பொறுப்பான ஆட்களை தேடி மதுரை வந்த உதயநிதி ஸ்டாலின்.. பெரியப்பாவின் ஊரில் கலகல..!
Recommended Video
மதுரை: திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திருநெல்வேலி மத்திய மாவட்டம் மற்றும் மதுரை மாநகர் பகுதி இளைஞர் அணி செயலாளர்கள் துணை செயலாளர்களுக்கான நேர்காணல் நடத்தினார்.
மதுரை என்றாலே திமுகவினருக்கு சட்டனெ தோன்றும் பெயர் அழகிரி. இவர் தான் மதுரை மற்றும் தெற்கே உள்ள 12 மாவட்டங்களில் திமுகவை கட்டுபாட்டில் வைத்திருந்தார் .இப்போது அவர் திமுகவில் இல்லை. இருந்தாலும் திமுகவினவர் இன்றும் அவரை குறிப்பிடாமல் போஸ்டர்களோ பேனர்களோ அடிப்பது இல்லை.
இன்று மதுரை வந்த திமுக தலைவர் ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலினை வரவேற்று அழகிரி ஆதரவாளர்கள் போஸ்டர் அடித்து கலக்கினர் அதுவும் பெரியப்பாவின் கோட்டைக்கு வர்ற உதயநிதிக்கு பாராட்டுக்கள் என அடித்து அசத்தி உள்ளனர்.

மதுரை வந்த உதயநிதி
சரி எதுக்கு உதயநிதி ஸ்டாலின் மதுரை வந்தார் என்று பார்த்தால், திமுக இளைஞரணி அமைப்பளார் பொறுப்பிற்கு பொறுப்பான ஆட்களை நியமனம் செய்வதற்காக நேர்காணலுக்கு வந்துள்ளார்.

நேர்காணல் நடத்திய உதயநிதி
இன்று திருநெல்வேலி மத்திய மாவட்ட இளைஞர் அணி ஒன்றிய, பகுதி, பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் துணை அமைப்பாளர் நேர்காணல் மதுரை தங்கம் கிராண்ட் ஹோட்டல் அரங்கில் நடைபெற்றது. திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேர்காணல் நடத்தினார்.

விரைவில் நேர்காணல்
திருநெல்வேலி மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வஹாப், இளைஞர் அணி துணை செயலாளர்கள் ஹசன் முகமது ஜின்னா, துரை, அன்பகம் கலை ஆகியோர் உடனிருந்தனர். இதை தொடர்ந்து மதுரை மாநகர் பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் துணை அமைப்புகளுக்கான நேர்காணல் நடைபெற உள்ளது.

இளைஞர்களை கவர திட்டம்
அண்மையில் திமுக இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலின் இளைஞரணிக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் இளைஞர்களை கவரும் வகையில் திமுக இளைஞரணியை மாற்றி உருவாக்கி உருவாகிறார். அந்த வகையில் அமைப்பாளர்களையும் நியமித்து வருகிறார்.
-
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications