159 வேட்பாளர்களில் 20 யாதவர்கள்.. 11 பிராமணர்கள்.. உத்தரப்பிரதேசத்தில் அகிலேஷ் யாதவின் பக்கா மூவ்!
லக்னோ: உத்தரப்பிரதேச தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஜாதி ரீதியாக வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளது. அடுத்ததடுத்த வேட்பாளர்களும் ஜாதி ரீதியிலேயெ அறிவிக்கப்படுவார்கள் என்று தெரியவந்துள்ளது.
பஞ்சாப், உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.
உத்தரப்பிரதேச தேர்தலைப் பொருத்தவரை ஆளும் பாஜக மற்றும் சமாஜ்வாதி கட்சிக்குத்தான் பலத்த போட்டி என்று முடிவாகிவிட்டது. கருத்துக்கணிப்புகள் ஆளும் பாஜக தான் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளன. இதனால் சமாஜ்வாதி கட்சி அப்செட்டில் இருக்கிறது.

உத்தரப்பிரதேசம்
உத்தரப்பிரதேசத்தில் முதல் கட்டத்தேர்தல் பிப்ரவரி 10ம் தேதி நடக்கிறது. இதையடுத்து, வேட்பாளர் பட்டியலை கட்சிகள் வெளியிட்டு வருகின்றன. சமாஜ்வாதி கட்சி 159 பேர் கொண்ட முதல் வேட்பாளர்கள் பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில், மெயின்புரி மாவட்டத்தில் உள்ள கர்கால் தொகுதியில் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் போட்டியிடுகிறார். அகிலேஷ் வேட்பாளராக சந்திக்கும் முதல் தேர்தல் இது.

சிவ்பால் யாதவ்
குடும்ப உறுப்பினர்களுக்கு மீண்டும் சீட் தரமாட்டேன் என்று முடிவெடுத்த அகிலேஷ் அதை மாற்றி, அவரது சித்தப்பா சிவ்பால் யாதவுக்கு சீட் கொடுத்திருக்கிறார். இடவா மாவட்டத்தின் ஜஸ்வந்த்நகர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் சிவ்பால் யாதவ். சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் அசம்கான் ராம்பூர், கடந்த சில நாட்களுக்கு முன்பு சமாஜ்வாடியில் மீண்டும் இணைந்த முன்னாள் அமைச்சர் தரம் சிங் சாய்னி ஷகரன்பூர் மாவட்டத்தில் உள்ள நாக்கூர் தொகுதிகளில் போட்டியிட உள்ளனர்.

ஓ.பி.சி
உத்தரப்பிரதேசத்தில் கடந்த முறை ஆட்சியைத் தவறவிட்ட அகிலேஷ் யாதவ், மீண்டும் ஆட்சிக்கு வர பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். கடந்த முறை செய்த தவறுகளை திருத்திவருகிறார். அதன் அடிப்படையில் தான் ஒ.பி.சி தலைவர்களை கட்சிக்குள் இழுத்தார். அதைத்தொடர்ந்து கூட்டணி அமைக்கப்பட்டது. தற்போது ஜாதி ரீதியில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

வேட்பாளர்கள்
முதற்கட்டமாக 191 இடங்களுக்கு சமாஜ்வாதி கட்சி மற்றும் ராஷ்ட்ரிய லோக் தள் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதில், 159 பேர் சமாஜ்வாதி கட்சியினர். அதில் இதிர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் 66 பேர். அதில் யாதவர்கள் 20 பேர், யாதவர்கள் தவிர்த்து பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 46 பேர். 32 தலித் வேட்பாளர்கள், 31 முஸ்லிம், வைஷ்யா பிரிவினர் 11 பேர், பிராமணர்கள் 11, தாக்கூர் 5, சீக்கியர்கள் 3 பேர், பிற வகுப்பினர் 2 பேர் என ஒவ்வொரு தொகுதிக்கும் பார்த்து பார்த்து வேட்பாளர் பட்டியல் ஜாதி ரீதியாக தயாரிக்கப்பட்டிருக்கிறது.

அகிலேஷ் யாதவ்
இந்த முறை வேட்பாளர்கள இறுதி செய்திருப்பதி அகிலேஷ் யாதவ். பிராமணர்களுக்கு குறைந்த எண்ணிக்கையில் சீட் கொடுக்கப்பட்டிருப்பதற்கும் அதுவே காரணம் என சொல்கிறார்கள். யாதவ் கட்சி என்ற நினைப்பை மாற்றவே குறைந்த அளவில் யாதவர்களுக்கு சீட் கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், பாஜகவில் இருந்துவந்த அமைச்சர் சுவாமி பிரசாத் மவுரியா, அவரது மகன் உத்க்ரீஷுக்கு சீட் எதிர்பார்த்தார். வெளியான வேட்பாளர் பட்டியலில் அவர் மகன் பெயர் இடம்பெறவில்லை.
Recommended Video

ஆர்.எல்.டி
ராஷ்ட்ரிய லோக் தள் கட்சியின் 32 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். சமாஜ்வாதி கட்சியின் 5 வேட்பாளர்கள் ராஷ்ட்ரிய லோக் தள் கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவார்கள் என்று அக்கட்சியின் தலைவர் ஜெயந்த் சவுத்ரி அறிவித்துள்ளார். ''இந்த தேர்தல் கூட்டணியில் அனைத்து தொண்டர்களும் ஒன்றிணைந்து முழு ஈடுபாட்டுடன் பணியாற்றுவார்கள் என்று நான் நம்புகிறேன். உங்கள் அரசாங்கம் அமைவதற்கு ஒவ்வொரு எம்.எல்.ஏ.வின் வெற்றியும் முக்கியமானது'' என்று ஜெயந்த் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications