வேலை வாய்ப்புகளை வழங்குவதில் உத்தரப் பிரதேசம் தான் டாப்! யோகி ஆதித்யநாத் பெருமிதம்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் ஏராளமான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். பாஜக ஆட்சி காலத்தில்தான் இந்த வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் பெருமை தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார். இந்நிலையில் வேலை வாய்ப்புகள் குறித்து பேசிய அவர், உத்தரப் பிரதேசத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவில் வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாக கூறியுள்ளார்.

கோரக்பூரில் உள்ள மதன் மோகன் மாளவியா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்த விழாவில் அவர் தொடர்ந்து பேசியதாவது, "அரசின் திறன் மற்றும் பயிற்சித் திட்டங்களுடன் தங்களை இணைத்துக் கொள்ளுமாறு இளைஞர்களுக்கு நான் அறிவுறுத்துகிறேன். முன்பு இருந்ததை போன்ற சூழல் இப்போது கிடையாது. நிலைமை மாறியிருக்கிறது. வேலை வாய்ப்பு விஷயத்தில் பாஜக அரசு ஏராளமான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது. உத்தரப் பிரதேசத்தில வேலை வாய்ப்புகள் அதிகரித்திருக்கின்றன. இளைஞர்கள் தாங்கள் விரும்பும் துறைக்கு முறையான பயிற்சி பெற்றால் வேலை நிச்சயம் கிடைக்கும்.
ஒவ்வொரு வயலுக்கு தண்ணீர் சென்று சேர்வதும், ஒவ்வொரு இளைஞருக்கும் வேலை வாய்ப்பு கிடைப்பதும் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயாவின் கனவு. 2014 இல் பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்ததில் இருந்து பிரதமர் மோடி தொடர்ந்து கனவுகளை நிஜமாக மாற்றி, எந்தவித பாகுபாடும் இல்லாமல் அனைவருக்கும் வேலைகளை வழங்கி வருகிறார். நமது மாநிலத்தில் ஒரு மாவட்டம், ஒரு தயாரிப்பு திட்டம் எதிர்பார்த்ததை விட அதிக வெற்றியை கொடுத்திருக்கிறது. அதேபோல முதலீட்டாளர்கள் உச்சி மாநாடும் வேலை வாய்ப்புகளை அதிகரித்துள்ளது" என்று கூறியுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications