மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிரதமரை பார்க்க போறீங்களா? அப்படியே இதையும் கேளுங்க.. முதல்வருக்கு பட்டியலை நீட்டிய ஆர்பி உதயகுமார்!

Google Oneindia Tamil News

மதுரை : தமிழகத்தைச் சேர்ந்த திமுக மற்றும் தோழமை சேர்ந்த 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூன்றரை ஆண்டுகளில் உரிமைகுரல் எழுப்பாமல் தமிழகத்திற்கு பூஜ்ஜியத்தை தான் பெற்றுத் தந்துள்ளார்கள். முதல்வர் பிரதமரை சந்திக்கிற போது தமிழக உரிமைகளை பெற்றுத்தர முயற்சி எடுப்பாரா? என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள அவர், திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும், அவர்களின் தோழமைக் கட்சி சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரும் கடந்த மூன்றரை ஆண்டுகளில் தமிழகத்திற்கு என்ன என்ன திட்டங்கள் பெற்று தந்திருக்கிறார்கள்.

உரிமைக்குரல் எழுப்பி தமிழகத்தினுடைய உரிமையை ஜீவாதார உரிமையை பெற்று தந்திருக்கிறார்கள் என்று நாம் பட்டியலிட்டு வாதிக்கிற போது, அதிலே பூஜ்ஜியமே விஞ்சி நிற்கிறது. திமுக கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழகத்தில் உரிமையை காக்க தவறிவிட்டார்கள் என்கிற, அதிர்ச்சி தமிழக மக்களிடத்திலே ஏற்பட்டிருப்பதை நாம் கண்கூடாக பார்க்க முடிகிறது.

கொரோனா கட்டுப்பாடு.. சீனாவில் வெடித்த போராட்டம்.. செய்தியாளரை தூக்கிய சீன போலீஸ்! பிபிசி கண்டனம்கொரோனா கட்டுப்பாடு.. சீனாவில் வெடித்த போராட்டம்.. செய்தியாளரை தூக்கிய சீன போலீஸ்! பிபிசி கண்டனம்

பிரதமருடன் சந்திப்பு

பிரதமருடன் சந்திப்பு

பிரதமர் ஜி.20 மாநாட்டுக்கான தலைவர் பதவி ஏற்பு விழாவிலே, அனைத்து மாநில முதல்வர்களும் பங்கேற்கின்ற இந்த விழாவிலே, நம்முடைய தமிழ்நாட்டுடைய முதலமைச்சர்கள் பங்கேற்கும் போது, பாரத பிரதமரை சந்தித்து எடப்பாடியார் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து கொண்டு வந்த அந்த எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டிட பணிகளை உடனடியாக துவங்குவதற்கு ,முதலமைச்சர் பாரத பிரதமர் இடத்தில் அழுத்தம் கொடுப்பதோடு, நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுகிற வகையில் பாரத பிரதமரிடம் அழுத்தம் கொடுப்பதற்கு முதலமைச்சராக முன் வருவாரா.

முதலமைச்சர் ஸ்டாலின்

முதலமைச்சர் ஸ்டாலின்

மதுரையில் அறிவிக்கப்பட்டிருக்கிற மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசிடம் இருந்து அதற்கான திட்டங்களையும், மதிப்பீடுகான நிதி ஒதுக்கீடுகளை பெறுவதற்கு, முதலமைச்சர்கள் அழுத்தம் கொடுப்பாரா, தற்போது வடகிழக்கு பருவமழையில் பெய்து இருக்கிற அந்த நிவாரணத்திற்கு காப்பீடு, இழப்பீடு, இடுபொருள் மானியத்தையும் காப்பீடு நிவாரணங்களையும் பெற்று தருவதற்கு மத்திய அரசிடம் உரிய அழுத்தத்தை முதலமைச்சர் கொடுக்க முன் வருவாரா?

அழுத்தம் கொடுப்பார்களா?

அழுத்தம் கொடுப்பார்களா?

எடப்பாடியார் ஆட்சியில் மதுரை விமான விரிவாக்க திட்டத்தில் அனுமதி வாங்கி கொடுக்கப்பட்டது இது தமிழ்நாட்டிலே முதன்முதலாக அண்டர் பாஸ்ட் திட்டமாகும் அந்த திட்டம் தற்போது கானல்நீராக காட்சியளிக்கிறது. அந்தத் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசிடம் அழுத்தம் கொடுப்பாரா முதலமைச்சர், தமிழகத்தில் கோவை, சென்னை, மதுரை ஆகிய மூன்று பஸ் போர்ட்கள் உருவாக்கப்பட்டது. அதற்கான நிலங்கள் எல்லாம் தேர்வு செய்யப்பட்டது. ஆகவே மத்திய அரசின் அந்த பஸ்போர்ட் அமைப்பதற்கு , பாரத பிரதமரை சந்திக்கிற போது முதல்வர் அழுத்தம் கொடுப்பார்களா?

11 மருத்துவ கல்லூரிகள்

11 மருத்துவ கல்லூரிகள்

எடப்பாடியார் முதல்வராக இருக்கிறபோது மத்திய அரசிடம் அழுத்தம் கொடுத்து, இந்தியாவிலேயே எந்த மாநில முதல்வர்களும் செய்திடாத சரித்திர சாதனையாக, 11 மருத்துவக் கல்லூரிகளையும், எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிகளையும் நமது தமிழகத்திற்கு பெற்று தந்த ஒரு வரலாற்றை உருவாக்கி தந்தார். அதேபோல அம்மா மதுரை, தூத்துக்குடி சாலையை பொருளாதாரசாலையாக உருவாக்கி கொடுத்தார்கள். எடப்பாடியார் கோவையில் ராணுவ தளவாட தொழிற்சாலையை மத்திய அரசிடம் அழுத்தம் கொடுத்து உருவாக்கியது மட்டுமல்லாது, ராணுவ தளவாடக்கான சாலைகளை, சென்னைகோவையில் அமைத்தார்.

ஆயிரம் கேள்விகள்

ஆயிரம் கேள்விகள்

அதேபோல் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்காக பல்வேறு சாலை மேம்பாட்டு திட்டங்கள், பறக்கும் பாலங்கள் என ஆயிரக்கணக்கான மதிப்பீட்டில் பெற்று தந்தார். நடந்தாய் வாழி காவிரி திட்டம், காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவதற்கு மத்திய அரசிடம் இருந்து முயற்சிகளை பெறுவாரா? தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளையும், ஜல்லிக்கட்டு உரிமை பாதுகாக்கப்படுமா என்று இப்படி ஆயிரம், ஆயிரம் கேள்விகள் இளைஞர்கள் ,விவசாயிகள் என்று பொதுமக்களிடத்திலே எழுப்புகிற அந்த கேள்வியை,முதல்வர் டெல்லி செல்வதாக இருந்தால் பாரத பிரதமரை சந்தித்து இந்த கோரிக்கை எல்லாம் முன்வைத்து நிறைவேற்றி தருவதற்கும், வளர்ச்சி திட்டங்களை முன்னெடுப்பதற்கும், தாய் தமிழ்நாட்டினுடைய பாதுகாப்பிற்கும் பெறுவதற்கு முன் வருவாரா?

கோரிக்கை

கோரிக்கை

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் காட்டிய வழியிலே, மத்திய அரசிலே இருந்து நிதிகளை பெற்று வளர்ச்சி திட்டங்களை முன்னெடுப்பதற்கும், முல்லைப் பெரியாறு,காவேரி, கச்சை தீவு போன்ற தமிழகத்தினுடைய ஜீவாதார உரிமைகளை பெறுவதற்கும் பாரத பிரதமருக்கு முதலமைச்சர் அழுத்தம் கொடுக்க வேண்டும்" என்று கூறினார்.

English summary
DMK and 38 parliament mps from Tamil Nadu have not raised any claim in three and a half years and have given zero to Tamil Nadu. Will the Chief Minister try to get the rights of Tamil Nadu when he meets the Prime Minister? Former AIADMK Minister RB Udayakumar has questioned.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X