Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‛ரிஷி சுனக்கிற்கு விழுந்த அடி’.. அப்படியே பலித்த கருத்து கணிப்பு! பிரிட்டன் தேர்தலில் வென்றது யார்?

Subscribe to Oneindia Tamil

லண்டன்: பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் தான் பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி படுதோல்வி அடைந்த நிலையில் கீர் ஸ்டார்மரின் தொழிலாளர் கட்சி தனிபெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது. இந்த ரிசல்ட்டில் தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்து கணிப்புகள் அப்படியே எதிரொலித்துள்ள நிலையில் எந்த கட்சிக்கு எத்தனை இடங்கள் என்பது பற்றி இங்கு பார்ப்போம்.

பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனக் உள்ளார். இவரது பதவிக்காலம் விரைவில் முடிவுக்கு வர உள்ளது. இந்நிலையில் தான் நேற்று ஒரே கட்டமாக பிரிட்டனில் நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. அதாவது பிரிட்டன் நாடாளுமன்ற தொகுதிகள் என்பது இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வால்ஸ் மற்றும் நார்தன் அயர்லாந்து உள்ளிட்ட 4 இடங்களை உள்ளடக்கியது.

britain Rishi Sunak

இங்கு மொத்தம் 650 தொகுதிகள் உள்ளன. இதில் ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 326 இடங்களில் வெற்றி பெற வேண்டும். இந்த நாடாளுமன்ற தேர்தலில் நேரடி போட்டி என்பது 2 கட்சிகளுக்கு இடையே தான் உள்ளது. அதாவது பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி மற்றும் கீர் ஸ்டார்மரின் தொழிலாளர் கட்சிக்கு இடையே தான் போட்டி உள்ளது.

இத்தகைய சூழலில் தான் பிரிட்டன் நேரப்படி நேற்று காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை தேர்தல் நடந்தது. அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியாக தேர்தல் என்பது நடந்து முடிந்தது. அதாவது இந்தியாவில் இவிஎம் எனும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் தேர்தலுக்கு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் பிரிட்டனை பொறுத்தவரை ஓட்டுச்சீட்டு முறை தான் நடைமுறையில் உள்ளது. இந்த ஓட்டுச்சீட்டில் வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் அவர்களின் கட்சியின் பெயர் இருக்கும். வாக்காளர்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று ஓட்டுச்சீட்டை வாங்கி அதில் தங்களுக்கு விரும்பமுள்ள வேட்பாளர்களின் பெயருக்கு நேராக X என்று குறித்து வாக்குபெட்டிக்குள் போட்டனர். இதையடுத்து இன்று காலை முதல் ஓட்டு எண்ணிக்கை என்பது தொடங்கி நடந்து வருகிறது.

இந்நிலையில் தான் பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. Ipsos சார்பில் மேற்கொள்ளப்பட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி படுதோல்வியை சந்திக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாறாக கீர் ஸ்டார்மரின் தொழிலாளர் கட்சி பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கீர் ஸ்டார்மரின் தொழிலாளர் கட்சி 410 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும், ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி 131 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று அதிகாரத்தை இழக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. பிரிட்டனில் ஆட்சியை பிடிக்க 326 தொகுதிகளில் வெல்ல வேண்டும் என்ற நிலையில் கீர் ஸ்டார்மரின் தொழிலாளர் கட்சிக்கு 410 இடங்கள் வரை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கருத்து கணிப்பு என்பது அப்படியே பலித்துள்ளது. அதன்படி பிரிட்டன் தேர்தலில் கீர் ஸ்டார்மரின் தொழிலாளர் கட்சி 409 இடங்களில் வென்றுள்ளது. ஆளும் கட்சியாக இருந்த பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி 113 இடங்களில் வென்றுள்ளது. லிபரல் டெமாக்ரட் என்ற கட்சி 70 இடங்களிலும் ஸ்காட்டிஷ் நேஷனல் கட்சி 8 இடங்களிலும் சின் பெயின் கட்சி 7 இடங்களிலும், சுயேச்சைகள் 5 இடங்களிலும் ரிபார்ம் யுகே, கிரீன், பிளேட் சிம்ரு, டெமாக்கிரட்டிக் யூனியனிஸ்ட் கட்சிகள் தலா 4 இடங்களிலும், சோசியல் டெமாக்கிரசடிக் மற்றும் லேபர் பகட்சி 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இன்னும் 17 தொகுதிகளில் ரிசல்ட் வெளியாகவில்லை.

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தொழிலாளர் கட்சி 420 இடங்களில் வெல்லும் என கூறப்பட்ட நிலையில் அந்த கட்சி தற்போது வரை 409 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதேபோல் கன்சர்வேட்டிவ் கட்சி 131 இடங்களை வெல்லும் என கணிக்கப்பட்ட நிலையில் அந்த கட்சி 113 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது. இதன்மூலம் கருத்து கணிப்பு முடிவு என்பது அப்படியே பிரிட்டன் தேர்தலில் எதிரொலித்துள்ளது.

இதன்மூலம் பிரிட்டனில் 14 ஆண்டு கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆட்சி முடிவுக்கு வரும். பிரிட்டனை பொறுத்தவரை கடந்த 2010ம் ஆண்டு முதல் தொடர்ந்து 14 ஆண்டுகளாக கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சியில் இருந்த நிலையில் இந்த முறை அந்த கட்சி அதிகாரத்தை இழந்துள்ளது. அதுமட்டுமின்றி பிரிட்டனின் புதிய பிரதமராக தொழிலாளர் கட்சியின் தலைவராக கீர் ஸ்டார்மர் பொறுப்பேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+