உத்தர பிரதேச தேர்தலில் 387 தொகுதியில் காங்கிரஸின் ‛டெபாசிட்’ காலி.. சிறுகட்சிகளை விட படுமோசம்
லக்னோ: உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் 399 தொகுதிகளில் தனித்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் 387 வேட்பாளர்கள் ‛டெபாசிட்' இழந்துள்ளனர். சிறுகட்சிகள் கூட ‛டெபாசிட்' இழக்காத நிலையில் காங்கிரஸ் கட்சி மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில் 403 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு 7 கட்டங்களாக தேர்தல் நடந்தது. இறுதிக்கட்ட ஓட்டுப்பதிவு மார்ச் 7 ல் முடிவடைந்தது. இதையடுத்து மார்ச் 10ல் ஓட்டுக்கள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில் பாஜக அமோக வெற்றி பெற்றது. இதன்மூலம் உத்தர பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. யோகி ஆதித்யநாத் முதல்வராக பதவியேற்கிறார்.

255ல் பாஜக
இந்த தேர்தலில் பாஜக 255, அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி 111, ஏடிஏஎல் 12, ஆர்எல்டி 8, நிசாத், எஸ்பிஎஸ்பி தலா 6, காங்கிரஸ் 2,மாயாவதியின் பகுஜன் சமாஜ் ஒரு இடத்திலும் பிற கட்சிகள் 2 இடங்களிலும் வென்றன. இங்கு ஆட்சி அமைக்க 202 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. பாஜக 255 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது.

டெபாசிட் இழப்பு
இந்நிலையில் உத்தர பிரேதச மாநிலத்தில் போட்டியிட்டவர்களில் ஏராளமானவர்கள்‛டெபாசிட்' தொகையை இழந்துள்ள தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஒரு சட்டசபை தொகுதியில் பதிவாகும் மொத்த ஓட்டுக்களில் 6ல் ஒரு பங்கு ஓட்டுக்களை வேட்பாளர்கள் பெற வேண்டும். இல்லாவிட்டால் அவர் டெபாசிட் தொகையை இழப்பார். அந்த வகையில் உத்தர பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் 4,442 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் 3,522 வேட்பாளர்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர். இது 80 சதவீதமாகும்.

காங்கிரஸ் மோசம்
குறிப்பாக காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் தான் அதிகளவில் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர். அதன்படி மொத்தம் 399 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்ட நிலையில் 387 தொகுதிகளின் வேட்பாளர்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர். மேலும் மொத்தம் 2.4 சவீத ஓட்டுக்களை மட்டும் காங்கிரஸ் பெற்று பின்தங்கியுள்ளது.

பகுஜன் சமாஜ் எவ்வளவு
இதேபோல் 403 தொகுதிகளிலும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிட்டது. இதில் 290 வேட்பாளர்கள் டெபாசிட் தொகையை பறிகொடுத்துள்ளனர். பாஜக 376 தொகுதிகளில் போட்டியிட்டு தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருந்தாலும் கூட அந்த கட்சியின் 3 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர். அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி 347 தொகுதிகளில் வேட்பாளர்களை அறிவித்தது. இதில் 6 பேர் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர்.

ஆச்சரியமளிக்கும் சிறுகட்சிகள்
மேலும் பாஜகவுடன் கூட்டணியில் இருந்த சிறுகட்சிகள் ஆச்சரியமளிக்கின்றன. பாஜகவின் கூட்டணியில் இடம்பிடித்திருந்த அப்னாதளம்(சோனிலால்), நிசாத் கட்சிகள் ஒரு தொகுதியில் கூட டெபாசிட் தொகையை இழக்கவில்லை. இந்த 2 கட்சிகளும் சேர்த்து மொத்தம் 27 தொகுதிகளில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. அதோடு சமாஜ்வாதி கட்சியின் கூட்டணியில் இருந்த எஸ்பிஎஸ்பி, அப்னாதளம்(காமிரவாதி) கட்சிகளுக்கு மொத்தம் 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் 8 பேர் டெபாசிட் இழந்துள்ளனர். இன்னொரு கூட்டணி கட்சியான ராஷ்ட்ரீய லோக்தளம் ( ஆர்எல்டி) கட்சி 33 இடங்களில் களமிறங்கி 3 தொகுதிகளில் டெபாசிட் தொகையை இழந்துள்ளது.

ஆர்எல்டியை விட காங்., குறைவு
இந்த தேர்தலில் மேலும் கவனிக்க கூடிய விஷயம் ஒன்று உள்ளது. அதாவது, சமாஜ்வாதி கட்சியின் கூட்டணியில் இருந்த ஆர்எல்டி கட்சி மொத்தம் 33 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில் அந்த வேட்பாளர்கள் 2.9 சதவீத ஓட்டுக்களை பெற்றிருந்தனர். ஆனால் காங்கிரஸ் கட்சி 399 தொகுதிகளில் வெறும் 2.4 சதவீத ஓட்டுக்களை மட்டுமே பெற்று பின்தங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications