பெண்களுக்கு எதிரான குற்றம், போலி என்கவுண்டர்.. உபி. எதில் முதலிடம்.. பட்டியலிடும் அகிலேஷ் யாதவ்
லக்னோ: பெண்களுக்கு எதிரான குற்றம், போலி என்கவுண்டர்கள் இதிலெல்லாம் உத்தர பிரதேசம் முதலிடத்தில் இருப்பதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பட்டியலிட்டுத் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள 403 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், உத்தரப்பிரதேசம் நாட்டிலேயே சிறப்பாக விளங்குவதாக பிரதமர் மோடியு, உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தொடர்ந்து பிரசாரம் செய்து வருகிறார்கள்.
ஆனால், பிரதமர் சொல்வது உண்மையில்லை என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் புள்ளிவிபரங்களுடன் உத்தரப்பிரதேசம் குறித்து பட்டியலிட்டுள்ளார்.

பாஜக
உத்தரப்பிரதேசத்தில் தற்போது குற்றங்கள் குறைந்திருக்கிறது. அங்கிருந்த குண்டர்கள் மற்றும் மாஃபியாக்கள் இப்போது சிறையில் இருக்கிறார்கள். இங்கிருந்த மாஃபியாக்களை சமாஜ்வாதி கட்சி காப்பாற்றி வருகிறது என பாஜக குற்றம் சாட்டியது. சமாஜ்வாதி வேட்பாளர்கள் பலர் குற்றப்பிண்ணனி கொண்டவர்கள் என பாஜக புகார் எழுப்பியது. பிரதமரும் உள்துறை அமைச்சரும் சமாஜ்வாதி கட்சியை குண்டர்கள் போல் சித்தரித்து பிரசாரம் செய்தனர்.

அகிலேஷ் யாதவ்
இந்நிலையில், பிரதமர் மற்றும் பாஜகவுக்கு சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் புள்ளிவிபரங்களுடன் பதிலளித்துள்ளார். பொய்களை முன்னிறுத்தியே பாஜக பிரசாரம் செய்கிறது. உத்தரப்பிரதேசம் பெண்களுக்கு எதிரான குற்றத்தில் முதலிடத்தில் இருக்கிறது, கஸ்டடி இறப்புகளில் உத்தரப்பிரதேசம் முதலிடத்தில் இருக்கிறது.

முதலிடம்
மனித உரிமை ஆணையத்திடம் இருந்து அதிக நோட்டீஸ் உத்தரப்பிரதேச அரசுக்குத்தான் வந்திருக்கிறது, போலி என்கவுண்டர்களில் உத்தரப்பிரதேசம் தான் முதலிடத்தில் இருக்கிறது. இது எல்லாம் தேசிய குற்ற ஆவணக்காப்பகம் சொல்லும் தகவல். எங்கேயாவது ஒரு ஐ.பி.எஸ் அதிகாரி காணாமல் போய் பார்த்திருக்கிறீர்களா, இதையெல்லாம் பாஜக செய்துவிட்டு சமாஜ்வாதி மீது குற்றம் சுமத்துகிறது பாஜக.

வன்முறை
ஹத்ராவில் நடந்ததை எப்படி மறக்க முடியும். ஹத்ரா பிரச்சனையை கொண்டுவந்தது இந்த போலீஸும் உபி அரசும் தான். லக்கிம்பூர் பிரச்சனை, லக்னோவில் ஆப்பிள் ஊழியருக்கு நடந்தது, கோரக்பூரில் தொழிலதிபர் அடித்துக்கொல்லப்பட்டது, இதெல்லாம் எனக்கும் மக்களுக்கும் நன்றாக நினைவிருக்கிறது. இதை செய்தது யார் என்று எல்லாருக்கும் தெரியும். யாரும் மறக்கமாட்டார்கள்.

உத்தரப்பிரதேசம்
உத்தரப்பிரதேசத்தில் உள்ள 403 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்ட தேர்தல் நடந்து முடிந்துவிட்டது, இரண்டாம் கட்ட தேர்தல் வரும் திங்கட்கிழமை நடைபெறுகிறது. உத்தரப்பிரதேசத்தில் பாஜக, சமாஜ்வாதி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சிகள் பெரிய கூட்டணிகள் இல்லாமல் மோதுவதால் நான்கு முனை போட்டி நிலவுகிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications