அம்மா என்றழைக்காத..5 ஆண்டுகளுக்குப் பிறகு தாயை சந்தித்த யோகி.. காலில் விழுந்து ஆசி பெற்று நெகிழ்ச்சி
லக்னோ : உத்திர பிரதேச முதல்வராக 2வது முறையாக பதவியேற்றுள்ள பாஜகவை சேர்ந்த யோகி ஆதித்யநாத் பல ஆண்டுகளுக்குப் பிறகு உத்தராகண்டில் உள்ள தனது தாயாரை சந்தித்து ஆசி பெற்றதாக புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
உத்தர பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ள நிலையில் முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பிரதமர் மோடி முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.
இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், செவ்வாய்கிழமை பவுரி மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமமான பஞ்சூருக்குச் சென்று தனது தாயாரிடம் ஆசி பெற்றார்.

யோகி ஆதித்யநாத்
உ.பி முதல்வர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, தனது தாய் மற்றும் பிற உறவினர்களை சந்திக்க தனது கிராமத்திற்கு முதல்முறையாக யோகி ஆதித்யநாத் சென்றது குறிப்பிடத்தக்கது. ஆதித்யநாத் தனது தாயுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ள அங்கு அவர் , அவரது தாயாரின் கால்களைத் தொட்டு வணங்கியுள்ள நிலையில், " அம்மா" என குறிப்பிட்டுள்ளார்.

தாயுடன் சந்திப்பு
பிடிஐ வெளியிட்டுள்ள செய்தியின்படி, உ.பி முதல்வர் செவ்வாய்கிழமை இரவு தனது கிராமத்தில் தங்கியதாகவும், புதன்கிழமை தனது உறவினர் இல்ல காதணி விழாவில் கலந்து கொள்கிறார்,. பலமுறை யோகி அரசியல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும், பொதுக்கூட்டங்களில் உரையாற்றவும் உத்தரகாண்ட் சென்றிருந்தாலும், அவர் தனது பூர்வீக கிராமத்திற்கு வருவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்முறை சென்றார்
யோகி ஆதித்யநாத் உண்மையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு குறிப்பாக முதல்வராக பதவியேற்ற பின் முதல் முறையாக தனது கிராமத்திற்குச் சென்றுள்ளார். முன்னதாக, ஏப்ரல் 21, 2020 அன்று அவரது தந்தை ஆனந்த் பிஷ்ட்டின் இறந்தபோதும் கூட இறுதிச் சடங்கில் கூட அவர் கொரோனா தொற்று பரவல் காரணமாக அவரால் கலந்து கொள்ள முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

யோகி பேச்சு
முன்னதாக செவ்வாயன்று, யோகி ஆதித்யநாத் தனது ஆன்மீக குரு மஹந்த் அவைத்யநாத்தின் சிலையை பவுரி மாவட்டம் பித்யானியில் உள்ள குரு கோரகநாத் மகாவித்யாலயாவில் திறந்து வைத்தார். யம்கேஷ்வரில் உள்ள கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் பங்கேற்று உரையாற்றிய யோகி, 1940-ம் ஆண்டுக்குப் பிறகு அங்கு பிறந்தாலும் அதனைப் பார்க்க முடியாத மஹந்த் அவைத்யநாத்தின் சிலையைத் திறப்பது பாக்கியம் என்று கூறினார். தான் பௌரியில் உள்ள பஞ்சூர் கிராமத்தில் பிறந்ததாகவும், 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை யம்கேஷ்வர் அருகே உள்ள சம்கோட்கலில் உள்ள பள்ளியில் படித்ததாகவும் கூறிய உ.பி முதல்வர், தனது பள்ளி ஆசிரியர்களில் 6 பேரை கவுரவிக்கும் வாய்ப்பைப் பெற்றதற்கு நன்றி தெரிவித்தார்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications