மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

Alanganallur Jallikattu: ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் அலங்காநல்லூர் வாடிவாசல்... போட்டி நடக்குமா?

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான முகூர்த்தக்கால் நடும் விழா இன்று நடைபெற்றது.

Google Oneindia Tamil News

மதுரை: உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஆயத்த பணிகள் ஆரம்பமாகி விட்டன. வாடிவாசல் அருகேயுள்ள முத்தாலம்மன் கோவிலில் சிறப்பு பூஜை செய்து முகூர்த்த கால் நடப்பட்டது. முகூர்த்த கால் நடும் விழாவில், வழக்கமாக அமைச்சர்கள், ஆட்சியர் பங்கேற்பார்கள், ஆனால் இந்த ஆண்டு அமைச்சர் ஆட்சியர் பங்கேற்கவில்லை.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப்போட்டிகள் நடைபெறும். மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஆகிய ஊர்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறும்.

உலகில் கொரோனாவால் 30.78 கோடி பேர் பாதிப்பு - ரஷ்யாவில் 1 கோடியை தாண்டிய மொத்த கேஸ்கள்! உலகில் கொரோனாவால் 30.78 கோடி பேர் பாதிப்பு - ரஷ்யாவில் 1 கோடியை தாண்டிய மொத்த கேஸ்கள்!

இந்த ஆண்டு தைப்பொங்கல் நாளான 14ஆம் தேதி அவனியாபுரம், 15ஆம் தேதி பாலமேடு, 16ஆம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பார்வையாளர்கள் இன்றி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

போட்டி நடக்குமா

போட்டி நடக்குமா

இந்நிலையில், தமிழக அரசு ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது குறித்து இன்று ஆலோசனை நடத்தி முக்கிய அறிவிப்புகளை வெளியிட வாய்ப்பு உள்ளது. காளை மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. இதனால் போட்டி நடக்குமா? நடக்காதா என்று மாடுபிடி வீரர்களும் காளை வளர்ப்பாளர்களும் குழப்பத்தில் உள்ளனர்.

கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம்

கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம்

ஜல்லிகட்டு போட்டி நடத்துவது தொடர்பாக தமிழக அரசிடம் இருந்து இதுவரை எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. அதே நேரத்தில் ஜல்லிக்கட்டுப்போட்டி கண்டிப்பாக நடைபெறும் என்று அமைச்சர் மூர்த்தி கூறியிருந்தார். சூழ்நிலைக்கு ஏற்ப கட்டுப்பாடுகளும் விதிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.

அலங்காநல்லூர்

அலங்காநல்லூர்

ஜல்லிக்கட்டு போட்டி நடத்த 5 நாட்களே உள்ளநிலையில் அதற்கான முன்னேற்பாட்டு பணிகள் தொடங்கியுள்ளன. வாடிவாசலில் வர்ணம் தீட்டுவது, கேளரி அமைப்பது, காளைகளுக்கான மருத்துவ பரிசோதனை செய்யுமிடம், காளைகள் நிறுத்தி வைக்கும் இடத்தை தயார் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

ஜல்லிக்கட்டு எப்படி நடக்கும்

ஜல்லிக்கட்டு எப்படி நடக்கும்

வழக்கமாக முகூர்த்த கால் நடும் விழாவில் அமைச்சர், ஆட்சியர் பங்கேற்பார்கள், ஆனால் இந்த ஆண்டு அமைச்சர் ஆட்சியர் பங்கேற்கவில்லை. அரசு வழிகாட்டுதல் படி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என்றும், பார்வையாளர்கள் இல்லாமல் நடத்தலாம் என அரசு சொன்னால் அதன்படி போட்டிகளை நடத்துவோம் எனவும் விழா கமிட்டி பிரதிநிதி ரகுபதி கூறியுள்ளார்.

English summary
Alanganallur Jallikattu: (அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி ) Preparations have begun for the world famous Alankanallur Jallikkattu competition. A special pooja was performed at the Muthalamman Temple near Vadivasal and a grand ceremony was held.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X