அத வேற ஞாபகப்படுத்திட்டீங்க! வைகை அணையில் தெர்மாக்கோல்! காரணம் யாரு தெரியுமா? உடைத்த செல்லூர் ராஜு!
மதுரை : அதிமுக முன்னாள் அமைச்சரும் அதிமுகவில் தென் மாவட்டங்களில் செல்வாக்கு மிக்க மாவட்ட செயலாளர்களில் ஒருவருமான செல்லூர் ராஜு, வைகை அணையின் தண்ணீர் ஆவியாவதை தவிர்க்க 'வரலாற்று சிறப்பு மிக்க சம்பவமான' தெர்மக்கோலை வைத்து மூடியதற்கு காரணம் யார்? இந்த ஐடியாவைக் கொடுத்தது யார்? நீண்ட காலத்துக்குப் பிறகு மனம் திறந்து பேசியுள்ளார்.
அதிமுகவின் அதிகார யுத்தம் காரணமாக ஓபிஎஸ் இபிஎஸ், மற்றும் சீனியர்கள் அமைச்சர்கள் எப்போதும் பரபரப்போடும் சில நேரங்களில் ஆவேசமாகவும் பேசி வருகின்றனர்.
அதற்கெல்லாம் நேர்மாறாக இருப்பவர் செல்லூர் ராஜு. அதிமுகவின் கடைக்கோடி தொண்டனாக இருந்து .மாவட்ட செயலாளர், அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் என பல்வேறு பதவிகளை வகித்தவர். ஆனாலும் மனதில் எது தோன்றினாலும் அதை பட்டென்று பேசிவிடுவார்.

செல்லூர் ராஜூ
'தெர்மாகோல் விஞ்ஞானி' என நெட்டிசன்களால் அன்போடு அழைக்கப்படும் செல்லு ராஜு அந்த பெயரை பெற்றது. எதற்காக என்பது பலருக்கு தெரிந்திருக்கும் இருந்தாலும் அதை நினைவு படுத்த வேண்டியது நமது கடமை. இந்த பெயருக்கு பின்னால் ஒரு பெரிய வரலாறு இருக்கிறது. வைகை அணையில் நீர் அதிக அளவில் ஆதியாவதால் அதை தடுக்க வேண்டும் ஏதாவது திட்டம் இருந்தால் சொல்லுங்கள் என தேனி மதுரை மாவட்ட ஆட்சியர்களிடமும் பொறியாளர்களிடமும் கேட்டிருக்கிறார் செல்லூர் ராஜு.

வைகை அணை
இதை அடுத்து அவர்கள் கொடுத்த ஐடியாவின் படி அதிகாரிகள் புடை சூழ வைகை அணைக்கு சென்ற அவர் வெள்ளை நிற தெர்மாகோல், அதில் கல்லை கட்டி வைகை அணை நீர் ஆவியாவதை தடுக்க போகிறேன் என மிதக்க விட்டார். ஆனால் அவர் கரை சேரும் முன் தெர்மாகோல் அனைத்தும் கரை சேர்ந்து விட்டது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் கடும் கேலிக்குள்ளான செல்லூர் ராஜ் அதன் பிறகு தெர்மாகோல் விஞ்ஞானி என அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார்.

தெர்மாகோல் திட்டம்
செல்லூர் ராஜூவின் திட்டம் ஒரு வகையில் ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான். ஆனால் தெர்மாகோலை வைத்து எதுவும் செய்ய முடியாது. வெளிநாடுகளில் நீர் நிலைகளில் நீர் ஆவியாவதை தடுக்க 'பிளாக் பால் டெக்னாலஜி' அல்லது சோலார் பேனல் அமைப்பது போன்ற திட்டங்களை கொண்டு வருகின்றனர். ஆனால் தெர்மாகோல் என்பது கொஞ்சம் ஓவர் தான் என்றாலும் அப்போது இதற்கு காரணம் யார் என்பது குறித்து தெரிவிக்கவில்லை. அப்போது தேனி மாவட்ட ஆட்சியராக இருந்த வெங்கடாசலம் 'அமைச்சர்' தான் ஐடியா கொடுத்தார் என பேசி இருந்தார்.

யார் காரணம்
இதைத் தொடர்ந்து தற்போது வரை அமைச்சர் செல்லூர் ராஜு என்றாலே காமெடி சரவெடி தான். ஏதாவது ஒரு வகையில் சச்சையான விஷயத்தைக் கூட காமெடி கலந்து பேசிவிட்டு சிரித்த முகத்தோடு சென்று விடுவார். இந்த நிலையில் தான் தெர்மாகோல் ஐடியாவை தனக்கு கொடுத்தது யார் என்பது குறித்து மனம் திறந்து இருக்கிறார். இது தொடர்பாக பேசியுள்ள அவர்,"ஒரு அரசு பொறியாளர் பேச்சை கேட்டு வைகை அணையில் தெர்மாக்கோல் விடப்பட்டது; இந்நிகழ்வுக்கு பின் சட்டப்பேரவையில் கூட என்னை தெர்மாக்கோல் ராஜு என கூப்பிட்டார்கள்"என கூறியிருக்கிறார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications