மத சுற்றுலா மையமாக மாறும் வாஜ்பாயின் கிராமம்! உத்தரப் பிரதேச அரசு எடுத்த சூப்பர் நடவடிக்கை

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் உள்ள, முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் சொந்த கிராமத்தை முக்கிய மத சுற்றுலா மையமாக மேம்படுத்த உத்தரப் பிரதேச அரசு திட்டமிட்டுள்ளது.

வாஜ்பாயின் பிறந்த நாள் வரும் 25ம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் உத்தர் பிரதேசத்திற்கு ரூ.100 கோடி மதிப்பிலான திட்டங்களை யோகி ஆதித்யநாத் தொடங்கி வைக்க இருக்கிறார். இதில் ஹெலிபேட் அமைக்கும் திட்டம் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஆக்ரா மற்றும் மதுராவுக்கான ஹெலிபோர்ட் சேவைகளை மேம்படுத்த இந்த திட்டம் உதவும். இந்நிலையில் இது குறித்து பேசிய அம்மாநில சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் ஜெய்வீர் சிங், முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் சொந்த கிராமத்தை முக்கிய மத சுற்றுலா மையமாக மேம்படுத்த உத்தரப் பிரதேச அரசு திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

UP Governments decision to convert former PM Vajpayees village as a religious tourism center

"ஆக்ரா மாவட்டத்தில் உள்ள படேஷ்வர் கிராமத்தில்தான் வாஜ்பாய் பிறந்தார். படேஷ்வரில் 101 பழமையான மற்றும் புகழ்பெற்ற கோவில்கள் உள்ளன. இந்த கோயில்களை மேம்படுத்துவதன் மூலம் இக்கிராமத்தை முக்கிய மத சுற்றுலா தலமாக மாற்ற முடியும். மேலும், இந்த கிராமத்தில் வாஜ்பாய் கலாச்சார வளாக கட்டிடம் அமைய இருக்கிறது. இதில், வாஜ்பாயின் முழு உருவ சிலையும் அமைக்கப்பட்டிருக்கும். இதனை வரும் 25ம் தேதி யோகி ஆதித்யநாத் திறந்து வைக்கிறார்.

மாநிலத்தின் வளர்ச்சிதான் தற்போதைய அரசுக்கு பிரதானம். எனவே வளர்ச்சியை மேம்படுத்த தீவிர முயற்சிகளை யோகி ஆதித்யநாத் மேற்கொண்டு வருகிறார். கடந்த 2017ம் ஆண்டுக்கு முன்னர் உ.பியின் உள் கட்டமைப்பு மிகவும் மோசமானதாக இருந்தது. ஆனால், தற்போது அனைத்தும் மாற்றமடைந்திருக்கிறது" என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+