்ததால் இவர் 3ம் சார்லஸ் என்ற பெயருடன் அழைக்கப்படுகிறார். இந்நிலையில் தான் சார்லஸ் பிரிட்டன் மன்னராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கான ஆவணங்களில் சார்லஸ் கையெழுத்திட்டு பிரிட்டன் மன்னராக மாறியுள்ளார்.

குறுகிய கால பதவி

குறுகிய கால பதவி

இந்நிலையில் தான் பிரிட்டன் மன்னராக 3ம் சார்லஸ் சிறிது காலம் மட்டுமே இருப்பார் எனவும், விரைவில் அவர் தனது பதவியில் இருந்து விலகுவார் எனவும் 16ம் நூற்றாண்டின் பிரபல ஜோதிடர் கணித்து எழுதியுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் சார்லஸை தொடர்ந்து பிரிட்டனின் அடுத்த மன்னராக அவரது இளைய மகன் ஹாரி பதவியேற்பார் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இந்த கணிப்பை 16ம் நூற்றாண்டான 1555ம் ஆண்டிலேயே நோஸ்ட்ராடாமஸ் என அறியப்படும் மைக்கேல் டி நோஸ்ட்ரேடேம் கணித்துள்ளார்.மேலும் அவரது கணிப்பின்படியே பிரிட்டன் மகாராணி 2ம் எலிசபெத் மறைந்துள்ள நிலையில் தான் சார்லஸ் தொடர்பான கணிப்பு இன்னும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பதவி இழப்பு

பதவி இழப்பு

பிரிட்டன் அரச குடும்பம் குறித்து 16ம் நூற்றாண்டில் வாழ்ந்த நோஸ்ட்ராடாமஸ் கணித்துள்ளதாக பிரபல எழுத்தாளர் மரியோ ரீடிங் என்பவர் கூறிய சில முக்கிய விபரங்களை தெரிவித்துள்ளார். அதன்படி 2022 ஆம் ஆண்டில் ராணி எலிசபெத் 96 வயதில் காலமாவார். அதன்பிறகு 74 வயதில் சார்லஸ் மன்னராக வருவார். இவர் பிரிட்டன் மன்னராக குறுகிய காலம் மட்டுமே இருப்பார். இவர் பதவியை இழந்த பிறகு அவரது இளைய மகன் இளவரசர் ஹாரி பிரிட்டன் மன்னராக முடிசூடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரணம் என்ன?

காரணம் என்ன?

மேலும் இளவரசி டயானாவை விவாகரத்து செய்தது தொடர்பான விவகாரத்தில் சார்லஸ் தனது மன்னர் பதவியை இழப்பார் எனவும், இதன் மூலம் பிரிட்டனின் அடுத்த மன்னராக சார்லஸின் மகன் வில்லியமுக்கு செல்லும். ஆனால் அவர் அதனை ஏற்கமாட்டார். இதனால் அவருக்கு அடுத்தபடியாக உள்ள யாரும் எதிர்பாராத வகையில் ஒருவர் மன்னராக முடிசூடுவார். அது அவரது 2ம் மகனாக இருப்பார் என கணித்துள்ளார். அதன்படி சார்லசுக்கு பிறகு அவரது இளைய மகனான இளவரசர் ஹாரி முடிசூடுவார். இவர் தனது 38 வது வயதில் 9ம் ஹென்றியாக மன்னராக பொறுப்பேற்றார் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

ஹாரியின் வயது என்ன?

ஹாரியின் வயது என்ன?

பிரிட்டன் மன்னராக 3ம் சார்லஸ் குறுகிய காலம் தான் நீடிப்பார் எனவும், ஹாரி தனது 38வது வயதில் பொறுப்பு ஏற்பார் எனவும் கணிக்கப்பட்டுள்ளது பலிக்குமா? என்பதை அறிய நாம் இன்னும் நீண்டகாலம் காத்திருக்க வேண்டியது இல்லை. ஏனென்றால் ஹாரிக்கு இன்று பிறந்தநாளாகும். இதன்மூலம் இன்று அவர் 38 வயதை எட்டுகிறார். இன்னும் ஓராண்டிலேயே நோஸ்ட்ராடாமஸின் கணிப்பு பலிக்குமா? என்பதை அறிந்து கொள்ள முடியும்.

 முந்தைய கணிப்புகள் என்னென்ன?

முந்தைய கணிப்புகள் என்னென்ன?

ஜெர்மனியின் சர்வாதிகாரியான அடால்ப் ஹிட்லரின் எழுச்சி, லண்டனில் ஏற்பட்ட பெரும் தீவிபத்து, முன்னாள் அமெரிக்க அதிபர் ஜான் எப் கென்னடியின் படுகொலை, இரட்டை கோபுர தாக்குதல் உள்ளிட்ட பல சம்பவங்களை நோஸ்ட்ராடாமஸ் முன்கூட்டியே கணித்து இருந்தார். அவரது கணிப்பின்படி இந்த சம்பவங்கள் நடந்தன. இதனால் தான் பிரிட்டன் அரச வம்சம் தொடர்பான அவரது கணிப்பும் அனைவரின் புருவத்தையும் உயர்த்தி உள்ளது.

English summary
An astrologer predicted 400 years ago that Charles, who has been announced as the new King of Britain, will soon lose his position after the death of Queen Elizabeth II. As his predictions about the death of the Queen, the rise of Hitler come true, will his prediction about Charles, the new King of Britain, come true? It has created an expectation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X