லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மாஃபியாக்களை ஓடவிட்டவர்.. - உபி. பிரசாரத்தில் யோகி ஆதித்யநாத்தைப் பாராட்டிய‌ அமித்ஷா!

By
Google Oneindia Tamil News

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் இருந்து மாஃபியாக்களை யோகி ஆதித்யநாத் ஒழித்து விட்டதாக அமித்ஷா தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் பேரேலியில் நடந்த பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரசாரம் செய்தார். அப்போது போலீஸ் சைரனைக் கேட்டாலே, உத்தரப்பிரதேசத்தில் உள்ள மாபியா கும்பல் ஓடுகிறது என்று அமித்ஷா தெரிவித்தார்.

உத்தரப்பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதாகவும், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சிறப்பாக ஆட்சி செய்வதாகவும் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

உ.பி. முதல்கட்ட தேர்தலில் ஒரு விஷயத்தை கவனித்தீர்களா.. ஹேப்பியாகும் யோகி ஆதித்யநாத் உ.பி. முதல்கட்ட தேர்தலில் ஒரு விஷயத்தை கவனித்தீர்களா.. ஹேப்பியாகும் யோகி ஆதித்யநாத்

உத்தரப்பிரதேசம்

உத்தரப்பிரதேசம்

உத்தரப்பிரதேசத்தில் உள்ள 403 தொகுதிகளுக்கும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. நேற்று முதற்கட்ட தேர்தல் நடந்தது. உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியில் இருக்கும் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வர தீவிர பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது. இதற்காக உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரப்பிரதேசத்திலேயே தங்கி பிரசாரம் செய்து வருகிறார்.

அமித்ஷா

அமித்ஷா

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து, அமித்ஷா பாஜகவை ஆதரித்து பிரசாரம் செய்தார். முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூரில் போட்டியிடுக்கிறார். அவர் மனுத்தாக்கல் செய்தபோது, அமித்ஷாவும் உடன் சென்று அவருக்காக பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறார்.

பிரசாரம்

பிரசாரம்

முதற்கட்ட தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், இன்று பேரேலியில் பிரசாரத்தில் ஈடுபட்டார் அமித்ஷா. அப்போது, ''உத்தரப்பிரதேசத்தில் இருந்து மாஃபியாக்களை முதல்வர் யோகி விரட்டிவிட்டார். ரோஹில்காண்ட் மற்றும் மேற்கு உத்தரப்பிரதேசத்தில் நிறைய மாஃபியா கும்பல் இருந்தது. இப்போது அந்த கும்பல் காணாமல் போய்விட்டது. போலீஸ் சைரனைப் பார்த்தாலே மாஃபியா கும்பல் அலறி அடித்து ஓடுகிறது. மாநிலத்திவிட்டே மாஃபியா கும்பல் ஓடிப்போய்விட்டது.

மாஃபியா

மாஃபியா

சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் தான் இந்த மாஃபியாக்களுக்கு ஜாதி ரீதியாக பாதுகாப்பு கொடுத்து வந்தது. ஜாதிகளால் பிளவு பட்டிருந்தது. ஆனால் பாஜக ஒருபோதும் ஜாதிகளுக்கான கட்சி கிடையாது. பாஜக பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின்படி நடக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் முன்னர் மூன்று பெயர்கள் அதிகம் கேட்டுக்கொண்டிருந்து. அஸாம் கான், அதீக் அகமது, முக்தர் அன்சாரி. இப்போது இவர்களெல்லாம் எங்கே. சிறையில் இருக்க வேண்டியவர்கள், அங்கேயே இருப்பார்கள்'' என்று தெரிவித்துள்ளார்.

English summary
Uttar Pradesh Election: Union Home Minister Amit Shah said, "Adityanath has finished mafia from western UP and Rohilkhand."
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X