லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா, ஊரடங்குனு ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா.. அப்போ இதைப் பாருங்க.. உங்களுக்கு நம்பிக்கை தானா பிறக்கும்!

விடா முயற்சியுடன் சிறுவன் ஒருவன் தூணில் ஏறும் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Google Oneindia Tamil News

லண்டன்: விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என நிரூபித்து வெற்றிக்கனியை பறிக்கும் சிறுவனுடைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி இருக்கிறது.

'முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்'.. 'தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்'.. இது வள்ளுவன் வாக்கு.. ஒரு விஷயத்தில் நாம் வெற்றி பெற வேண்டுமானால் முதலில் நமக்குத் தேவை நம்பிக்கையும் விடா முயற்சியும் தான். இவை இரண்டும் இருந்தால் எப்போதும் எந்த ஒரு பெரிய விஷயத்தையும் நிச்சயம் சாதித்துவிட முடியும்.

இந்த வாக்கியத்தை மெய்ப்பிக்கும் கதைகள் பல நாம் கேட்டிருப்போம். தற்போதைய நவீன யுகத்தில் இந்த சொற்களின் காட்சிகளை காணும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

வைரல்

சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக இருக்கும் ஒரு வீடியோவில் ஏழு வயது மதிக்கத்தக்க சிறுவன் (பார்ப்பதற்கு சிறுமி போல் இருப்பதால், பலர் தவறாக நினைத்து விடுகின்றனர்) ஒருவன் எந்தவித உபகரணங்களின் உதவியும் இல்லாமல், 10 அடி உயரமுள்ள ஒரு தூணில் ஏற முயற்சி செய்கிறான். முதலில் அவனால் அந்த தூணில் முழுமையாக ஏற முடியவில்லை.ஆனால் அவன் அதனால் சோர்ந்து போகவில்லை.

விடா முயற்சி விஸ்வரூப வெற்றி

விடா முயற்சி விஸ்வரூப வெற்றி

விடாமல் முயன்று கொண்டே இருக்கிறான். பாதி தூரம் ஏறி விட்டு சறுக்கிக் கீழே விழுகிறான். ஆனாலும் அவன் தனது முயற்சியை நிறுத்தவில்லை. ஏழெட்டு முறை தீவிரமாக முயன்ற பிறகு அந்த தூணில் சரசரவென மேலே ஏறி மேற்கூரையை தொட்டுவிட்டு சர்ரென கீழே இறங்குகிறான் அந்த சிறுவன். இறங்கிவிட்டு 'கூகூகூ' என கூச்சலிட்டு தனது வெற்றிக் களிப்பை வெளிப்படுத்துகிறான் அந்த நம்பிக்கை நாயகன்.

பாராட்டு

பாராட்டு

இந்த வீடியோவை பார்த்த பலரும் மெய்சிலிர்த்து போயுள்ளனர். இந்த சிறுவனின் நம்பிக்கை தங்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை தருவதாக நெட்டிசன்கள் புகழாரம் சூட்டி வருகின்றனர். இந்த சிறுவன் தான் தனது குரு என ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். கொரோனா, ஊரடங்கு என எதிர்காலப் பயத்தில் இருக்கும் மக்களுக்கு இதுபோன்ற வீடியோக்கள் தான் இப்போதைக்கு உற்சாகமூட்டி வருகிறது.

யார் இந்த சிறுவன்?

யார் இந்த சிறுவன்?

தற்போது தனது விடாமுயற்சியால் வெற்றி பெற்று பலரையும் திரும்பிப் பார்த்து இருக்க திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் இந்த சிறுவன் ஏற்கனவே சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானவன். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஏழு வயது சிறுவனான அராத் ஹோஸின் தான் இந்த வீடியோ மூலம் நமக்கு அறிமுகமாகியிருக்கும் சிறுவன் என தெரியவந்துள்ளது.

ஏற்கனவே பிரபலம்

ஏற்கனவே பிரபலம்

ஆராத் ஒரு கால்பந்து வீரன். இங்கிலாந்தில் உள்ள பிரபலமான லிவர்பூல் கால்பந்து கிளப்பில் விளையாடி வருகிறார். இவனுக்கு சமூகவலைதளங்களில் ஏற்கனவே பல லட்சம் பாலோயர்கள் இருக்கிறார்கள். இவனது ஃபுட்பால் வீடியோக்கள் ஏற்கனவே மிகவும் பிரபலமானவை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
In a viral video in social media, a 7 years old boy climbs a pillar after multiple attempts.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X