• search
லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

குற்றவாளி செத்துட்டான் அவனை காப்பாற்றியவர்களை என்ன செய்யப்போகிறீர்கள் - பிரியங்கா

|

லக்னோ: என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட விகாஸ் துபே மீது 60க்கு மேற்பட்ட கொலை, கொள்ளை, நில ஆக்கிரமிப்பு போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆனால், எந்த வழக்கிலும் அவர் மீது இதுவரை குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. விகாஷ் துபே கொல்லப்பட்டதற்கு சமூக வலைத்தளங்களில் பிரபலங்களும் சாமானிய மக்களும் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். குஷ்பு, பிரியங்கா காந்தி உத்தரபிரதேசத்தில் ஆளும் பாஜக அரசை குற்றம்சாட்டியுள்ளனர்.

கதை முடிந்தது இந்த விளையாட்டை விளையாடியவர் யார் என்று உலக மக்களுக்கு தெரியாது என்று கூறியுள்ளார் குஷ்பு. இந்த கருத்தை பிரியங்கா காந்தி ரீட்வீட் செய்துள்ளதோடு, அவரும், குற்றவாளி இறந்து விட்டான் அவன் செஞ்ச குற்றமும், அவனைக் காப்பாற்றியவர்களும் அப்படியேதான் இருக்கிறார்கள்.. அதை என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

விகாஷ்துபே கடந்த சில நாட்களாக வட இந்தியா ஊடகங்களில் தலைப்புச்செய்தியாக சுற்றி வந்தான். கொரோனா பரவலையும் தாண்டி இவனை காவல்துறையினர் தேடி வந்த செய்திகள்தான் முதலிடம் பிடித்தது.

300 முறை போலீசை சுட்ட ரவுடி விகாஷ் துபேவின் ஆட்கள்.. வீட்டின் பதுங்கு குழியில் ஏராளமான ஆயுதங்கள்

ரவுடி ராஜ்ஜியம்

ரவுடி ராஜ்ஜியம்

பிக்ரு கிராமத்தில் போலீஸ் அதிகாரிகள் உள்பட எட்டு பேரை சுட்டுக் கொன்று தப்பிய விகாஸ் துபே மீது 60க்கு மேற்பட்ட கொலை, கொள்ளை, நில ஆக்கிரமிப்பு போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆனால், எந்த வழக்கிலும் அவர் மீது இதுவரை குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. காலம் காலமாக அரசியல்வாதிகளை தன்னிடம் வைத்துக் கொண்டு அரசியல் செய்து வந்துள்ளார்.

தப்பி ஓடிய துபே

தப்பி ஓடிய துபே

தனது மனைவியை சமாஜ்வாதி கட்சியில் சேர்த்து விட்டு இவர் பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்து ரவுடித்தனம் செய்துள்ளார். கூடவே பாஜக தொடர்பும் இருந்தது. துபேயின் வெறியாட்டம் கட்டுக்கடங்காமல் போய்விட்டது. 8 காவல்துறையினரை சுட்டுக்கொன்று விட்டு போலி அடையாள அட்டை வைத்துக் கொண்டு, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, டெல்லியின் எல்லை என்று சுற்றித் திரிந்துள்ளார். சுமார் 1500 கி. மீட்டர் காரில் பயணித்துள்ளார். ஆனால் யாராலும் கண்டுபிடிக்க இயலவில்லை.

கதையை முடித்த போலீஸ்

கதையை முடித்த போலீஸ்

உஜ்ஜைனியில் இருக்கும் மகாகாளீஸ்வரர் கோயிலுக்கு சென்று விட்டு வெளியே வரும்போது கைது செய்யப்பட்டார். அந்த தகவலும் தெளிவாக இல்லை. கைது செய்யப்பட்டாரா? சரண் அடைந்தாரா என்பதில் சர்ச்சை நீடித்தது. அதெல்லாம் எதுக்கு இதோ என்கவுண்டர்ல போட்டுட்டோம் என்று அறிவித்திருக்கிறது உ.பி மாநில போலீஸ். சினிமாவில் நடப்பது போல எல்லாமே முடிந்து போய் விட்டது.

வேட்டையாடி விளையாடிய போலீஸ்

வேட்டையாடி விளையாடிய போலீஸ்

தற்போது துபே குடும்பத்தையே உபி போலீஸ் வேட்டையாடி விட்டது. அவரது மனைவி உள்ளிட்டோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கூட்டாளிகளையும் போட்டுத் தள்ளி விட்டார்கள். என்கவுண்டருக்குப் பிறகுதான் சமூக வலைத்தளங்களில் புயலே வீசுகிறது. கலவையான கருத்துக்களை பலரும் பதிவிட்டு வருகின்றனர். குஷ்பு, பிரியங்கா காந்தி உள்ளிட்ட பலரின் விமர்சனங்களும் ட்விட்டரில் பதிவாகி வருகின்றன.

கதை முடிஞ்சு போச்சே

கதை முடிஞ்சு போச்சே

விகாஷ் துபே என்கவுண்டருடன் கதை முடிந்து போச்சே என்று பதிவிட்டு உள்ளார் குஷ்பு.

விளையாடியவர்களை உலகம் அறியாது

விளையாடியவர்களை உலகம் அறியாது

With the encounter of #VikasDubey a sure shot potboiler thriller comes to end without a climax. No tales to tell. Na rahega baans na bajegi baansuri. Kissa hi khatam. The world will never know the names that played the games.

விகாஷ் துபே என்கவுண்டர் இப்படி திரில்லாக முடிந்தாலும் கிளைமாக்ஸ் இல்லாத படம் போல முடிந்து விட்டது. இந்த விளையாட்டினை விளையாடியது யார் என்று இந்த உலகத்தில் உள்ள மக்களுக்கு தெரியாது என்று பதிவிட்டுள்ளார் குஷ்பு.

குற்றம் அப்படியோதான் இருக்கு

குற்றம் அப்படியோதான் இருக்கு

பிரியங்கா காந்தி தனது பதிவில் குற்றவாளி செத்துட்டான்.. அவன் செஞ்ச குற்றமும், அவனைக் காப்பாற்றியவர்களும் அப்படியேதான் இருக்கிறார்கள்.. அதை என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

நல்ல சீனுடா

நல்ல சீனுடா

இந்த என்கவுண்டரை பார்த்து என்னா சீனுடா என்று மகிழ்ச்சியடைகிறார்களாம் உத்தரபிரதேச மாநில பாஜகவினர். அதை மீம்ஸ் ஆக பதிவிட்டுள்ளார் ஒருவர். எது எப்படியே சில நாட்களாக ஊடகங்களுக்கு தீனி போட்டு வந்த கேங்ஸ்டார் விகாஷ் துபேயின் மரணத்தின் மூலம் பாலிவுட் படத்திற்கு ஒரு திரில்லர் கதை கிடைத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

 
 
 
English summary
Vikas Dubey's encounter evokes mixed reactions on social media,Khushbu and Priyanka reaction for twitter post.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X