உ.பி மக்களுக்கு வரலாற்று சிறப்பு வாய்ந்த திட்டங்களை பாஜக நிறைவேற்றியுள்ளது! முதல்வர் யோகி பெருமிதம்
லக்னோ: உத்தரப் பிரதேச மாநில மக்களுக்காக பாஜக அரசு வரலாற்று சிறப்பு வாய்ந்த திட்டங்களை நிறைவேற்றியுள்ளதாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியதாவது, "இம்மாநிலத்தில் மொத்தம் 762 மாநகராட்சிகள் இருக்கின்றன. மொத்தம் 7 கோடிக்கும் அதிகமான மக்கள் இங்கு வசிக்கின்றனர். இவர்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து தருவது மாநில அரசின் கடமை. ஆனால் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் என்ன நிலைமை இருந்தது என்பதை யோசித்து பாருங்கள். எங்கு பார்த்தாலும் வன்முறைகளும், கலவரங்களும் மக்களை எப்போதும் அச்சுறுத்தி வைத்திருந்தது. ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் நிலைமை மாற்றம் கண்டது.

கடந்த மாதம் இம்மாநில மக்களுக்காக ரூ. 8,731 கோடி மதிப்பில் சுமார் 2029 வளர்ச்சி திட்டங்களை பாஜக அரசு தொடங்கி வைத்தது. நான் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பின்னர் நிறைவேற்றப்பட்ட ஏராளமான திட்டங்களில் ஒரு சிறிய பகுதிதான் இது. இதுவரை அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த ரூ. 8,731 கோடி தொகை என்பது பல மாநிலங்களின் ஓராண்டு பட்ஜெட்டுக்கு சமமான தொகையாகும்.
வளர்ச்சிக்கு அடிப்படை என்பது நகர்ப்புறங்கள்தான். நகர்ப்புற வளர்ச்சி இல்லாமல் மாநிலத்தின் வளர்ச்சி சாத்தியமாகாது. இதனை பாஜக அரசு தெளிவாக புரிந்து வைத்திருக்கிறது. எனவேதான் புதிய கட்டமைப்புகளை மேம்படுத்த பட்ஜெட் ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னெப்போதும் உ.பி மாநில வரலாற்றில் இல்லாத அளவில் இந்த ஆண்டு பட்ஜெட்டிற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன் மூலம் உத்தரப் பிரதேசம் புதுப்பொலிவை பெறும். கல்வி, வேளாண்மை, இளைஞர் நலன், வேலைவாய்ப்பு, மூத்த குடிமக்களுக்கான திட்டம், சிறு குறு தொழில்களை பாதுகாக்க திட்டம், பெருநிறுவனங்கள் தொழிற்சாலையை தொடங்க திட்டம் என பாஜக முன்னேற்றத்தை நோக்கி வேகமாக சென்றுக்கொண்டிருக்கிறது.

இவையெல்லாம் இதற்கு முன்னர் வேறு எந்த அரசும் செய்யாத சாதனைகளாகும். கடந்த கால அரசுகள் குறைவான திட்டங்களையே அறிவித்தன. இப்படி அறிவிக்கப்பட்ட திட்டங்களும் 5 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் பாதியில் கைவிடப்படும். அதற்குள் ஆட்சி மாற்றம் கண்டு வேறு ஆட்சி வந்த பின்னர் இந்த திட்டம் மீண்டும் தொடங்கப்படும். ஆனால் அதுவும் நிறைவேற்றப்படாது. ஒரு வேளை நிறைவேற்றப்பட்டால் அதன் தரம் மிகவும் மலிவானதாக இருக்கும். ஆனால் பாஜக அப்படிப்பட்ட கட்சி கிடையாது. பாஜகவின் செயல்பாடுகள் முற்றிலும் வேறானது. நாங்கள் மக்களுக்காக செயலாற்றுகிறோம். எனவேதான் எங்களால் ரூ. 8,731 கோடி அளவிலான பெரிய திட்டங்களை சாதாரணமாக அறிவிக்க முடிகிறது" என்று கூறியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications