லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

யோகிக்கு வெற்றித் திலகமிட்ட முலாயம்சிங் பேத்தி - பாஜக வெற்றியைக் கொண்டாடிய‌ யாதவ் குடும்பம்!

By
Google Oneindia Tamil News

லக்னோ: நடந்து முடிந்த உத்தரப்பிரதேச‌ தேர்தலில் பாஜக மிகப்பெரிய வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்கிறது. பாஜக தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்றதற்கு முலாயம் சிங்கின் பேத்தி யோகி ஆதித்யநாத்துக்கு வெற்றித் திலகமிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச தேர்தலை மிக முக்கியமாக இந்தியாவே உற்று நோக்கிவருகிறது. அடுத்து நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான 'செமி பைனல்' ஆக கட்சிகள் கருதியது. உத்தரப்பிரதேச தேர்தலின் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது.

பஞ்சாபில் அபார வெற்றி பெற்ற ஆம் ஆத்மி 42% வாக்குகள் அள்ளியது - காங் 23% சிரோன்மணி 18% பாஜக 6% பஞ்சாபில் அபார வெற்றி பெற்ற ஆம் ஆத்மி 42% வாக்குகள் அள்ளியது - காங் 23% சிரோன்மணி 18% பாஜக 6%

எதிர்பார்த்ததுபோலவே, உத்தரப்பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கிறது. சமாஜ்வாதி கட்சி அதற்கு அடுத்த இடத்தில் இருக்கிறது. விவசாயிகள் போராட்டம், லக்கிம்பூர் சம்பவம் எல்லாம் பாஜகவுக்கு எதிராக பார்க்கப்பட்டது, ஆனாலும் பாஜக மிகப்பெரிய வெற்றியை பெற்றுவருகிறது.

உத்தரப்பிரதேசம்

உத்தரப்பிரதேசம்

உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக தேர்தல் நடந்தது. இந்த தேர்தலை பாஜக, சமாஜ்வாதி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் தனித்து தேர்தலை சந்தித்தது. இந்தத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வருகின்றன. இதில் பாஜக 274 இடத்திலும், சமாஜ்வாதி 124 இடத்திலும், காங்கிரஸ் 2 இடத்திலும், பகுஜன் சமாஜ் 1 இடத்திலும் முன்னிலையில் இருக்கின்றன.

யோகி ஆதித்யநாத்

யோகி ஆதித்யநாத்

இந்த தேர்தலில் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார். உத்தரப்பிரதேசத்தில் ஐந்து ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்து, இரண்டாவது முறையாக பாஜக ஆட்சியைப் பிடிக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் இதுபோன்ற நிகழ்வு தற்போதுதான் நடந்துள்ளது. இதற்கு இந்தியா முழுவதும் உத்தரப்பிரதேச பாஜகவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

குடும்பக் கட்சி

குடும்பக் கட்சி

சமாஜ்வாதி கட்சியை குடும்பக் கட்சி என்று தொடர்ந்து குற்றம் சாட்டியது பாஜக. அதனால் தன்னுடைய குடும்ப உறவுகளுக்கு சீட் கொடுப்பதை குறைத்தார். இதையடுத்து, முலாயம்சிங்கின் மருமகள் அபர்ணா யாதவுக்கு சமாஜ்வாதியில் போட்டியிட சீட் மறுக்கப்பட்டது. அகிலேஷ் யாதவின் தம்பி ப்ரதீக் யாதவ்வின் மனைவி தான் அபர்ணா யாதவ். சீட் மறுக்கப்பட்டதால் கடந்த ஜனவரி மாதம் சமாஜ்வாதியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அங்கும் அவருக்கு போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

பாஜக‌

பாஜக‌

ஐந்து மாநில தேர்தலில் பாஜக வெற்றி பெற்றிருக்கும் நிலையில், இந்து, முஸ்லிம், சீக்கியர், கிறிஸ்தவர் என அனைத்து தரப்பிலும் பா.ஜ.க-வினர் உள்ளனர் என்ற பதில் இந்த தேர்தல் முடிவில் கிடைத்திருக்கிறது. அனைத்து மாநிலங்களிலும் நம்பிக்கையின் சின்னமாக தாமரை உருவெடுத்திருக்கிறது. சாதி அரசியல் செய்தவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது' என செய்தியாளர் சந்திப்பில் கூறினார் அபர்ணா யாதவ்.

திலகம்

திலகம்

பாஜக உத்தரப்பிரதேசத்தில் வெற்றி பெற்றதையடுத்து, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து வாழ்த்து கூறினார் அபர்ணா யாதவ். அப்போது அபர்ணா யாதவின் மகள், யோகி ஆதித்யநாத்துக்கு ஆரத்தி எடுத்து வெற்றித் திலகமிட்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. யோகி ஆதித்யாத்துக்கு திலகமிட்ட யாதவ் குடும்பம் என்று சமூக வலைதளம் கூறிவருகிறது.

English summary
The BJP has won a landslide victory in the recent Uttar Pradesh elections and is back in power. Mulayam Singh's granddaughter Yogi Adityanath has congratulated the BJP on its second consecutive victory.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X