Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

DMDK Alliance: 6+1.. விஜயபிரபாகரனுக்காக திமுகவிடம் வைத்த கோரிக்கை.. ஆண்டாள் கோயிலில் தரிசனம் செய்த பிரேமலதா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேமுதிகவுக்கு 6 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்ய சபா சீட் ஒதுக்கலாம் என்ற திமுகவின் ஆஃபரை பிரேமலதா விஜயகாந்த் ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்தக் கூட்டணியை உறுதி செய்த பின், பிரேமலதா விஜயகாந்த் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டிருக்கிறார். இதற்கு முன் 2011ஆம் ஆண்டும் அதிமுக கூட்டணி உறுதியான பின், ஆண்டாள் கோயிலில் சாமி தரிசனம் செய்திருந்தார்.

ஜனவரி 9ஆம் தேதி கடலூரில் நடந்த தேமுதிக மாநாட்டில் கூட்டணி நிலைப்பாட்டை அறிவிப்பேன் என்று கூறிய பிரேமலதா விஜயகாந்த், சுமார் 20 நாட்களாகியும் கூட்டணி அறிவிப்பை வெளியிடவில்லை. ஏற்கனவே பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி நிலைப்பாட்டை அறிவித்து, அதிமுக கூட்டணியில் ஐக்கியமாகிவிட்டனர். அதேபோல் திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் இணக்கமாக உள்ளனர்.

DMDK Alliance

இன்னும் பாமக ராமதாஸ் அணியும், புதிய தமிழகம் கட்சி மற்றும் தேமுதிக ஆகிய 3 கட்சிகள் மட்டுமே கூட்டணி முடிவை அறிவிக்காமல் இருக்கின்றனர். 2016 சட்டசபைத் தேர்தல் தொடங்கி தேமுதிகவுக்கு சட்டசபை மற்றும் நாடாளுமன்றம் என்று இரு தேர்தல்களிலும் ஒன்றில் கூட வெற்றி கூட கிடைக்கவில்லை. தற்போது விஜயகாந்த் மறைந்துவிட்ட சூழலில், தேமுதிகவை காக்க வேண்டிய பொறுப்பு பிரேமலதாவுக்கு வந்துள்ளது.

இதனிடையே தேமுதிக தரப்பில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. திமுக தரப்பில் தொடக்கம் முதலே 6 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்ய சபா சீட் கொடுக்கப்படும் என்று பேசி வருகின்றனர். அதிமுக தரப்பில் 9 தொகுதிகள் வரையிலும், ஒரு ராஜ்ய சபாவும் கொடுப்பதாக பேசப்பட்டது. இதையடுத்து தேமுதிக கால தாமதம் செய்தது.

இதனிடையே திமுகவின் பேச்சுவார்த்தையை அறிந்த அதிமுகவும், 6+1 என்ற கணக்கில் பேச்சுவார்த்தையை நடத்தியது. இதனால் பிரேமலதா விஜயகாந்த் முடிவு என்ன என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் ஸ்ரீவில்லிப்புத்தூர் சென்ற பிரேமலதா விஜயகாந்த் ஆண்டாள் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். இதேபோல் 2011ல் அதிமுக உடனான கூட்டணி உறுதியான போதும் இதே கோயிலில் சாமி தரிசனம் செய்திருந்தார்.

அப்போது அதிமுகவுடன் கூட்டணி அமைந்த நிலையில், தற்போது பிரேமலதா விஜயகாந்த் திமுகவுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு தொகுதியை விஜயபிரபாகரனுக்காக பிரேமலதா விஜயகாந்த் கேட்டுள்ளார். அதற்கு திமுக தலைமை பச்சைக்கொடி காட்டி இருக்கிறது.

இந்த சட்டசபைத் தேர்தலில் விஜயபிரபாகரன் வென்றால் அவர் எம்எல்ஏ-வாக தொடர்வார் என்று கூறப்படுகிறது. ஒருவேளை தோல்வி அடைந்தால், அவரை ராஜ்ய சபாவுக்கு அனுப்ப பிரேமலதா விஜயகாந்த் முடிவு எடுத்துள்ளதாகவும் விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். ஒருவேளை விஜயபிரபாகரன் வென்றால், ராஜ்ய சபாவுக்கு சுதீஷ் செல்ல அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+