பாஜக கொடியோடு பறந்த கார், மடக்கிய மதுரை போலீஸ்! உள்ளே பார்த்தா 11 பேர் தேடப்படும் குற்றவாளிகள்! ஷாக்
மதுரை: உசிலம்பட்டி அருகே முன்விரோதம் காரணமாக இளைஞர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவத்தில் தேடபட்டு வந்த குற்றவாளிகள் பாஜக கொடியுடன் இருந்த காரில் தப்பி செல்ல முயன்ற போது போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எம்.கல்லுப்பட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக கபடி போட்டி நடைபெற்று இருக்கிறது.
இந்த கபடி போட்டியின் காரணமாக எம்.எஸ்.புரம் கிராமத்தை சேர்ந்தவர்களுக்கும் மெய்யனுத்தம்பட்டியைச் சேர்ந்தவர்களுக்கும் முன் விரோதம் ஏற்பட்டு உள்ளது.

16 பேர் மீது வழக்குப்பதிவு
இந்த நிலையில் கபடிப் போட்டியில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக எம்.எஸ்.புரம் கிராமத்தைச் சேர்ந்த விஜயன், ராஜ்குமார் ஆகிய இளைஞர்கள் மீது மெய்யனுத்தம்பட்டியைச் சேர்ந்த சில இளைஞர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தி இருக்கின்றன. இந்த தாக்குதல் தொடர்பாக எம்.கல்லுப்பட்டி காவல் நிலையத்தில் தாக்குதலில் ஈடுபட்ட 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

போலிசுக்கு கிடைத்த ரகசிய தகவல்
வழக்குப்பதிவு செய்யப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் தலைமறைவாகினர். இதனை அடுத்து அவர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில்தான் பேரையூரைச் சேர்ந்த பாஜக முன்னாள் பிரமுகர் சாமிநாதன் என்பவரது காரில் தேடப்படும் குற்றவாளிகள் அனைவரும் தப்பி செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

பாஜக கொடியுடன் வந்த கார்
அதன் அடிப்படையில் அவர்களை மொத்தமாக தடுத்து நிறுத்தி கைது செய்ய போலீசார் விரைந்தனர். உசிலம்பட்டி தேவர் சிலை முன்பாக பாஜக கொடி மற்றும் பெயர் அச்சிடப்பட்டு இருந்த கார் வேகமாக செல்வதை கண்ட உசிலம்பட்டி டிஎஸ்பி நல்லு தலைமையிலான தனிப்படை போலீசார் அதனை மடக்கி பிடித்தனர்.

11 பேர் கைது
அந்த காரில், எம்.எஸ்.புரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் மீது கொலை வெறித் தாக்குதலில் ஈடுபட்ட வழக்கில் தொடர்புடைய திருநங்கை ஹன்சிகா, சதீஸ்குமார், ஆதிஸ்வரன், முத்துக் கிருஷ்ணன், செல்வம் உள்ளிட்ட 11 பேரை கைது செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகம் கொண்ட தேவர் சிலை பகுதியில் பாஜக கொடி மற்றும் பெயர் போர்டுடன் வந்த காரை மடக்கி குற்றவாளிகளை போலீசார் கைது செய்த சம்பவம் உசிலம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications