தனியாக வீட்டில் இருந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை.. உ.பியில் தொடரும் அவலம்!

Subscribe to Oneindia Tamil

லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமை குற்றங்கள் குறித்து சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கவலை தெரிவித்து வரும் நிலையில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அம்மாநிலத்தின் மெயின்புரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சிறுமி ஒருவரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பாலியல் பலாத்காரம்

பாலியல் பலாத்காரம்

இந்தியாவில் பாலியல் வன்கொடுமை குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடந்த 2021ஆம் ஆண்டைப் பொறுத்த அளவில் சராசரியாக நாளொன்றுக்கு 86 பாலியல் பலாத்கார குற்றங்கள் நடைபெறுகிறது. ஒரு மணி நேரத்திற்கு 49 பெண்கள் இந்த கொடுமையை எதிர்கொள்கின்றனர் என தேசிய குற்ற ஆவண காப்பகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதாவது 2021ஆம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் 31,677 பாலியல் பலாத்கார குற்றங்கள் பதிவாகியுள்ளன.

கொலை?

கொலை?

இந்த குற்றங்கள் அதிக அளவு நிகழும் முதல் 5 மாநிலங்களில் உத்தர பிரதேசம் 4வது இடத்தில் இருக்கிறது. இவ்வாறு இருக்கையில் தற்போது மற்றொரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. உத்தர பிரதேசத்தின் மெயின்புரி மாவட்டத்தின் நாகலா ஷிஷாம் கிராமத்தில் சிறுமி ஒருவரின் சடலம் தூக்கில் தொங்கியவாறு மீட்கப்பட்டுள்ளது. சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக சிறுமியின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

தனியாக இருக்கையில்

தனியாக இருக்கையில்

சிறுமியின் தந்தை மெயின்புரிக்கு பணிக்கு சென்றிருந்துள்ளார். தாய் ஆக்ராவுக்கு வேலைக்கு சென்றிருக்கிறார். சம்பவம் நடந்த நேரத்தில் உயிரிழந்த சிறுமியும், அவரது சகோதரியும் தனியாக இருந்துள்ளனர். அவரது சகோதரி டியூஷன் சென்று வீடு திரும்பிய நிலையில் தனது தங்கை தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். விஷயமறிந்த அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

கைது

கைது

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சிறுமியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து மெயின்புரி காவல் கண்காணிப்பாளர் கமலேஷ் தீட்சித் கூறுகையில், "சம்பவம் குறித்து கேள்விப்பட்டவுடன் உடனடியாக விரைந்து சிறுமியின் பிரேதத்தை கைப்பற்றியுள்ளோம். பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்னர்தான் என்ன நடந்தது என்பது குறித்து விரிவாக கூறமுடியும். இதில் ஈடுபட்ட குற்றவாளிகள் நிச்சயம் கைது செய்யப்படுவார்கள்." என்று கூறியுள்ளார்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

ஏற்கெனவே சில நாட்களுக்கு முன்னர் சகோதரிகள் இருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+