விவசாயிகள் தலைவர் ராகேஷ் திகாயத் நல்லவரா? கெட்டவரா? லக்கிம்பூர் படுகொலையில் கேம்? வெடிக்கும் சர்ச்சை
லக்னோ: டெல்லியில் போராடும் விவசாயிகள் சங்கத்தின் தலைவரான ராகேஷ் திகாயத், லக்கிம்பூர் படுகொலை விவகாரத்தில் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் சர்ச்சையாக வெடித்துள்ளன. உ.பி.யில் ஆளும் பாஜக அரசுக்கு இடைத்தரகர் போல ராகேஷ் திகாயத் செயல்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கும் , ஹரியானா-உ.பி. மாநில பாஜக அரசுகளுக்கும் கடந்த 10 மாதங்களாக பெரும் குடைச்சலாக இருப்பவர் ராகேஷ் திகாயத். மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் 10 மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டத்துக்கு தலைமை வகிப்பவர்தான் ராகேஷ் திகாயத். அத்துடன் சட்டசபை தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் பாஜகவுக்கு எதிராக பிரசாரம் செய்தவரும் ராகேஷ் திகாயத். இருந்த போதும் லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை சம்பவத்தில் ராகேஷ் திகாயத் நடந்து கொண்டவிதம் பல்வேறு சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பி இருக்கிறது.

லக்கிம்பூர் வன்முறை
உ.பி. மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் போராட்டம் நடத்திய போது அந்த கூட்டத்தில் காரை ஏற்றியதால் 4 விவசாயிகள் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து வன்முறை வெடித்ததில் மொத்தமாக 9 பேர் பலியாகினர். நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பை இந்த படுகொலை சம்பவம் ஏற்படுத்தியுள்ளது. லக்கிம்பூரில் படுகொலை செய்யப்பட்ட விவசாயிகளின் குடும்பங்களை சந்திக்க அரசியல் கட்சித் தலைவர்கள் யாருக்கும் இதுவரை அனுமதி தரப்படவில்லை. காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டு தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளார். சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தடுத்து நிறுத்தப்பட்டார். சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், லக்னோ விமான நிலையத்திலேயே தடுக்கப்பட்டார். லக்னோ விமான நிலையத்தை விட்டு வெளியேற அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் தரையிலேயே அமர்ந்து போராட்டம் நடத்தினார்.

ராகேஷ் திகாயத் திடீர் மாற்றம்
மேலும் படுகொலை செய்யப்பட்ட விவசாயிகள் குடும்பத்தினர் மறுபிரேத பரிசோதனை நடத்தப்பட்டால்தான் உடல்களை அடக்க செய்வோம் எனவும் கூறியிருந்தார். ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. லக்கிம்பூருக்கு உ.பி.அரசால் அனுமதிக்கப்பட்ட ஒரே தலைவர் ராகேஷ் திகாயத்தான். கொல்லப்பட்ட விவசாயிகள் குடும்பத்தினர் சார்பாக உ.பி. அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியவரும் ராகேஷ் திகாயத்தும்தான். படுகொலை செய்யப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரை ராகேஷ் திகாயத் சந்தித்து பேசிய பின்னர் உ.பி.பாஜக அரசுக்கு எதிரான குரல்கள் மெல்ல மெல்ல குறைந்து வருகின்றன.
Recommended Video

உ.பி. பாஜக அரசு நிம்மதி பெருமூச்சு
படுகொலைக்கு காரணமான மத்திய அமைச்சர் அஜிஸ் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ராவை கைது செய்தே ஆகவேண்டும்; அப்போதுதான் பிரேத பரிசோதனைக்கே அனுமதிப்போம் என்று முன்னர் விவசாயிகளின் குடும்பத்தினர் கூறியிருந்தனர். ஆனால் இப்போது பிரேத பரிசோதனைக்கு அவர்கள் ஒப்புதல் தெரிவித்துள்ளனர். மேலும் உ.பி. மாநில அரசு கொடுத்த ரூ45 லட்சம் நஷ்ட ஈட்டையும் பெறுவதாகவும் விவசாயிகள் குடும்பத்தினர் ஒப்புக் கொண்டிருக்கின்றனர். அத்துடன் உடல்களை அடக்கம் செய்யவும் 3 விவசாயிகளின் குடும்பத்தினர் ஒப்புக் கொண்டிருக்கின்றனர். இதனால் உத்தரப்பிரதேச பாஜக அரசு நிம்மதி மூச்சுவிட்டுக் கொண்டிருக்கிறது.

ராகேஷ் திகாயத் நல்லவரா? கெட்டவரா?
ஆனால் கொல்லப்பட்ட விவசாயி குருவீந்தர்சிங்கின் குடும்பம் மட்டும் ராகேஷ் திகாயத்தின் தலையீட்டுக்கு எதிர்ப்பும் தெரிவிக்கின்றனர். குருவீந்தர்சிங் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என அவரது குடும்பத்தினர் சந்தேகிக்கின்றனர். அதனால் மறு பிரேத பரிசோதனை நடத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர். இது ராகேஷ் திகாயத்துக்கு பின்னடைவாகவும் பார்க்கப்படுகிறது. மேலும் ராகேஷ் திகாயத்துடன் நொய்டா எஸ்.பி. அஜய்பால் ஷர்மாவும் உ.பி. அரசின் சார்பாக விவசாயிகள் எழுச்சியை அடக்குவதற்கு களமிறக்கப்பட்டார் என்கின்றன தகவல்கள். மத்திய அமைச்சர் அஜிஸ் மிஸ்ரா, அவரது மகன் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு எதிராக உரத்து முழங்கியவர் ராகேஷ் திகாயத். ஆனால் இப்போது உ.பி.அரசின் முகமாக விவசாயிகளை சமாதானப்படுத்தி விவசாயிகளிடையேயான கொந்தளிப்பை அணைத்துக் கொண்டிருக்கும் பணியை செய்து கொண்டிருக்கிறார். அதனால்தான் போராடும் விவசாயிகளும் எதிர்க்கட்சியினரும், மிஸ்டர் ராகேஷ் திகாயத் நீங்க நல்லவரா? கெட்டவரா? யார் பக்கம்? எல்லாமே நடிப்பா? என சரமாரி கேள்விகளை எழுப்புகின்றனர் என்கின்றனர் உ.பி. மூத்த பத்திரிகையாளர்கள்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications