Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பத்திரப்பதிவு மோசடி.. வரப்போகும் புதிய சட்டம்.. அமைச்சரின் பேச்சால் கலக்கத்தில் அதிகாரிகள்

Subscribe to Oneindia Tamil

மதுரை: கடந்த ஆட்சியில் பல ஆயிரம் கோடி சொத்துக்கள் மோசடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. 2016 முதல் 2021 வரை வெளிப்படையாகவே பத்திரப்பதிவு மோசடி நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது. அதற்கான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளது. பதிவுத்துறை முறைக்கேடு தொடர்பாக விசாரணை உயர்நிலைக்குழு அமைக்கப்படஉள்ளது என பத்திரப்பதிவு துறை அமைச்சர் பி. மூர்த்தி தெரிவித்தார்.

Recommended Video

    பத்திரப்பதிவு மோசடி.. வரப்போகும் புதிய சட்டம்.. அமைச்சரின் பேச்சால் கலக்கத்தில் அதிகாரிகள்

    பாரதியார் நினைவு நாளையொட்டி பாரதியார் ஆசிரியராக பணியாற்றிய மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள சேதுபதி மேல்நிலை பள்ளியில் உள்ள அவரது திருவுருவசிலைக்கு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறைஅமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர்,மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மூர்த்தி பாரதியாரை பற்றி புகழ்ந்து பேசினார். தொடர்ந்து பத்திரப்பதிவு துறை பற்றி பேசும்போது, "பத்திரப்பதிவு துறையில் இனி முறைகேடாகப் பத்திரப்பதிவு நடந்தால் சார்பதிவாளர் மட்டுமல்லாது அவருடன் தொடர்புள்ள அதிகாரிகள் மீதும் உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

    அதிகாரிகளுக்கு ஜெயில்

    அதிகாரிகளுக்கு ஜெயில்

    முறைகேடாக பதிவு நடந்தால் சார் பதிவாளர் உள்ளிட்ட சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு 3 ஆண்டு வரை சிறை தண்டனை வழங்கும் சட்ட வரைவு கொண்டுவரப்படும். இந்த முறைகேட்டில் தொடர்புடைய மற்ற துறையை சேர்ந்தவர்களுக்கும் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை பெறும் சட்ட வரைவு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    வெளிப்படையாக மோசடி

    வெளிப்படையாக மோசடி

    கடந்த ஆட்சியில் பல ஆயிரம் கோடி சொத்துக்கள் மோசடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. 2016 முதல் 2021 வரை வெளிப்படையாகவே பத்திரப்பதிவு மோசடி நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது. அதற்கான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளது. முறைக்கேடு தொடர்பாக விசாரணை உயர்நிலைக்குழு அமைக்கப்படஉள்ளது.

    மாநகராட்சி தெரு

    மாநகராட்சி தெரு

    பத்திரப்பதிவு வழிகாட்டு மதிப்பில் பெரும் முறைகேடு நடந்துள்ளது. விவசாய நிலங்கள், முறைகேடாக மனை நிலங்களாக மாற்றி விற்கப்பட்டுள்ளன. இவையும் ஆய்வுசெய்து சரி செய்யப்படும். தற்போது மாநகராட்சிப் பகுதிகளில் தெருவுக்கு தெரு வழிகாட்டி மதிப்புகள் மாறுபடுகின்றன. அதையும் மறுசீரமைக்க ஏற்பாடுகள் செய்யப்படும்.

    நீதிமன்றம்

    நீதிமன்றம்

    ஒரு சார்பதிவாளர் பதிவு செய்த சொத்துகளை ரத்து செய்யும் அதிகாரம் பத்திரப்பதிவுத் துறைக்குக் கிடையாது. நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் பரிந்துரை செய்யும் அதிகாரம் மட்டுமே பத்திரப்பதிவுத் துறைக்கு உள்ளது. அதனால், இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து அதற்குத் தீர்ப்பு வர பல ஆண்டுகளாகி விடுகின்றன.

    தவறுகள் குறையும்

    தவறுகள் குறையும்

    அதனால், பத்திரப்பதிவில் தவறு நடந்தது கண்டறியப்பட்டால், அந்தச் சொத்துகளை ரத்து செய்யும் அதிகாரத்தைப் பத்திரப்பதிவுத் துறைக்குக் கொடுக்க சட்டப்பேரவையில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆளுநர் மூலமாக குடியரசுத் தலைவர் ஒப்புதல் கிடைத்ததும் இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்துவிடும். இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தால் தவறுகள் நடப்பது குறையும், இன்னும் 6 மாத காலத்திற்குள் பத்திரபதிவு மேலும் எளிமையாக்கப்படும். தனியார், பெரிய தொழில் அதிபர்கள் கடன் பெறுவதற்கு பத்திரப்பதிவு அலுவலகத்துக்கே வராமல் ஆன்லைன் மூலமே சொத்துகளைப் பதிவு செய்வதற்கு திட்டம் வகுத்துள்ளோம் " இவ்வாறு பதிவு துறை அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார்.

    அதிகாரிகள் யார்

    அதிகாரிகள் யார்

    அமைச்சர் பி.மூர்த்தியின் பேட்டியால் அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர். முறைகேடாக பத்திரப்பதிவு நடந்திருப்பதற்கான ஆதாரங்கள் தங்களிம் உள்ளது என அமைச்சரே கூறியுள்ளார். இதில் யார் யார் சம்மந்தப்பட்டுள்ளார். எந்தெந்த அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து தெரிவிக்கவில்லை. இதனால் கடந்த 5 வருடங்களில் நடந்த அரசியல் சார்ந்தவர்களின் பத்திரப்பதிவுகளை செய்த அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+