மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அன்று விடுதலை புலி.. இன்று பிஎஃப்ஐ! 1991 கருணாநிதி ஆட்சிக்கலைப்பு - "சிக்னல்" கொடுக்கும் எச்.ராஜா

Google Oneindia Tamil News

மதுரை : தடை செய்யப்பட்ட பி.எஃப்.ஐ. அமைப்புக்கு ஆதரவாக செயல்படுவது கிரிமினல் குற்றம் என்று தெரிவித்துள்ள பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, 1991 ஆம் ஆண்டு திமுக ஆட்சி கலைக்கப்பட்டதை நினைவூட்டி எச்சரித்து இருக்கிறார்.

மதுரை மாட்டுத்தாவணியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "தடை செய்யப்பட்ட பி.எஃப்.ஐ. அமைப்புக்கு ஆதரவாக செயல்படுவது கிரிமினல் குற்றம். பயங்கரவாதத்திற்கு ஆதரவாக திருமா, சீமான் ஆகியோர் திட்டமிட்டுள்ள மனித சங்கிலி போராட்டத்திற்கு அரசு அனுமதிக்க கூடாது.

1991 விடுதலை புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதற்காக கருணாநிதி ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டது. பி.எஃப்.ஐ. உடன் விசிக இருக்கும் என திருமா பேசியுள்ளார். பயங்கரவாதிகளின் கைக்கூலி திருமாவளவன்.

முதல்வர் ஸ்டாலின் ரொம்ப நல்லவர்.. அந்த 2 பேர் மேல் ஸ்ட்ரிக்ட் ஆக்‌ஷன் எடுக்கணும்.. வெடித்த எச்.ராஜா! முதல்வர் ஸ்டாலின் ரொம்ப நல்லவர்.. அந்த 2 பேர் மேல் ஸ்ட்ரிக்ட் ஆக்‌ஷன் எடுக்கணும்.. வெடித்த எச்.ராஜா!

 ஸ்டாலின் நல்லவர்

ஸ்டாலின் நல்லவர்

அரசு திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். திருமாவளவனும், சீமானும் தேச துரோகிகள். அவர்கள் மீது ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்லவர். அவரை சுற்றி இருப்பவர் கொம்பு சீவி விடுவார்கள். அவர் தலையை சிலுப்பினால் 1991-ல் நடந்தது இப்போது நடக்கும்.

 ஆவினில் ஹலால்

ஆவினில் ஹலால்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்குலைந்து உள்ளது. மின் கட்டண உயர்வு, சொத்து உயர்வு, பால் பொருட்கள் விலை உயர்வு ஆகியவற்றால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். பால் பாக்கெட்டில் 'இது ஹலால் செய்யப்பட்டது' என குறிப்பிடப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

 அரசியல் கூட்டணி

அரசியல் கூட்டணி

தமிழக மக்களுக்கு விரோதமான ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு தமிழகத்தில் நீதிமன்ற அவமதிப்பை செய்துள்ளார். டிஜிபியாக இருப்பதற்கே அவருக்கு தகுதி கிடையாது. அரசியலில் கூட்டணி என்பது தற்காலிகமான ஒன்று.

 இந்து மதமா?

இந்து மதமா?

பாஜகவுக்கு எதிராக மம்தா - ஸ்டாலின் உள்ளிட்டோரால் அமைக்கப்படும் கூட்டணியால் பலனில்லை. பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டம் தேசிய கல்வி கொள்கையில் உள்ளது. அதை எடுத்து திமுக அரசு செயல்படுத்தி உள்ளது" என கூறினார்.

English summary
Former BJP national secretary H. Raja, who has said that Chief Minister M.K. Stalin is good and those around him are blowing horns, has warned about the dissolution of the DMK regime in 1991.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X