இதுதான் முன்னோர் பூமியா! ராகுலை விட மோசமாக "ரிசல்ட்" தந்த பிரியங்கா! உபியில் காணாமல் போன காங்.!
லக்னோ: உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி மிக மோசமான தோல்வியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. அங்கு காங்கிரஸ் கட்சி கிட்டத்தட்ட காணாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
Recommended Video
உத்தர பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடந்த போது அதன் பொறுப்பாளர் பிரியங்கா காந்தி மிக உறுதியாக காங்கிரஸ் வெற்றிபெறும் என்று கூறி வந்தார். நாங்கள் கண்டிப்பாக கடுமையான போட்டியை கொடுப்போம்.
இது என்னுடைய முன்னோர்களின் பூமி. நான் இந்த மண்ணை விட்டு போக மாட்டேன். இந்த தேர்தலில் உத்தர பிரதேச மக்கள் காங்கிரசுக்கு ஆதரவு அளிப்பார்கள் என்று பிரியங்கா காந்தி கூறி வந்தார்.அங்கு பிரியங்காவை முன்னிறுத்தி காங்கிரஸ் தேர்தலை சந்தித்தது.

பிரியங்கா காந்தி
கடந்த முறை சட்டசபை தேர்தலில் உத்தர பிரதேசத்தில் யாரை முன்னிறுத்துவது என்று தெரியாமல் காங்கிரஸ் கடைசிவரை புலம்பி, கடைசியில் படுதோல்வியை சந்தித்தது. இந்த நிலையில்தான் இந்த முறை உத்தர பிரதேசத்தில் பிரியங்கா காந்தியை காங்கிரஸ் முன்னிறுத்தியது. ஏற்கனவே லோக்சபா தேர்தலின் போது உத்தர பிரதேசத்தில் பிரியங்கா காந்தி காங்கிரசின் உபி பொதுச்செயலாளராக இருந்தார்.

மோசமான சரிவு
ஆனால் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் வெறும் 1 இடத்தை மட்டுமே வென்றது. ராகுல் காந்தியே அமேதி தொகுதியில் தோல்வி அடையும் அளவிற்குத்தான் உத்தர பிரதேசத்தில் பிரியங்கா காந்தியின் திட்டங்கள், பிளானிங் இருந்தது. இந்த நிலையில்தான் தற்போது சட்டசபை தேர்தலிலாவது காங்கிரஸ் இங்கு குறிப்பிடத்தகுந்த இடங்களை வெல்லுமா என்று கேள்விகள் நிலவி வந்தன. உத்தர பிரதேசத்தில் பிரியங்கா காந்தி குறைந்த அளவிலாவது தாக்கத்தை ஏற்படுத்துவாரா என்று கேள்வி நிலவி வந்தது.

பின்னடைவு
ஆனால் உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கடுமையான பின்னடைவை சந்தித்துள்ளது. அங்கு காங்கிரஸ் 2-4 இடங்களை பெறுவதற்கு கூட திணறி வருகிறது. ராகுல் காந்தியை விட மோசமான ரிசல்ட்டை உத்தர பிரதேசத்தில் பிரியங்கா காந்தி கொடுக்கும் நிலைக்கு சென்று இருக்கிறார். அங்கு காங்கிரஸ் முன்னிலை வகிக்கும் 4 இடங்களிலும் பெரிய அளவில் முன்னிலை வகிக்கவில்லை. குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலேயே முன்னிலை வகிக்கிறது.

காணாமல் போகிறதா
கடந்த சட்டசபை தேர்தலில் உத்தர பிரதேசத்தில் பாஜக 303 இடங்களை வென்று ஆட்சியை பிடித்தது. அங்கு யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக கட்சி ஆட்சி புரிந்து வருகிறது. அங்கு பாஜக கூட்டணிக்கு அப்னா தளம் கட்சியின் 9 இடங்களையும் சேர்த்து 312 இடங்கள் உள்ளன. எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சிக்கு 49 இடங்கள் உள்ளன. பகுஜன் சமாஜ் பார்ட்டிக்கு 15 இடங்கள் உள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு 7 இடங்கள் உள்ளன. இந்த முறை அந்த 7 இடங்களை கூட காங்கிரஸ் வெல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி மிக மோசமான தோல்வியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. அங்கு காங்கிரஸ் கட்சி கிட்டத்தட்ட காணாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்டாயம்
இன்னொரு பக்கம் பஞ்சாப், உத்தரகாண்டிலும் காங்கிரஸ் தோல்வியை நோக்கி சென்று இருக்கிறது. தேசிய அளவில் பெரிய கட்சியாக இருந்த காங்கிரஸ் இப்போது வரலாற்றில் இல்லாத அளவிற்கு தோல்வியை நோக்கி சென்று இருக்கிறது. காங்கிரஸ் இப்போது உடனடியாக கட்சியில் பல்வேறு மாற்றங்களை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பல்வேறு கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் அக்கட்சி உள்ளது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications