“அந்த சிரிப்பை பாருங்கப்பா... சிரிப்பே ஒரு அழகு” மேடையில் இபிஎஸ்-ஐ வெட்கப்பட வைத்த செல்லூர் ராஜு!
மதுரை: மதுரையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியின் சிரிப்பை பற்றி முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசியது தொண்டர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, முதல்முறையாக தென் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இவரது வருகையையொட்டி மதுரையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதற்காக மாநகர், புறநகர் மேற்கு மாவட்டம் மற்றும் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழங்காநத்தம் பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதுவரை இதுபோல் மூன்று மாவட்ட செயலாளர்கள் சேர்ந்து மதுரையில் பொதுக்கூட்டம் நடத்தியதில்லை.

மதுரையில் முதல்முறை
ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட அதிமுகவின் ஒற்றுமையை வெளிப்படுத்தவே மூன்று மாவட்டங்கள் சார்பிலும் இந்த பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதாக பார்க்கப்படுகிறது. அதேபோல் எடப்பாடி பழனிசாமியின் வருகையின் போது அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா மகன் ராஜ் சத்யனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதும் பேசுபொருளானது.

பிரம்மாண்ட வரவேற்பு
அதேபோல் மதுரை வந்த எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக சார்பாக தொண்டர்களால் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலக்கோட்டையில் இருந்து வழிநெடுகிலும் தொண்டர்கள் சூழ்ந்திருந்தனர். இதற்காக பிரத்யேக வாகனங்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. முன்னாள் அமைச்சர்கள் ஆர்பி உதயகுமார், செல்லூர் ராஜு, எம்எல்ஏ ராஜன் செல்லப்பா ஆகியோர் மதுரை முழுவதும் தொண்டர்களை அழைத்து வந்திருந்தனர்.

செல்லூர் ராஜூ பேச்சு
இந்த நிலையில் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜு பேசும்போது, எடப்பாடி பழனிசாமியின் சிரிப்பை பற்றி பேசியது தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தையும், வரவேற்பையும் பெற்றது. அவர் பேசுகையில், மதுரையில் இன்று ஒரு அற்புதமான கூட்டம். கூட்டம் என்று சொல்வதைவிடவும் மாநாடு என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். எடப்பாடி பழனிசாமி அண்ணனை வரவேற்க தொண்டர்கள் மாநாடு போல் குவிந்துள்ளனர் என்று தெரிவித்தார்.

வெட்கப்பட்ட இபிஎஸ்
அப்போது எடப்பாடி பழனிசாமியை கொண்டாடும் வகையில், நம்ம கதாநாயகன், தலைவர் எம்ஜிஆருக்கு பிறகு சிரிப்போடு உட்கார்ந்திருக்கிறார். சிரிப்பே ஒரு அழகு, அங்க பாரப்பா என்று கூறிய போது, எடப்பாடி பழனிசாமியே வெட்கப்பட அதிமுக தொண்டர்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர். தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமியின் சிரிப்புக்கு முன் எல்லா தலைவரும் ஜீரோ தான். எல்லோரும் எடப்பாடியார் என்று அழைக்கிறார்கள். மதுரை மண் என்றும் அதிமுகவின் கோட்டை என்று செல்லூர் ராஜு தெரிவித்தார்.
-
ஒருகாலத்துல எப்படி இருந்த மனுஷன்? விழுப்புரத்தில் ஓரம் கட்டப்பட்ட சிவி சண்முகம்! கண்முன் 3 சான்ஸ்? -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு? -
ஐசியூவில் அதிமுக.. ஆபரேசனுக்கு தயாராவாரா எடப்பாடி? குறுக்கே ஆம்புலன்ஸோடு விஜய்! பரபர பாலிடிக்ஸ் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு!












Click it and Unblock the Notifications