உத்தர பிரதேசத்தில் பயங்கரம்! மைனர் சிறுமியை பலாத்காரம் செய்த கணவர்! கொடூரத்தை வீடியோ எடுத்த மனைவி
லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் மைனர் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் தம்பதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்தியாவில் மைனர் சிறுமிகள் மீதான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் மைனர் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் சமீப காலமாகத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மைனர் குழந்தைகளைப் பாதுகாக்க போக்சோ உள்ளிட்ட பல சட்டங்கள் உள்ளன. இருப்பினும், இதுபோன்ற குற்றங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

உத்தரப் பிரதேசம்
அப்படி அதிர்ச்சி அளிக்கும் ஒரு சம்பவம் தான் உத்தரப் பிரதேசத்தில் நடந்து உள்ளது. உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் மைனர் சிறுமியின் குடும்பத்தினர் ஃபைஸ்கஞ்ச் பெஹ்டா காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தனர். அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகப் புகாரில் கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.

மைனர் சிறுமி
சிறுமி அளித்த புகாரில் பல அதிர்ச்சி தகவல்கள் தெரிய வந்துள்ளது. அதாவது கடந்த ஜூலை 12ஆம் தேதி, அதே கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் சிறுமியை வீட்டுக்கு அழைத்துள்ளார். சொந்த ஊரைச் சேர்ந்தவர் தான் என்பதால் சிறுமியும் சந்தேகப்படவில்லை. அந்த நபரின் வீட்டிற்குச் சென்றதும், வீட்டை உள்பக்கம் பூட்டிய இளைஞர் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

வீடியோ எடுத்த மனைவி
இதில் கொடுமை என்னவென்றால் இந்தச் சம்பவம் நடக்கும் போது, அந்த இளைஞரின் மனைவியும் அதே வீட்டில் தான் இருந்துள்ளார். சிறுமியை காப்பாற்ற அந்த பெண் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாகத் தனது கணவர் சிறுமியை பலாத்காரம் செய்வதை அந்த பெண் வீடியோவாக செல்போனில் பதிவு செய்துள்ளார். மேலும், இந்தச் சம்பவத்தை வெளியே சொன்னால் வீடியோவை இணையத்தில் பகிர்வோம் என்றும் மிரட்டி உள்ளனர்.

இணையம்
இருப்பினும், அந்தச் சிறுமி அவரது வீட்டில் இந்தச் சம்பவம் குறித்து அழுது கொண்டே தெரிவித்து உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞரின் மனைவி தனது செல்போனில் இருந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டு உள்ளனர். அதன் பின்னரே, அந்தச் சிறுமியின் குடும்பத்தினர் போலீசாரில் புகார் அளித்துள்ளனர். போக்சோ மற்றும் ஐடி பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வழக்குப்பதிவு
நாட்டில் மைனர் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சமீப காலங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மாதம் ஹைதராபாத்தில் ஓடும் காரில் வைத்து மைனர் சிறுமி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கி இருந்தது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், குற்றவாளிகள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications