லண்டன் மருத்துவமனையில் பாம்பே ஜெயஸ்ரீ.. உடல்நிலை எப்படி உள்ளது? குடும்பத்தினர் சொன்ன தகவல்!

Subscribe to Oneindia Tamil

லண்டன்: பிரபல பின்னணி பாடகி பாம்பே ஜெயஸ்ரீ நன்றாக குணமடைந்து வருவதாக அவரது குடும்பத்தினர் ட்விட்டர் மூலமாக தெரிவித்துள்ளனர். பாம்பே ஜெயஸ்ரீ-க்கு ஓரிரு நாட்கள் ஓய்வு தேவைப்படுவதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

புகழ்பெற்ற கர்நாடக இசைக் கலைஞராக வலம் வருபவர் பாம்பே ஜெயஸ்ரீ. இவர் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் பல பாடல்களை பாடி ரசிகர்களின் ஆதரவை பெற்றவர்.

இளையராஜா, ஏஆர் ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்ட தமிழின் முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் தொடர்ந்து பாம்பே ஜெயஸ்ரீ ஏராளமான பாடல்களை பாடியுள்ளார்.

பாம்பே ஜெயஸ்ரீ

பாம்பே ஜெயஸ்ரீ

குறிப்பாக மின்னலே படத்தில் இவர் பாடிய 'வசீகரா', காக்க காக்க படத்தில் பாடிய 'ஒன்றா ரெண்டா ஆசைகள்' உள்ளிட்ட பல பாடல்களை ரசிகர்கள் இன்றும் கொண்டாடி வருகின்றனர். மத்திய அரசின் 'பத்மஸ்ரீ', தமிழ்நாடு அரசின் 'கலைமாமணி' உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவர். இவர் சினிமாவில் பாடுவதோடு மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளில் நடக்கும் இசைக் கச்சேரிகளிலும் பங்கேற்று வருகிறார்.

இங்கிலாந்து சென்ற பாம்பே ஜெயஸ்ரீ

இங்கிலாந்து சென்ற பாம்பே ஜெயஸ்ரீ

அந்த வகையில் இங்கிலாந்தின் லிவர்பூல் பல்கலைக்கழகத்தின் யோகோ ஓனோ லெனான் மையத்தில் உள்ள டங் ஆடிட்டோரியத்தில் நேற்று பாம்பே ஜெயஸ்ரீ-யின் இசை நிகழ்ச்சி நடைபெற இருந்தது. இதற்காக லிவர்பூல் நகரில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கி இருந்தார். இந்த நிலையில் நேற்று அவர் அறையை விட்டு வெளியே வராததால், உடன் சென்றவர்கள் சந்தேகமடைந்து, அவரது அறைக்குச் சென்று பார்த்தனர்.

சுயநினைவின்றி மீட்பு?

சுயநினைவின்றி மீட்பு?

அப்போது, பாம்பே ஜெயஸ்ரீ மயங்கிய நிலையில் இருந்துள்ளார். இதையடுத்து, உடனடியாக அங்குள்ள மருத்துவமனையில் பாம்பே ஜெயஸ்ரீ சேர்க்கப்பட்டுள்ளார். இதனிடையே பாம்பே ஜெயஸ்ரீ சுயநினைவின்றி மீட்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதனால் ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்கள் வாயிலாக கவலையை வெளிப்படுத்தி வந்தனர்.

குடும்பத்தினர் தகவல்

குடும்பத்தினர் தகவல்

இந்த நிலையில் பாம்பே ஜெயஸ்ரீயின் உடல்நிலை குறித்து அவரது குடும்பத்தினர் ட்விட்டரில் தகவல் பகிர்ந்துள்ளனர். அதில், லண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாம்பே ஜெயஸ்ரீ நன்றாக குணமடைந்து வருகிறார். அவரின் உடல்நிலை சீராக உள்ளது. ஓரிரு நாட்கள் ஓய்வு தேவைப்படுகிறது என்று தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+