உ.பி. அரியணையை தீர்மானித்த ஜாதி அரசியல் இனி இருக்காது.. அடித்து சொல்லும் அரசியல் விமர்சகர்கள்
லக்னோ: உத்தரப்பிரதேச அரியணையை இதுவரை தீர்மானித்துவந்த ஜாதி அடையாளம் இனி மாறும் என பெரும்பாலான அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தில் விழும் ஓவ்வொரு வாக்கும் ஜாதியை அடிப்படையாக வைத்தே போடப்படுகிறது. அது வேட்பாளரின் ஜாதியொ அல்லது கட்சியின் ஜாதியோ, எது முதன்மையானதோ அதை தேர்ந்தெடுத்தே உத்தரப்பிரதேச மக்கள் வாக்களிக்கிறார்கள் என விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள 403 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகி, பாஜக பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என தெரியவந்துள்ளது.

ஜாதிகள்
உத்தரப்பிரதேசத்தில் விழும் ஒவ்வொரு வாக்கும் ஜாதி அடிப்படையிலானது. 90% யாதவர்கள் சமாஜ்வாதி கட்சிக்கு வாக்களிப்பார்கள். 90% பிராமணர்கள் பாஜகவுக்கு வாக்களிப்பார்கள். 90% தலித் வாக்குகள் பகுஜன் சமாஜ் கட்சிக்கு செல்லும். இதுநாள் வரை இப்படித்தான் வாக்குகள் சென்றுள்ளது. எல்லா கருத்து கணிப்பு முடிவுகளும் இதை உறுதி செய்திருக்கின்றன. ஆனால் மேல் தட்டு மக்கள் வேறு சில காரணங்களுக்காக அதை மாற்றியுள்ளனர்.

வாக்குகள்
ஜாதி அடிப்படையில் 90% மக்கள் இதுவரை வாக்களித்தார்கள். ஆனால் இம்முறை அது 60% மாறி இருக்கிறது. வேலைவாய்ப்பின்மை, விலை ஏற்றம், சட்டம் ஒழுங்கு பிரச்சனை என பல பிரச்சனைகளால் மேல்தட்டு மக்கள் இம்முறை கட்சி மாறி வாக்களித்தார்கள் என தெரியவந்துள்ளது. இதற்கு முன் நடந்த தேர்தல்களில் ஜாதி பெரிய பங்காற்றி இருக்கிறதாம். ஆனால் இந்த தேர்தலில் அப்படி இல்லை.

கட்சிகள்
உத்தரப்பிரதேசத்தில் இதுவரை அனைத்து கட்சிகளும் ஜாதி ரீதியில் தான் வேட்பாளர்களை நிறுத்தி இருக்கிறது. இந்த தேர்தலிலும் அப்படித்தான், இதற்காகவே ஜாதி தலைவர்கள் வேறு கட்சிகளுக்கு படை எடுத்தனர். ஆனால் அது இந்த தேர்தலில் எடுபடுமா என தெரியவில்லை. உபியில் முஸ்லீம் ஓட்டுகள் அதிகமிருக்கும் இடத்தில் பாஜகவுக்கு ஓட்டு விழாது. சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஓட்டு விழும்.

மாற்றம்
அதுவே இந்த முறை முஸ்லிம் ஓட்டுகள் இருக்கும் இடத்தில் பாஜக நன்றாக வாக்கு வாங்கும். அதுவே சமாஜ்வாதி வாக்கு வாங்காது. மாநிலம் முழுவதும் இதுபோன்ற மாற்றங்கள் ஆங்காங்கே நடந்துள்ளது. சில முஸ்லிம் இடங்களில் பகுஜன் சமாஜ் கட்சியைவிடவும் பாஜக அதிக வாக்கு வாங்கும். இதுதான் ஜாதி அடிப்படையில் இனி அணுக முடியாது என்பதற்கு உதாரணம்.

வாக்கு வங்கி
இதனால் தங்கள் கட்சிக்கான வாக்கு வங்கி என நினைத்த அனைத்து கட்சிகளும், பல மாற்றங்களை எதிர்கொள்ள வேண்டும். இதனால் 4-5% வாக்குகள் அதிகரிக்கும் அல்லது குறையும். நகரம், கிராமம், யாதவ், தலித், பிராமணர்கள் என எல்லா இடத்திலும் இதுபோன்ற மாற்றங்கள் நடக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் ஜாதியைத் தாண்டி வாக்களிக்கும்முறை அதிகரித்து வருகிறது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications