2 பேருடன் உல்லாசம் அனுபவித்த மனைவி! ஹோட்டல் ரூமுக்கே சென்ற கணவரால் பரபரப்பு.. கடைசியில் சம்பவம்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தர பிரதேசத்தில் ஹோட்டல் அறையில் 2 பேருடன் மனைவி உல்லாசம் அனுபவித்ததை கணவர் நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் டாக்டர். திருமணம் ஆனவர். இவரது மனைவியும் அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார். திருமணம் ஆன புதிதில் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.

Uttar Pradesh doctor found his wife with 2 men in hotel room

ஆனால் திடீரென்று அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டது. நாள்தோறும் இருவர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் பிரிந்து வாழ தொடங்கினர். கடந்த ஓராண்டாக அவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் தான் பிரிந்து வாழும் மனைவிக்கு வேறு நபர்களுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக கணவருக்கு சந்தேகம் எழுந்தது. மேலும் மனைவியை அவர் கண்காணிக்க தொடங்கினர். இந்நிலையில் தான் நேற்று முன்தினம் இரவு உத்தர பிரதேச மாநிலம் கஸ்காஞ்ச் பகுதியில் உள்ள ஓட்டல் அறையில் அவரது மனைவி தங்கியிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து கணவர் அந்த ஹோட்டல் அறைக்கு சென்றார். அப்போது அவர் கண்ட காட்சி அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதாவது அவரது மனைவி 2 நபர்களுடன் உல்லாசமாக இருந்தது தெரியவந்தது. இதை பார்த்து ஷாக்காகிப்போன கணவர் உடனடியாக அவரது மனைவி மற்றும் அவருடன் இருந்த பேரையும் திட்டி ஆக்ரோஷமாக தாக்கினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து ஹோட்டல் ஊழியர்கள் வந்து அவர்களின் சண்டையை நிறுத்தி அங்கிருந்து வெளியேற்றினர். இதுதொடர்பாக கணவர் சார்பில் அவரது மனைவி மற்றும் அவருடன் கள்ளத்தொடர்பில் இருந்த 2 பேர் மீதும் போலீசில் புகார் செய்தார். இந்த புகாரை தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் புகார் அளித்த கணவரின் மனைவியுடன் உல்லாசம் அனுபவித்தவர்களில் ஒருவர் காசியாபாத்தை சேர்ந்தவர் என்பதும் இன்னொருவர் புலன்சார் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. 3 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே தான் கணவர் மீது அவரது மனைவி சார்பில் எந்த புகாரும் இதுவரை அளிக்கவில்லை. இதனால் அவர்களை தாக்கியிருந்தாலும் கூட கணவர் மீது போலீசார் இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதற்கிடையே ஹோட்டலில் கணவர் தனது மனைவி மற்றும் அவருடன் இருந்த 2 பேரை தாக்கியது அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த வீடியோக்கள் தற்போது வெளியாகி வேகமாக பரவி வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+