"எய்ட்ஸ்".. ராமமூர்த்திக்கு ஒரு கள்ளக்காதலி.. கர்ப்பமானதோ 13 வயது மகள்.. கடைசியில் நடந்த அந்த ஷாக்!

தாய், மகள் இருவருக்கும் எய்ட்ஸ் இருப்பது உறுதியாகி உள்ளது

Subscribe to Oneindia Tamil

மதுரை: ராமமூர்த்தி என்பவருக்கு ஒரு கள்ளக்காதலி இருக்கிறார்.. ஆனால் ராமமூர்த்தி கள்ளக்காதலியின் மகளை கர்ப்பமாக்கிவிட்டார்.. கடைசியில் இதைவிட பெரிய ஷாக் ஒன்றையும் ராமமூர்த்தி தந்திருக்கிறார்..!

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி.. இவர் கேரளாவில் வேலை பார்த்து கொண்டிருந்தபோது, ஒரு பெண்ணை சந்தித்தார்.. அந்த பெண் கணவனை இழந்தவர்.. 2 பெண் குழந்தைகள் உள்ளன.

ஆதரவற்ற பெண்ணை பார்த்ததும் ராமமூர்த்திக்கு பரிதாபம் வந்துவிட்டது.. அதனால் அவருக்கு வாழ்க்கை தர முடிவு செய்து, அந்த பெண்ணுடன் குடித்தனம் நடத்த ஆரம்பித்தார்.. ஆனால் கல்யாணம் செய்து கொள்ளவில்லை.. இப்படியே 9 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்தனர்..

குடும்பம்

குடும்பம்

இதற்கு பிறகு பெண்ணின் குடும்பத்தினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தபடியே இருந்தனர்.. இதனால், ராமமூர்த்தி, அந்த பெண்ணையும், அவரது 2 மகள்களையும் சொந்த ஊருக்கே அழைத்து வந்து விட்டார். இந்த சமயத்தில்தான், அதாவது 10 நாளுக்கு முன்பு பெண்ணின் இளைய மகளுக்கு திடீரென உடம்பு சரியில்லாமல் போய்விட்டது..

 ஆஸ்பத்திரி

ஆஸ்பத்திரி

அந்த சிறுமிக்கு 13 வயசுதான் ஆகிறது.. இதனால், பதறி போன தாய், மகளை அழைத்து கொண்டு ஆஸ்பத்திரிக்கு சென்றார்.. டாக்டர்கள் சிறுமியை செக் பண்ணி பார்த்துவிட்டு, 5 மாசம் கர்ப்பம் என்றார்கள்.. இதை கேட்டதும் அலறிவிட்டார் தாய்.. என்ன நடந்தது? யார் காரணம் என்று துருவி துருவி மகளை கேட்டபிறகுதான், மிஸ்டர் ராமமூர்த்தியின் திருவிளையாடல் தெரியவந்தது... அவரேதான் கர்ப்பத்துக்கு காரணமாம்.

வேலை

வேலை

இந்த விஷயம் போலீஸ் வரை சென்றது.. போலீசாரும் ராமமூர்த்தியை விசாரித்தபோது, "இந்த பொண்ணு வீட்டுல தனியா தான் இருக்கும்.. அவ அம்மா வேலைக்கு போய்விடுவாள்.. தினமும் தனியா இருந்த பெண்ணிடம் நெருங்கி பழகிட்டேன்.. இதை வெளியே சொன்னால் கொலை பண்ணிடுவேன்னு மிரட்டி வெச்சிருந்தேன்.. அதனால்தான் யார்கிட்டயும் சொல்ல காணோம்" என்றார்.

 எய்ட்ஸ்

எய்ட்ஸ்

இதையடுத்து, ராமமூர்த்தியை போலீசார் கைது செய்தனர். பின்னர், கர்ப்பிணி சிறுமியை டெஸ்ட் செய்ய ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.. அப்போதுதான், அந்த சிறுமிக்கு எய்ட்ஸ் இருப்பது தெரிந்தது.. இதை கேட்டதும் தாய்க்கு தூக்கிவாரிப்போட்டது.. உடனே அவருக்கும் டெஸ்ட் செய்யப்பட்டதில், எய்ட்ஸ் இருப்பது தெரியவந்தது.. ராமமூர்த்தியிடம் இருந்து தாய்க்கும், மகளுக்கும் எய்ட்ஸ் பரவி உள்ளது உறுதியாகி உள்ளது. இப்போது மொத்த கிராமமும் ராமமூர்த்தி மீது கொந்தளிப்பில் உள்ளது..!

 கன்னியாகுமரி

கன்னியாகுமரி

இப்படித்தான் கடந்த வாரம் கன்னியாகுமரியில் 22 வயது இளைஞர், ஒரு சிறுமியை காதலித்து இழுத்து கொண்டு போய் கல்யாணம் செய்துள்ளார்.. அந்த இளைஞர் ஒரு ஆட்டோ டிரைவர்.. அவருக்கு எய்ட்ஸ் உள்ளது.. இது தெரிந்தும் அந்த பெண்ணை கல்யாணம் செய்துள்ளார்.. இதைவிட கொடுமை, அவருக்கு எய்ட்ஸ் இருப்பது அந்த சிறுமிக்கும் தெரியுமாம்.. அதனால்தான் பரிதாபப்பட்டு காதலித்தேன் என்று சிறுமி வாக்குமூலம் தந்துள்ளார். இப்போது சிறுமியையும் டெஸ்ட் செய்ய ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுள்ளனர்.

விழிப்புணர்வு

விழிப்புணர்வு

கொஞ்ச நாள் அடங்கி கிடந்த, இந்த எய்ட்ஸ் நோய் மீண்டும் தலைதூக்கி வருகிறது.. இந்த நோயின் கொடூரம் பற்றி நமக்கு கால் நூற்றாண்டுக்கு முன்பே தெரியும் என்றாலும், இதுவரை நிரந்தர மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.. தவிர, பல்வேறு விழிப்புணர்வுகளை அரசு மேற்கொண்டதாலும், அதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தந்ததாலும்தான், எய்ட்ஸ் தொற்று எண்ணிக்கை பரவலாக தமிழகத்தில் குறைந்திருந்தது. ஆனால், இப்போது எய்ட்ஸ் பரவி வருகிறது என்றால், மீண்டும் ஒரு அதிதீவிர விழிப்புணர்வு கிராமப்புற மக்களுக்கு உடனடி தேவையாகிறது..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+