உ.பியில் பீர் குடிக்கும் குரங்கு..பரவும் வீடியோ! திருடியும் குடிப்பதால் மதுக்கடை ஊழியர்கள் புலம்பல்
லக்னோ: உத்தர பிரதேசம் மாநிலத்தில் குரங்கு ஒன்று மகா குடிகாரன் போல டின் பீரின் மூடியை அசால்டாக திறந்து குடிக்கும் வீடியோ இணையத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குரங்குகள் மலைப்பகுதிகளில் அதிகம் காணப்படுகின்றன. மலைப்பகுதிகளை ஒட்டியுள்ள ஊர்களிலும் அதிக அளவில் குரங்குகள் நடமாட்டத்தை காண முடியும்.
மனிதனைப் பார்த்து மனிதன் செய்யும் செயல்களை அப்படியே செய்யும் பழக்கம் கொண்டது இந்த குரங்கு இனங்கள்.

மதுவை திருடி குடிக்கும் குரங்கு
பழங்களை சாப்பிடுவதாக இருக்கட்டும் கூல் டிரிங்ஸ் குடிப்பதாக இருக்கட்டும் என அனைத்திலும் மனிதனைப்போலவே பார்த்து அப்படியே சாப்பிட்டு பழகிவிடும். இது தொடர்பான பதிவுகள், காட்சிகள் கூட சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங் ஆகும். இந்த நிலையில், உத்தர பிரதேச மாநிலம் ரே பேரலி பகுதியில் குரங்கு ஒன்று பீர் குடிக்கிறதாம். மதுவுக்கு அடிமையானது போல அலையும் அந்த குரங்கு, மதுக்கடைகளுக்குள் புகுந்து மதுவை திருடி குடித்து விடுவதாகவும் சொல்ல்லப்படுகிறது.

பீர் குடிக்கும் குரங்கின் வீடியோ
அதேபோல், யாரவாது மதுவை வாங்கி வைத்திருந்தாலும் அவர்களிடம் இருந்து லாவமாக திருடி விடுவதாக அப்பகுதியில் உள்ள மதுப்பிரியர்களின் கவலைப்பட்டுக்கொள்கின்றனர். 'டின்' பீர் ஒன்றை லாவகமாக உடைத்து அதில் இருக்கும் பீரை குரங்கு குடிக்கும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் பரவி, பார்ப்பவர்களை இப்படி எல்லாம் குரங்கு செய்யுமா? என்று வியக்கும் அளவுக்கு உள்ளது.

மகா குடிகாரன் போல..
டின் பீரின் லாக்கை உடைப்பதாக இருக்கட்டும்.. ஒரு கையில் எடுத்து குடிப்பதாக இருக்கட்டும்.. குரங்கின் செயல்பாடுகள் கண்டிப்பாக இது முதல் முறை குடிக்கவில்லை என்று எண்ணும் அளவுக்கு அமைந்து இருக்கிறது. உண்மையான குடிமகன்கள் கூட சில சமயம் மதுபான பாட்டில் மூடிகளை திறக்க சிரமப்படும் நிலையில்... மகா குடிகாரன் போல இந்த குரங்கு லாவகமாக மூடியை திறந்து குடிப்பதை பார்த்து பலரும் வியந்து வருகின்றனர்.

விரட்ட முயன்றால் கடிக்க வருகிறது
உத்தர பிரதேசத்தின் அச்சல்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள மதுக்கடையில் பணி புரியும் ஊழியர்கள், இந்த குரங்கு செய்யும் அட்டகாசத்தை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றனர். குரங்கை விரட்டி அடிக்க முயன்றால் மேலே பாய்ந்து கடிக்க வருகிறது என்றும்... அதிகாரிகளிடம் குரங்கை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொன்னால் காது கொடுத்து கேட்க மறுக்கிறார்கள் என்றும் அப்பகுதியில் உள்ள கடை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது
மதுக்கடைகளை குறிவைக்கும் இந்த குரங்கை பிடிக்க வனத்துறையினருடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் குரங்கின் தொல்லையில் இருந்து விடுபடலாம் என்றும் மாவட்ட கலால் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலைக்கு சமூகம் தான் காரணம்
ஒருபக்கம் குரங்கு மதுவை குடித்து அட்டகாசம் செய்கிறது என்றாலும் இன்னொரு பக்கம் சமூகத்தின் அவல நிலையே இச்சம்பவம் பிரதிபலிப்பதாக விலங்கு நல ஆர்வலர்களும் சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டுகின்றனர். நம்மை பார்த்து பிரதிபலிக்கும் குரங்குகள், மது குடிக்கிறது என்றால் இந்த அவல நிலைக்கும் இந்த சமூகம்தான் பொறுப்பாக இருக்க முடியும் எனவும் விமர்சிக்கப்படுகிறது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications