ஆண்டுக்கு 2 பிறந்தநாள் கொண்டாட்டம்.. மறைந்த பிரிட்டன் மகாராணியின் பின்னணியில் இருந்த முக்கிய காரணம்
லண்டன்: மறைந்த பிரிட்டன் மகாராணி 2ம் எலிசபெத் ஆண்டுக்கு 2 முறை பிறந்தநாள் கொண்டாடி வந்தார். இதன் பின்னணியில் இருந்த முக்கிய காரணம் வெளியாகி உள்ளது.
பிரிட்டன் மகாராணியாக இருந்தர் 2ம் எலிசபெத். இவர் 70 ஆண்டுகள் வரை பிரிட்டன் மகாராணியாக இருந்த நிலையில் கடந்த 8 ம் தேதி இரவில் உடல்நலக்குறைவால் காலமாணார்.
96 வயதில் மறைந்துள்ள பிரிட்டன் மகாராணிக்கு உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரது இறுதி சடங்குகள் லண்டனில் நடைபெற உள்ள நிலையில் பலநாட்டு தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்த உள்ளனர்.

ஆண்டுக்கு 2 முறை பிறந்தநாள்
இந்நிலையில் தான் மறைந்த பிரிட்டன் மகாராணி தொடர்பான பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் ஒருபகுதியாக தான் பிரிட்டன் மகாராணி 2ம் எலிசபெத் ஒரேயாண்டில் 2 முறை பிறந்தநாள் கொண்டாடியதை வாடிக்கையாக வைத்துள்ளார். இந்த கொண்டாட்டங்கள் அரசு மரபுப்படி நடைபெற்று வந்துள்ளது. அதன் விபரம் வருமாறு:

ஏப்ரல் 21ல் பிறந்த மகாராணி
பிரிட்டன் மகாராணி இங்கிலாந்து அரச குடும்பத்தில் 1926 ஆம் ஆண்டு ஏப்ரல் 21ம் தேதி பிறந்தார். இவரது முழுப்பெயர் எலிசபெத் அலெக்சான்ட்ரா மேரி. இவரது தந்தை பெயர் ஆறாம் ஜார்ஜ். தாய் பெயர் எலிசபெத். பிரிட்டன் மன்னராக தந்தை ஆறாம் ஜார்ஜ் இருந்தார். அவரது மறைவுக்கு பிறகு தான் பிரிட்டன் மகாராணியாக 2ம் எலிசபெத் பொறுப்பேற்றார். கடந்த 1952ஆம் ஆண்டு பிரிட்டன் மகாராணியாக எலிசபெத்திற்கு மகுடம் சூட்டப்பட்டது.

ஏப்ரல், ஜூனில் பிறந்தநாள் கொண்டாட்டம்
மகாராணி 2ம் எலிசபெத் தான் பிறந்த ஏப்ரல் 21ம் தேதியில் ஒருமுறையும், ஜூன் மாதம் 2வது சனிக்கிழமை 2வது முறையாகவும் பிறந்தநாள் கொண்டாடுவார். இதில் ஏப்ரல் 21ம் தேதி நடக்கும் பிறந்தநாளை 2ம் எலிசபெத் ராணி தனது குடும்பத்தினருடன் அரண்மனையில் கொண்டாடுவார். அதன்பிறகு ஜூன் மாதம் நடக்கும் பிறந்தநாளை நாட்டு மக்களுடன் கொண்டாடுவார்.

காரணம் என்ன?
அதாவது பிரிட்டனை பொறுத்தமட்டில் மன்னர், மகாராணியாக இருப்பவர்களின் பிறந்தாள் மிகவும் பிரசித்திப்பெற்றதாகும். காலம்காலமாக கோலாகலாமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் பிரிட்டனில் ஏப்ரல் மாதம் கடும் குளிர் இருக்கும். இந்த வேளையில் மகாராணி குளிரில் வராமல் அரண்மனையில் இருந்தபடியே பிறந்தாளை கொண்டாடுவார். அதன்பிறகு ஜூன் மாதம் 2வது வாரத்தின் சனிக்கிழமை அவர் தனது 2வது பிறந்தநாளை நாட்டு மக்களுக்காக கொண்டாடுவார். எனவே வானிலை நிலவரம் தான் பிரிட்டன் மகாராணி 2 பிறந்தநாள் கொண்டாட முழுமுதற்காரணமாகும்.

எப்போது துவங்கியது?
பிரிட்டன் அரச குடும்பத்தை சேர்ந்தவர்களின் பிறந்த நாளை ஆண்டுக்கு இரண்டு முறை கொண்டாடும் பழக்கம் முதன் முதலாக 1901ல் லண்டனில் மன்னர் 7 வது எட்வர்ட் ஆட்சியின்போது அமலுக்கு வந்தது. இவர் தான் குளிர்காலத்தை கருத்தில் கொண்டு ஆண்டுக்கு இரண்டு முறை பிறந்தநாள் கொண்டாடும் பழக்கத்தை அதிகாரப்பூர்வமாக மாற்றினார். இவர் பிறந்த நவம்பர் மாதமும் குளிர்காலம் என்பதால் மக்களுடன் ஜூன் மாதத்தில் பிறந்தநாள் கொண்டாட துவங்கினார். இதனை தொடர்ந்து அரியணை ஏறும் ஒவ்வொரு நபரும் அதே பாரம்பரியத்தை கடைபிடித்து வருகின்றனர்.

41 கன் சல்யூட்
இந்த 2வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது மகாராணி 2ம் எலிசபெத் குதிரை வண்டியில் வலம் வந்து மக்களை நோக்கி கை அசைப்பார். மேலும் ‛ட்ரூப்பிங் தி கலர்' என அழைக்கப்படும் தனது படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்வார். விமானப்படையின் விமானத்தின் மரியாதையை அரண்மனை பால்கனியில் தனித்து நின்று ஏற்றுக்கொள்வார். மேலும் க்ரீன் பூங்காவில் உள்ள குயின்ஸ் ட்ரூப் மூலம் ராயல் 41 கன் சல்யூட் வழங்கப்பட்டு வந்தது. மேலும் அன்றைய தினம் மாலையில் திருவிழா போல் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கும்.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications