மூளைக்குள் அரிசியை விட சின்ன சிப்.. தொடர்ந்து பறக்கும் சிக்னல்.. கொஞ்சம் மிஸ்ஸானாலும் ரிஸ்க் தான்!
லண்டன்: இந்தக் காலத்தில் மூளையில் ஏற்படும் சிக்கல்களைச் சரி செய்யப் பல்வேறு ஆய்வுகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே நியூரோ டெக்னாலஜி துறையில் மிகப் பெரிய சாதனையாகத் தலைமுடியைக் காட்டிலும் மிகவும் சின்ன சைஸில் இருக்கும் சிப்பை ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர். இது மருத்துவ உலகில் முக்கியமான சாதனையாகப் பார்க்கப்படுகிறது.
மருத்துவ உலகில் இப்போது தொடர்ச்சியாகப் பல முக்கிய கண்டுபிடிப்புகள் நடந்து வருகிறது. பல சிக்கலான பிரச்சனைகளுக்கும் கூட மருத்துவர்கள் தீர்வை கண்டுபிடித்து வருகிறார்கள். குறிப்பாக மூளையில் ஏற்படும் பிரச்சனைகளைச் சரி செய்யும் வகையில் பல முக்கிய ஆய்வுகள் நடந்து வருகிறது. அதில் இப்போது மிக பெரிய வெற்றியை ஆய்வாளர்கள் அடைந்துள்ளனர்.

மூளை சிப்
இதற்கிடையே ஒரு அரிசி மணியை விட சிறிய மூளை சிப் ஒன்றை ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர். இது நியூரோ டெக்னாலஜியின் எதிர்காலத்தில் மிகப் பெரிய ஒரு சாதனையாகப் பார்க்கப்படுகிறது. MOTE, அதாவது மைக்ரோஸ்கேல் ஆப்டோ எலக்ட்ரானிக் டெதர்லெஸ் எலக்ட்ரோட் என அழைக்கப்படும் இந்தச் சாதனம், தற்போதுள்ள சிப்களை விட மிகவும் சிறியது. மேலும், இவ்வளவு சிறியதாக இருப்பதால் இதை உடலின் எந்தவொரு பகுதியிலும் பயன்படுத்த முடியும்.
இது குறித்து கார்னெல் பல்கலைக்கழக இணை ஆசிரியர் அலியோஷா மோல்னார் கூறுகையில், "மூளையின் மின் செயல்பாட்டைக் கண்காணித்து, அது குறித்த தகவல்களை வயர்லெஸ் முறையில் வெளியே அனுப்பும் வேலையை இது செய்யும். எனக்குத் தெரிந்த வரை உலகின் மிகச் சிறிய நரம்பியல் சிப் இதுதான்" என்றார்.
முடி சைஸ் தான்
இது கிட்டத்தட்ட மனித முடியின் சைஸில் தான் இருக்கிறது.. 300 மைக்ரான் நீளமும், 70 மைக்ரான் அகலமும் கொண்டதாக இந்த சிப் இருக்கிறது. நரம்பியல் சிக்னல்களை இன்பரா ரெட் கதிர்களாக மாற்றி, பின்னர் மூளைத் திசுக்கள் மற்றும் எலும்புகள் வழியாக ஒரு ரிசீவருக்கு அனுப்புவதன் மூலம் இது செயல்படுகிறது. இந்த சிப் சோதனை முதலில் 2001ல் தொடங்கப்பட்டது. இருப்பினும், சோதனை எல்லாம் முடிந்து இப்போது இதை நடைமுறைக்குக் கொண்டுவரக் கிட்டத்தட்ட 24 ஆண்டுகள் ஆகியிருக்கிறது..
எப்படி வேலை செய்யும்
அலுமினியம் கேலியம் ஆர்சனைடு என்ற செமி கண்டெக்டர் டையோடு மூலம் உருவாக்கப்பட்ட இந்த MOTE, டேட்டாவை அனுப்ப ஒளியை வெளியிடும். இந்த அமைப்பு, ஒரு ஆப்டிகல் என்கோடர் மற்றும் குறைந்த நாய்ஸ் ஆம்ளிபையர் உதவியுடன், நிலையான மைக்ரோசிப்களின் அதே டிரான்ஸ்மிஷன் முறைகளைப் பயன்படுத்துகிறது. பல்ஸ் பொசிஷன் மாடுலேஷன் மூலம் டேட்டா அனுப்பப்படுகிறது. இது சாட்டிலைட் ஆப்டிகல் கம்யூனிகேஷனிலும் பயன்படுத்தப்படுகிறது. மிகக் குறைந்த மின்சாரத்தைப் பயன்படுத்தி, தேவையான டேட்டாவை இதன் மூலம் அனுப்ப முடியும்.
ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட செல் கல்சர்களில் இந்த சிப் முதலில் சோதிக்கப்பட்டது. பின்னர் எலிகளின் மூளைப் பகுதியான பேரல் கார்டெக்ஸில் பொருத்தப்பட்டது. எலிகளின் மூளைக்குள் சுமார் ஒரு ஆண்டுக்கு மேலே இந்த சிப்கள் மிக துல்லியமாக செயல்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஏன் முக்கியம்?
ஏற்கனவே மூளையில் வைக்கக்கூடிய வகையில் சில சிப்கள் இருக்கவே செய்கிறது. இருப்பினும், அந்த சிப்கள் வைக்கப்பட்டால் MRI ஸ்கேன் போனவற்றை எடுப்பதில் சிரமம் இருக்கும். இருப்பினும், இந்த MOTE சிப் இருந்தாலும் MRI ஸ்கேன் எடுப்பதில் எந்தவொரு சிக்கலும் வராது. இதில் வயர்லெஸ் முறை பயன்படுத்தப்படுவதால் நோயாளிகளுக்கும் மற்ற சிப்களை போல அதிக எரிச்சலை இது ஏற்படுத்தாது என்பது குறிப்பிடத்தக்கது. வரும் காலத்தில் இந்த சிப் நியூரோ டெக்னாலஜி துறையில் மிக பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications