லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஞானவாபி மசூதியில் இருப்பது சிவலிங்கம் அல்ல.. செயற்கை நீரூற்று.. அசாதுதீன் ஓவைசி பேட்டி

Google Oneindia Tamil News

லக்னோ: ‛‛உத்தர பிரதேசம் மாநிலம் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி வளாகத்தில் இருப்பது சிவலிங்கம் அல்ல. அது செயற்கை நீறுற்று. இது அனைத்து மசூதிகளில் இருக்கும்'' என ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி கூறியுள்ளார்.

Recommended Video

    Shivling Found In Gyanwapi Mosque | Gyanvapi மசூதி இந்து கோயிலா? | Oneindia Tamil

    உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இதன் அருகே ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. இந்த மசூதி பகுதியில் பழமையான இந்து கோவில் சிங்கார கவுரி உள்ளது.

     4-வது ரெய்டு...2017 முதல் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை துரத்தும் சிபிஐ, ஐடி, அமலாக்கப் பிரிவு! 4-வது ரெய்டு...2017 முதல் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை துரத்தும் சிபிஐ, ஐடி, அமலாக்கப் பிரிவு!

    இந்த கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் கடந்த மாதம் இந்து பெண்கள் 5 பேர் சார்பில் வாரணாசி நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது.

    வாரணாசி நீதிமன்றத்தில் விசாரணை

    வாரணாசி நீதிமன்றத்தில் விசாரணை

    அந்த மனுவில், ‛‛ஞானவாபி மசூதி வளாகத்தின் மேற்கு சுவர் அருகே இந்து கோவில் உள்ளது. இது ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே திறக்கப்படுகிறது. இந்த கோவிலில் ஆண்டு முழுவதும் பிரார்த்தனை செய்ய அனுமதிக்க வேண்டும். இதுதவிர கோவில் வளாகத்தில் உள்ள பிற விக்கிரகங்கள் மற்றும் கண்ணுக்கு தெரியாத தெய்வங்களை வழிபட அனுமதிக்க வேண்டும்'' என கூறப்பட்டு இருந்தது. இந்த மனுவை வாரணாசி நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்று கொண்டது.

    வீடியோவுடன் ஆய்வு

    வீடியோவுடன் ஆய்வு

    மேலும் ஞானவாபி மசூதியில் ஆய்வு மேற்கொள்ளவும், ஆய்வை வீடியோ பதிவு செய்து மே 10க்குள் சமர்பிக்க உத்தரவிட்டது. இந்த பணி கடந்த வாரம் துவங்கியது. மசூதிக்குள் வீடியோ பதிவு செய்ய எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நடந்த வழக்கு விசாரணையில் வீடியோ ஆதாரங்களை மே 17 க்குள் சமர்பிக்க உத்தரவிட்டுள்ளார். இதனால் தொடர்ந்து ஆய்வு பணி நடந்து வருகிறது.

    சிவலிங்கம் கண்டுபிடிப்பா?

    சிவலிங்கம் கண்டுபிடிப்பா?

    இந்நிலையில் தான் ஆய்வில் ஞானவாபி மசூதி வளாகத்தில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து வாரணாசி நீதிமன்றம் சிவலிங்கம் கண்டுப்பிடிக்கப்பட்ட இடத்துக்கு சீல் வைக்க உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அங்கு ஆட்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

    விவாத பொருளான விவகாரம்

    விவாத பொருளான விவகாரம்

    மசூதிக்குள் சிவலிங்கம் கண்டுடிக்கப்பட்டதாக கூறும் சம்பவம் தேசிய அளவில் கவனம் ஈர்த்து விவாதப்பொருளாகி உள்ளது. இதுபற்றி பல்வேறுதரப்பினர் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்துத்துவ அமைப்பினர் ஆய்வுக்கு வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில் முஸ்லிம் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் அதுதொடர்பாக முஸ்லிம் அமைப்பினர் விளக்கம் அளித்து வருகின்றனர். இதற்கிடையே இதுதொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

    அசாதுதீன் ஓவைசி

    அசாதுதீன் ஓவைசி

    இந்நிலையில் ஞானவாபி மசூதிக்குள் சிவலிங்கம் அல்ல என்று எஐஎம்ஐஎம் கட்சி தலைவரும், ஐதராபாத் எம்பியுமான அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது: ஞானவாபி மசூதிக்குள் இருப்பது செயற்கை நீரூற்று அமைப்பு. அது சிவலிங்கம் அல்ல. அனைத்து மசூதியிலும் செயற்கை நீரூற்று அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தால் அமைக்கப்பட்டுள்ள கமிஷன் ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறாதது ஏன்?. அந்த இடத்திற்கு சீல் வைப்பது 1991 சட்டத்தின்படி விதிமீறலாகும்' என்றார்.

    English summary
    AIMIM President Asaduddin owaisi Claimes in Uttar Pradesh its a fountain that has been found in the Gyanvapi Mosque Complex survey and not a shivling.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X