லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பரோலா.. வேண்டவே வேண்டாம்.. "வெளியில்" இருப்பதை விட "உள்ளே" இருப்பதுதான் சேஃப்.. சிறை கைதிகள்

Google Oneindia Tamil News

லக்னோ: வெளியுலகத்தை விட சிறைச்சாலையே பாதுகாப்பானது என தனக்கு கிடைத்த பரோலை வேண்டாம் என மறுத்துவிட்டார் உத்தரப்பிரதேசத்தில் உள்ள கைதி ஒருவர்.

இந்தியாவில் கொரோனாவின் 2ஆவது அலை தீவிரமாக உள்ளது. இந்தியாவில் 100-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கொரோனா தொற்று தலைவிரித்தாடுவதால் மக்கள் கொரோனா தொற்று குறைந்த மாவட்டங்களில் உள்ள உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளார்கள்.

இந்த நிலையில் கொரோனா தொற்றை காட்டிலும் சிறையே எவ்வளவோ பாதுகாப்பானது என சிறைக் கைதி ஒருவர் தனக்கு கிடைத்த பரோலை வேண்டாம் என கூறிய சம்பவம் நகைப்பை ஏற்படுத்துகிறது.

ஐநாவே வியந்தது.. 1590 ஏக்கரில் ஆசியாவிலேயே பெரிய சோலார் மின்நிலையம்.. திறந்து வைத்த பிரதமர் மோடி! ஐநாவே வியந்தது.. 1590 ஏக்கரில் ஆசியாவிலேயே பெரிய சோலார் மின்நிலையம்.. திறந்து வைத்த பிரதமர் மோடி!

கைதி

கைதி

சிறைச் சாலைகளிலும் அதிக கைதிகளால் கொரோனா தொற்று பரவுவதை தடுக்க கைதிகளை பரோலில் அனுப்பி சிறையில் கூட்ட நெரிசலை குறைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த வகையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மீரட் சிறையில் விசாரணைக்கு வந்த 326 கைதிகள் பரோலில் அனுப்பப்பட்டுள்ளனர்.

பரோலில் அனுப்ப முடிவு

பரோலில் அனுப்ப முடிவு

மேலும் 43 தண்டனை கைதிகளையும் பரோலில் அனுப்ப உ.பி. அரசு உத்தரவிட்டது. இதன்படி இவர்கள் 8 வாரங்கள், அதாவது 2 மாதங்களுக்கு பரோலில் வீட்டுக்கு அனுப்பப்பட இருந்தனர். இந்த நிலையில் இதற்கான ஆர்டரை கைதிகளுக்கு சிறைத் துறையினர் வழங்கினர்.

சிறைக் கைதி

சிறைக் கைதி

அப்போது ஆஷிஷ் குமார் என்ற சிறைக் கைதி மட்டும் பரோலில் செல்ல மறுத்துவிட்டார். காரணம் கேட்டால் கொரோனா காலத்தில் வெளியுலகை விட சிறைச்சாலையே பாதுகாப்பானது என கூறியுள்ளாராம். இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு காசியாபாத்தில் அவரது மனைவியை தற்கொலைக்கு தூண்டியதால் கைது செய்யப்பட்டு 6 ஆண்டுகள் தண்டனையில் உள்ளார்.

21 கைதிகள்

21 கைதிகள்

இவரை போல் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள 9 சிறைகளில் உள்ள 21 சிறை கைதிகள் பரோலை வேண்டாம் என சொல்லிவிட்டார்கள். இவர்களுக்கு 90 நாட்கள் பரோல் கிடைத்தால் அவர்களது தண்டனை காலத்தில் இந்த நாட்கள் சேர்க்கப்படும் என்பதாலும் பரோலை மறுக்கிறார்கள்.

English summary
Uttar Pradesh convict refuses parole and he says prison is safer than outside as pandemic rises cases.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X