அரசியல் அனாதையாகிவிட்டார் ஓ.பி.எஸ்! எல்லா ஏரியாவுமே எடப்பாடியார் கோட்டை ! ஆர்.பி.உதயகுமார் அதிரடி!
மதுரை : மூத்த நிர்வாகிகள், தொண்டர்களை உதாசீனப்படுத்தியதால் ஓபிஎஸ் இன்று அரசியல் அனாதையாகிவிட்டார் எனவும், என எந்த மண்டலமாக இருந்தாலும் அனைத்திலும் அதிமுகவின் ஒற்றைத் தலைமை அண்ணன் எடப்பாடி பழனிச்சாமியின் வெற்றி கோட்டையாக இருக்கும் என முன்னாள் அமைச்சரும் எதிர்கட்சி துணை தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
Recommended Video
முன்னாள் அமைச்சரும், தற்போது எடப்பாடி பழனிசாமியால் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள ஆர்.பி.உதயகுமார் மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள 'அம்மா' கோவிலுக்கு சென்றார்.
அம்மா கோவிலில் உள்ள முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து புதிதாக எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்ற ஆர் பி உதயகுமாருக்கு கட்சி நிர்வாகிகள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

ஆர்பி உதயகுமார்
அப்போது தொண்டர்கள் மத்தியில் பேசிய ஆர்பி உதயகுமார்," அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற வன்முறைக்கு அதிமுக துரோகிகளுடன் திமுக அரசு உடந்தையாக இருந்தது., அதன் விளைவாக அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்டுள்ளது. மூத்த நிர்வாகிகள் நடத்திய பலகட்ட பேச்சுவார்த்தையை ஒபிஎஸ் உதாசினப்படுத்தினார். மாவட்ட செயலாளர்கள், தலைமைகழக நிர்வாகிகள் பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கருத்துக்கள் சொன்னார்கள்.

அரசியல் அனாதை
ஆனால்., தலைமை பொறுப்பில் இருந்துகொண்டு தொண்டர்கள்., நிர்வாகிகள் கோரிக்கைக்கு செவி சாய்க்காமல் சர்வாதிகார போக்குடன் இருந்ததால் இன்றைக்கு சவுக்கடியாக இன்று ஓபிஸ் அரசியல் அனாதையாகிவிட்டார். நேற்று நடைபெற்ற குடியரசு தலைவர் பிரிவு உபசார விழாவிலும் அதிமுகவின் ஒற்றை முகமாக அதிமுகவின் பொதுச்செயலாளரா கலந்து கொள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கண்டன ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சி சம்பவம் தமிழக அரசிற்கு தலைகுனிவாக உள்ளது. கள்ளக்குறிச்சியில் மாணவின் இறப்பு சம்பவம் குறித்து தமிழக முதல்வர் நிச்சயம் பதில் சொல்ல வேண்டும். உண்மையான அதிமுகவானது., இன்றைக்கு திமுகவையும் உண்மையான அதிமுகவை எதிர்த்த துரோகிகளுக்கும்., எதிரிகளுக்கும் பாடம் புகட்டும் வகையில் 25ம் தேதி எதிர்க்கட்சி துணைத் தலைவர் என்ற முறையில் திமுக அரசின் மின்சார உயர்வு., சட்ட ஒழுங்கு பிரச்சினை உள்ளிட்டவைகள் முன்வைத்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. துரோகத்தை வேரறுக்கும் வகையில் வருகின்ற 26ஆம் தேதி தேனி மாவட்டத்தில் நடைபெறும் போராட்டம் இருக்கும்.

வெற்றி கோட்டை
வரும் தேர்தல்களில் பாண்டிய மண்டலம், சோழ மண்டலம், அதியமான் மண்டலம், கொங்கு மண்டலம், மத்தியமண்டலம் என எந்த மண்டலமாக இருந்தாலும் அனைத்திலும் அதிமுகவின் ஒற்றைத் தலைமை அண்ணன் எடப்பாடி பழனிச்சாமியின் வெற்றி கோட்டையாக இருக்கும் என தெரிவித்தார். முன்னதாக 2021-ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தலைமையில் திறந்து வைக்கப்பட்ட T. குண்ணத்தூர் அம்மா கோவிலில் வைக்கப்பட்டிருந்த ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளரான வைத்தியலிங்கம் ஆகியோர் படம் நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி! -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு












Click it and Unblock the Notifications