மலிவு விலை டேட்டா வயிற்று பசியை போக்குமா? பிரதமர் நரேந்திர மோடி மீது பாய்ந்த அகிலேஷ் யாதவ்
லக்னோ: ‛‛இந்தியாவில் மலிவு விலையில் இணைய சேவை(டேட்டா) கிடைப்பது என்பது ஒருவரின் பசியை ஒருபோதும் போக்காது. இந்திய மக்களுக்கு தற்போதைய தேவை என்பது மலிவு விலை அரிசி, பருப்பு, எரிபொருட்கள் தான்'' என பிரதமர் நரேந்திர மோடியை சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் விமர்சனம் செய்துள்ளார்.
உத்தர பிரதேசம், கேவா, பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் தேர்தல் நடந்தது.
இதில் பஞ்சாப்பில் ஆம்ஆத்மி ஆட்சியை பிடித்தது. மற்ற 4 மாநிலங்களிலும் பாஜக ஆட்சியை தக்க வைத்தது. இதனால் பாஜகவினர் மகிழ்ச்சியடைந்தனர்.

எதிர்க்கட்சியாக சமாஜ்வாதி
உத்தர பிரதேசத்தை பொறுத்தமட்டில் பாஜக மீண்டும் ஆட்சியை பிடித்ததால் யோகி ஆதித்யநாத் 2வது முறையாக முதல்வராக பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார். இந்த தேர்தலில் 100க்கும் அதிகமான இடங்களில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற்றது. பல தொகுதிகளில் பாஜக வேட்பாளர்களிடம் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் அக்கட்சி வேட்பாளர்கள் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளனர். தற்போத சமாஜ்வாதி கட்சி உத்தர பிரதேசத்தில் எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது.

அகிலேஷ் யாதவ் விமர்சனம்
மாநில அரசியில் ஆர்வம் காட்டும் நோக்கத்தில் அகிலேஷ் யாதவ் தனது எம்பி பதவியை ராஜினமா செய்தார். இதையடுத்து அவர் உத்தர பிரதேச மாநில எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வருகிறார். இவர் தொடர்ச்சியாக மத்திய, மாநில பாஜக அரசையும், பிரதமர் நரேந்திர மோடியையும் விமர்சனம் செய்து வருகிறார்.

மோடி மீது விமர்சனம்
இந்நிலையில் அவர் பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் சுற்றுப்பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றுள்ளார். முதல் நாளான நேற்று முன்தினம் ஜெர்மனி தலைநகர் பெர்லினில் புலம்பெயர் இந்தியர்கள் மத்தியி் பேசினார். அப்போது அவர் இந்தியாவில் இணைய சேவைகள் மலிவாக கிடைப்பதாக பெருமையாக கூறினார்.இதை தான் தற்போது அகிலேஷ் யாதவ் விமர்சனம் செய்துள்ளார்.

வயிற்று பசியை போக்குமா?
அதாவது பிரதமர் நரேந்திர மோடி பேசிய 42 வினாடிகள் கொண்ட வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு விமர்சனம் செய்துள்ளார். அதி, ‛‛இந்தியாவில் ஒருவரின் வயிறு காலியாக பசியில் இருக்கும்போது மலிவு விலை இணைய சேவை வழங்குவதன் மூலம் அவருக்கு என்ன செய்ய முடியும்?. ஒருவருக்கு மலிவான பெட்ரோல், டீசல், எரிவாயு, பருப்பு, அரிசி, எண்ணெய், நெய் மற்றும் மாவு தேவை. வெறும் இணைய சேவை மட்டுமே ஒருவரின் பசியை போக்காது. பணக்காரர்கள் உங்களுக்கு கைதட்டுவது, ஏழைகள் உங்களுக்கு சேவை செய்வது ஆகிய இரண்டும் வெவ்வேறு விஷயங்கள். இதனை புரிந்து கொள்ள வேண்டும்'' என கூறியுள்ளார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications