லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நமாசுக்கு தடை விதிக்க ரத்தத்தில் ஜனாதிபதிக்கு கடிதம்! இந்து மகாசபா பெண் பிரமுகர் மீது பாய்ந்த வழக்கு

Google Oneindia Tamil News

லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் நமாஸ் செய்ய தடை கோரி ரத்தத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் எழுதிய அகில பாரத் இந்து மகாசபா தேசிய செயலாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இஸ்லாமிய இறைதூதர் நபிகள் நாயகம் குறித்து பாஜகவின் நுபுர் சர்மா சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். தற்போது இவர் பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக நுபுர் சர்மாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தர பிரதேசம் மாநிலம் கான்பூர் நகரில் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பிறகு முஸ்லிம்கள் கடையை அடைக்க கூறினார்.

இந்தியாவில் கிராமத்தில் பிறந்த ஏழை எளியவனும் ஜனாதிபதி பதவியை அடைய முடியும்: பிரதமர் மோடி சூசகம் இந்தியாவில் கிராமத்தில் பிறந்த ஏழை எளியவனும் ஜனாதிபதி பதவியை அடைய முடியும்: பிரதமர் மோடி சூசகம்

வன்முறை

வன்முறை

இதற்கு ஒருதரப்பினர் எதிர்ப்பு கூறினர். இதையடுத்து இருதரப்புக்கும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் கற்களை வீசி தாக்கி கொண்டனர். இதனால் வன்முறையானது. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டுகள் வீசியும் வன்முறையாளர்களை விரட்டியடித்தனர். இதுதொடர்பாக 1000 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 50க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரத்தத்தில் கடிதம்

ரத்தத்தில் கடிதம்

இந்நிலையில் அகில பாரத இந்து மகாசபாவின் தேசிய செயலாளரான உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த பூஜா ஷகுன் பாண்டே என்ற அன்னபூர்ணா மா அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், வெள்ளிக்கிழமை தொழுகையை தடை செய்ய வேண்டும் என கூறியிருந்தார். மேலும் இதுதொடர்பாக அவர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கும் ரத்தத்தில் கடிதம் எழுதியிருந்தார்.

நமாசுக்கு தடை விதிக்க வலியுறுத்தல்

நமாசுக்கு தடை விதிக்க வலியுறுத்தல்

அதில், ‛‛வெள்ளிக்கிழமை என்பது தொழுகைக்கான நாள். இது பயங்கரவாதத்துக்கான நாளாக உள்ளது. முஸ்லிம் அல்லாதவர்களை படுகொலை செய்ய திட்டமிடப்படுகிறது. எனவே வெள்ளிக்கிழமை சிறிய மசூதிகளில் 10 பேரும், பெரிய மசூதிகளில் 25 பேரை மட்டுமே தொழுகைக்கு அனுமதிக்க வேண்டும். அதிகளவில் மக்கள் கூடி நமாஸ் செய்ய உடனடியாக தடை விதிக்க வேண்டும்'' என்பன போன்ற விஷயங்களை குறிப்பிட்டு இருந்தார். மேலும் மசூதி பற்றி சர்ச்சைக்குரிய வகையில் சில விஷயங்களை குறிப்பிட்டு இருந்தார்.

போலீசார் வழக்கு

போலீசார் வழக்கு

இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. இதுகுறித்து அலிகார் நகர மாஜிஸ்திரேட் மூலம் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்த நோட்டீசுக்கு அவர் பதிலளிக்கையில், ‛‛எந்த மதத்தின் உணர்வுகளையும் புண்படுத்தி இருந்தாலும் வருந்துகிறேன்'' என கூறியிருந்தார். இருப்பினும் இதுதொடர்பாக இருபிரினவிர் இடையே பகைமையை தூண்டுதல் உள்பட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர் ஏற்கனவே பல சர்ச்சைகளில் சிக்கி உள்ளார். போலீசாரால் 2 முறை கைது நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். 2019ல் கேடா்சேவை புகழ்ந்து பிரார்த்தனை செய்ததாக அவர் மீது வழக்கப்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

English summary
The Uttar Pradesh Police have booked national secretary of the Akhil Bharat Hindu Mahasabha (ABHM) for seeking a ban on namaz. The police registered a case against Mahamandaleshwar Annapurna Bharti, alias Pooja Shakun Pandey, in Aligarh for making a statement seeking a ban on namaz.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X