நீங்களாம் தளபதியைப் பத்தி பேசலாமா தப்பா?..மதுரை ஆதீனத்தைக் கண்டிக்கும் விஜய் ரசிகர்கள்
நடிகர் விஜய் நடித்த படங்களை பார்க்க வேண்டாம் என மதுரை ஆதீனம் பேசியிருந்த நிலையில், அவரை கண்டித்து மதுரை விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
மதுரை: மதுரை ஆதீனம் மடத்தின் சொத்துக்களை கொள்ளையடிக்க திட்டம் போடுறீங்களேயப்பா! நீங்களாம் தளபதியைப் பத்தி பேசலாமா தப்பா? என்று விஜய் ரசிகர்கள் மதுரை ஆதீனத்தைக் கண்டித்து போஸ்டர் ஒட்டியுள்ளனர். வீண் விளம்பரத்திற்காக பிதற்றுவதை நிறுத்து எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
Recommended Video
மதுரை ஆதீனம் சமீப காலமாக பேசி வரும் கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி வருகிறது. அறநிலையத்துறையை கலைக்க வேண்டும் என்றும் சமீபகாலமாக பேசி வருகிறார் மதுரை ஆதினம். தற்போது நடிகர் விஜய் குறித்து அவர் தெரிவித்த கருத்தும் புதிய சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளன.
விசுவ ஹிந்து பரிஷத் (VHP) யின் அறவழி காட்டும் ஆன்றோர்கள் பேரவை சார்பாக மதுரையில் துறவியர் மாநாடு 2 நாட்கள் நடைபெற்றது. இறுதி நாளான ஞாயிறு மாலை மதுரை பழங்காநத்தத்தில் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த பொதுக்கூட்டத்தில், துறவியர், ஆதினங்கள், மடாதிபதிகள் பங்கேற்று மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசினர்

மதுரை ஆதீனம் சர்ச்சை பேச்சு
மதுரை ஆதீனம் பேசும் போது பக்தர்கள் இந்து சமய அறநிலையத்துறை கோவில் உண்டியல்களில் பணம் போடாதீர்கள் என்றார். திராவிடபாரம்பரியம் என கூறுகிறார்கள். ஆனால் விபூதி பூச மறுக்கிறார்கள். விபூதியை கீழே கொட்டுகிறார்கள் என்றார்.

விஜய் படத்தை பார்க்காதீர்கள்
நடராஜ சாமி, முருகன் உள்ளிட்ட சாமிகளை கேவலமாக பேசுகின்றனர். நடிகர் விஜய் நம்ம விநாயகர் கடவுளை பற்றி குறைத்து பேசுகிறார். அவர் நடித்த படத்தை பார்காதீர்கள் என்றும் கூறினார். மதுரை ஆதீனத்தின் பேச்சுக்கு விஜய் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மதுரை ஆதீனத்திற்கு எதிராக போஸ்டர்
மதுரை வடக்கு மாவட்ட இளைஞரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மாநகர் பகுதிகளில் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். அதில், "எச்சரிக்கை! மதுரை ஆதினம் மடத்தின் சொத்துக்களை கொள்ளையடிக்க திட்டம் போடுறீங்களேயப்பா! நீங்களாம் தளபதியைப் பத்தி பேசலாமா தப்பா?"; "வீண் விளம்பரத்திற்காக பிதற்றுவதை நிறுத்து. எங்களுக்கு ஜாதி மதம் ஏதுமில்லை. தளபதி மேல் மக்கள் கொண்ட அன்புக்கு வானமே எல்லை" என்ற வாசகங்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன.

அண்ணாதுரை பற்றி பேச்சு
திருமூலர் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என கூறியதை , அண்ணாதுரை எடுத்து பேசினார். ஆன்மீக வாசகங்களை திருடி அரசியல் பேசியவர்கள், இன்று திராவிடம் என பேசுகின்றனர். அறநிலையத்துறை அறம் இல்லாமல் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையை கலைத்து விட்டு, கோவில் நிர்வாகத்தை நீதிபதிகள், அடங்கிய குழுவிடம் ஒப்படைங்கள் என்று மதுரை ஆதீனம் பேசியதற்கும் கடுமையான கண்டனங்களை திராவிட முன்னேற்றக்கழகத்தினர் பதிவு செய்து வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications