கோவை டூ மதுரை.. வட இந்தியாவே தேடும் பிரபல கொள்ளைன் பர்ஹான்.. தப்பியவரை பிடிக்க மூன்று தனி படை
மதுரை: கோவை, கவுண்டம்பாளையத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் புகுந்து வீடுகளின் கதவை உடைத்து 42 பவுன் நகை மற்றும் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது. இது குறித்து கவுண்டம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து வடமாநில கொள்ளையன் பர்ஹான் உட்பட மொத்தம் ஐந்து பேரை கைது செய்தனர். இதில் பர்ஹானை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மதுரைக்கு அழைத்துச் சென்ற போது தப்பி ஓடிவிட்டார். அவரை பிடிக்க மூன்று தனிப்படை அமைத்து காவல்துறையில் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கோவை, கவுண்டம்பாளையத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் புகுந்து வீடுகளின் கதவை உடைத்து 42 பவுன் நகை மற்றும் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது. இது குறித்து கவுண்டம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விசாரணையில் கொள்ளையில் ஈடுபட்டது உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த இர்பான், கல்லு ஆரிப், ஆசிப் என்பதும் அவர்கள் கோவைப்புதூரில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருந்தது தெரிய வந்தது.

உடனே போலீசார் அங்கு சென்று அந்த மூன்று பேரையும் பிடிக்க முயன்றனர். அப்பொழுது அவர்கள் அரிவாளால் தாக்கினர். உடனே போலீசார் அந்த மூன்று பேரையும் சுட்டுப் பிடித்தனர். இதில் ஆசிப் உயிரிழந்தார். இந்த வழக்கில் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பர்ஹான் உட்பட மொத்தம் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
அதில் பர்ஹான் மீது குண்டார் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. எனவே அவரை மதுரையில் உள்ள குண்டர் தடுப்பு சட்ட ஆணையத்தில் ஆஜர் படுத்த கோவை காவல்துறையினர் கடந்த மூன்றாம் தேதி மாலையில் அழைத்துச் சென்றனர். மதுரையை அடுத்த நாகமலை புதுக்கோட்டை அருகே சாப்பாடு வாங்க சென்ற போது போலீசார் வேனில் இருந்து பர்ஹான் தப்பி ஓடி விட்டார்.
இதுகுறித்து நாகமலை புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் பர்ஹான் எங்கு ? தப்பிச் சென்றார். என்பதை அறிய அங்கு உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பர்ஹான் மீது கோவையில் மட்டும் வழக்கு உள்ளது. ஆனால் அவர் மீது வடமாநிலத்தில் ஏராளமான திருட்டு, கொள்ளை, கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. எனவே அவர் வடமாநிலத்துக்கு தப்பிச் செல்வதை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து கோவை மாநகர காவல் துறை ஆணையர் கண்ணன் உத்தரவின் பேரில் தப்பி ஓடிய கொள்ளையனை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது என்றும், தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.
-
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல்












Click it and Unblock the Notifications