பருவநிலை மாற்றம் பற்றிய ஆய்வு.. இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு
லண்டன்: 2021 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய 6 துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயிலும், பிற அனைத்து துறைகளுக்கான நோபல் பரிசும் ஸ்வீடன் நாட்டு தலைநகர் ஸ்டோக்ஹோமிலும் அறிவிக்கப்படுகிறது.

நேற்று மருத்துவத் துறை
இந்த வரிசையில் 2021ம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் நேற்று முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. முதல் நாளான நேற்று மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

இயற்பியல் நோபல் பரிசு
அமெரிக்காவின் ஸ்க்யூரா மனாபே, ஜெர்மனியின் கிளாஸ் ஹசில்மேன், இத்தாலியின் ஜார்ஜியோ பரிசி ஆகிய மூன்று விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

என்ன கண்டுபிடிப்பு
ஸ்க்யூரா மனாபே மற்றும் கிளாஸ் ஹசில்மேன் ஆகியோர் பூமியின் வானிலையில் இயற்பியல் மாதிரிக்காகவும் புவி வெப்பமடைதலின் மாறுபாட்டை அளவிட்டு துல்லியமாக கணித்ததற்கும் வழங்கப்பட்டது.
ஜார்ஜியோ பரிசிக்கு, உடல்கோளாறுகள் மற்றும் ஏற்ற இறக்க இடைவெளியைக் கண்டறிந்ததற்காகவும் வழங்கப்பட்டுள்ளது.

அறிக்கை
இயற்பியலுக்கான நோபல் குழுவின் தலைவரான தோர்ஸ் ஹான்ஸ் ஹான்சன், வெளியிட்ட அறிக்கையில் "இந்த ஆண்டு அங்கீகரிக்கப்பட்ட இந்த கண்டுபிடிப்புகள், காலநிலை பற்றிய நமது அறிவு ஒரு திடமான அறிவியல் அடித்தளத்தில் உள்ளது என்பதை நிரூபிக்கிறது. சிக்கலான இயற்பியல் அமைப்புகளின் பண்புகள் மற்றும் பரிணாமம் பற்றிய ஆழமான நுண்ணறிவைப் பெற நமக்கு இந்த கண்டுபிடிப்புகள் பங்களித்தது. " என்று கூறியுள்ளார்.
|
வாழ்த்துக்கள்
இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் சுந்தரராஜன் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், புவி வெப்பமாதலை துல்லியமாக கணிக்க இயற்பியல் மாதிரிகளை உருவாக்கி காலநிலை மாற்றத்தை உறுதிபடுத்த ஆய்வுகளை மேற்கொண்ட சுயுகுரோ மற்றும் க்ளாஸுக்கும் இவர்களுடன் ஜியாரியோவுக்கும் இந்த ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. வாழ்த்துகள் என்று கூறியுள்ளார். இதேபோல பலரும் நோபல் பரிசு வென்றவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications