கரகாட்டம் + தேவா + மதுரை முத்து.. அதிமுகவின் பிரம்மாண்ட மாநாடு.. இன்று அந்த அறிவிப்பு வேற வருதாமே?
மதுரை: மதுரையில் நடக்க உள்ள அதிமுக மாநாட்டில் முக்கிய அறிவிப்புகளை எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுகவின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் இன்று மதுரையில் நடைபெறுகிறது. இன்று காலை கொடியேற்றி கூட்டத்தை தொடங்கி வைக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளர் ஆன பின் நடக்கும் முதல் பெரிய பொதுக்கூட்டம் இது. மதுரை ரிங்ரோடு பகுதியில் இந்த கூட்டம். நடக்கிறது. கிட்டத்தட்ட 63 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
2 லட்சம் பேர் கலந்து கொள்ளும் விதமாக இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகள் நடந்து உள்ளன. கூட்டத்திற்கு வரும் மக்கள் பலர் நேற்றே இதற்காக மதுரை வந்து சேர்ந்தனர். மதுரையில் இன்று காலை எடப்பாடி பழனிசாமி கொடி ஏற்றி கூட்டத்தை தொடங்கி வைப்பார்.
அதன்பின் இன்று காலை பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடக்கும். அதை தொடர்ந்து இன்று மாலை 5 மணி அளவில் தலைவர்கள் உரை நிகழ்த்துவார்கள். 6 மணிக்கு எடப்பாடி பழனிசாமி உரை நிகழ்த்துவார். 7. 30 மணிக்கு முன்பாக நிகழ்வுகள் முடிந்து உணவு வழங்கப்படும்.
இன்று மூன்று வேளையும் சைவம் மற்றும் அசைவ உணவுகள் மக்களுக்கு வழங்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து முடித்துள்ளன. கிட்டத்தட்ட 3 ஆயிரம் சமையல் கலைஞர்கள் சேர்ந்து இந்த முறை உணவு தயார் செய்துள்ளனர்.
மாநாடு பின்னணி: இந்த மாநாட்டிற்காக 100 டன் அரிசி வாங்கப்பட்டு உள்ளது. அதேபோல் 300 டன் காய்கறிகள் வைக்கப்பட்டு உள்ளது. 100 டன் பருப்பு வாங்கப்பட்டு உள்ளது. இந்த எழுச்சி மாநாட்டிற்காக கிட்டத்தட்ட 60 ஆயிரம் சதுர அடி பரப்பில் மேடை மட்டும் அமைக்கப்பட்டு உள்ளது.
ஜெயலலிதா, எம்ஜிஆர் படத்தோடு கோட்டை மாதிரியில் மேடை அமைக்கப்பட்டு உள்ளது. 10 லட்சம் பேருக்கு உணவு தயாரிக்கப்பட்டு உள்ளது. 3 அரங்குகள் உணவு சாப்பிட அமைக்கப்பட்டு உள்ளது. 10 இடங்களில் 40 ஆயிரம் வாகனம் அமைக்கப்பட்டு உள்ளது.
கொண்டாட்டம்: அதேபோல் 500 லிட்டர் தண்ணீர் தரும் அளவிற்கு ஆங்காங்கே டேங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் மாநாட்டிற்கு இடையே நிர்வாகிகள் சோர்வு அடையாமல் இருக்க காலை, மாலை கரகாட்டம் நடக்க உள்ளது.
ஸ்ரீகாந்த் தேவாவின் இசை கச்சேரி காலையில் நடக்க உள்ளது. அதேபோல் மதுரை முத்துவின் பட்டிமன்றம் நடத்தப்பட உள்ளது. காலையில் எடப்பாடி பழனிசாமி இந்த நிகழ்விற்கான கொடி ஏற்ற உள்ளார். அப்போது ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்ட உள்ளது.
அறிவிப்பு வருதாமே: இன்றைய நிகழ்வில் முக்கிய தீர்மானங்கள் பல வர உள்ளனர். அதிமுகவின் லோக்சபா தேர்தல் திட்டங்கள் தொடர்பாக எடப்பாடி முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார். முக்கியமாக் கட்சியின் எதிர்காலம் தொடர்பாகவும், லோக்சபா தேர்தல் 2024 தொடர்பாகவும் எடப்பாடி பழனிசாமி முக்கிய அறிவிப்பை இன்று மாலை 6 மணிக்கு வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.
அதிமுக 2.0 இது உணர்த்தும் விதமாக, அதிமுகவை தான் கைப்பற்றிவிட்டோம் என்பதை உணர்த்தும் விதமாக மதுரையில் அவர் பொதுக்கூட்டத்தை நடத்த திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பொதுக்கூட்டத்தை அவர் மதுரையில் நடத்தவும் முக்கியமான ஒரு காரணம் உள்ளதாம். எடப்பாடி என்றால் கொங்கு மண்டல தலைவர் என்ற இமேஜ் இருக்கிறது. அதை உடைக்க எடப்பாடி நினைக்கிறாராம்.
-
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications