ஆச்சரியம்.. ஏப்ரல் மாதத்திலா இப்படி.. தென் மாவட்டங்களில் தொடர் மழை.. குற்றாலத்தில் குளுகுளு சீசன்
மதுரை: மதுரை, ராமநாதபுரம், தேனி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, சிவகங்கை, கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் நேற்று மழை வெளுத்து வாங்கியது. இதனால் அணைகளுக்கான நீர்வரத்து அதிகரிக்க துவங்கியுள்ளது. மேலும் தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் பொதுமக்கள் உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர்.
Recommended Video
தமிழகத்தில் சில வாரங்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. சில இடங்களில் சராசரியாக 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் பதிவானது.
தென் தமிழக கடலோர பகுதிகளில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 16ம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மாவட்டங்களில் மழை
அதன்படி நேற்று தமிழகத்தின் பல இடங்களில் நல்ல மழை பெய்தது. குறிப்பாக தென்தமிழக மாவட்டங்களின் பல இடங்களில் மழை அதிகரித்தது. நேற்று மாலை 4 மணி முதல் பல இடங்களில் மழை லேசாக பெய்யத்தொடங்கியது. நேரம் போக போக மழையின் அளவு அதிகரித்தது. தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, தேனி, ராமநாதபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களின் பல இடங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் திடீரென்று மின்வெட்டுகள் ஏற்பட்டன.

வீடு இடிந்து 2 பேர் பலி
மாலை நேரத்தில் அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் இருந்து பணி முடித்து வீடு திரும்பியோர் சிரமப்பட்டனர். சில இடங்களில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மழையில் நனைந்தபடி வீடுகளுக்கு படையெடுத்தனர். தென்காசி மாவட்டம் உள்பட பல மாவட்டங்களின் வெவ்வேறு பகுதிகளில் மாலையில் சுமார் ஒரு மணிநேரத்துக்கு அதிகமாக விடாமல் மழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.இதனால் பொதுமக்கள் சிரமப்பட்டனர். ஆழ்வார்குறிச்சி வகைக்குளம் வடக்கு தெருவில் நேற்று இரவில் வீடு இடிந்து விழுந்தது. இதில் கல்யாணி (வயது 60), மகள் ரேவதி (26) ஆகியோர் பலியாகினர்.

அணைகளுக்கான நீர்வரத்து அதிகரிப்பு
இந்த மழையின் காரணமா தென்மாவட்டங்களில் உள்ள அணைகளுக்கான நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக திருநெல்வேலி, தென்காசி மாவட்ட அணைகளுக்கான நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது. மேலும் தேனி மாவட்ட அணைகளுக்கான நீர்வரத்தும் அதிகரித்துள்ளது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 68.34 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 728 கனஅடி நீர் வரும் நிலையில் 822 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. 142 அடி வரை நீர் தேக்கப்படும் பெரியாறு அணை நீர்மட்டம் 126.95 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1225 கனஅடி நீர் வரும் நிலையில் 100 கனஅடி நீர் திறந்து விடப்படுவது குறிப்பிடத்தக்கது.

குற்றால அருவிகளில் ஆர்ப்பரிப்பு
மேலும் கனமழையின் காரணமாக குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மெயின் அருவி, பழைய குற்றால அருவி, ஐந்தருவி, சிற்றாறு, புலி அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்து வருகின்றனர். கொரோனா பரவலுக்கு பின் தற்போது கட்டுப்பாடுகள் இல்லாததால் அவர்கள் சுதந்திரமாக குளித்து மகிழ்கின்றனர். மேலும் அங்கு நிலவும் குளுகுளு தென்றலை சுற்றுலா பயணிகள் அனுபவித்து வருகின்றனர்.

மழையளவு எங்கு அதிகம்
அதிகபட்சமாக தூத்துக்கடி மாவட்டம் கடம்பூர், கயத்தாறு, தேனி மாவட்டம் கூடலூர், பெரியகுளம் பகுதிகளில் 90 மில்லி மீட்டர் மழை பதிவானது. தூத்துக்குடி 80 மில்லி மீட்டர், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் 70மில்லி மீட்டர், திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை, தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் 60மில்லி மீட்டர், தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம், விருதுநகர் மாவட்டம் திருச்சுழி, ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி மற்றும் தேக்கடியில் 50 மில்லிமீட்டர் மழை பெய்தது. இதுதவிர தேனி மாவட்டம் அரண்மனைப்புதூர், மதுரை தெற்கு, விருதுநகர் மாவட்டம் சூரங்குடி, நாகர்கோவில், தென்காசி மாவட்டம் சிவகிரி, கோவில்பட்டியில் 40 மில்லி மீட்டர் மழை பெய்தது.

மதுரை, போடி, சாத்தூர்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி, பரமக்குடி, மதுரை விமான நிலையம், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், தேனி வீரப்பாண்டி, விருதுநகர் மாவட்டம் சாத்தூர், ராமநாதபுரம் வாலிநோக்கம், தேனி போடிநாயக்கனூர் 30 மில்லிமீட்டர், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, வேடச்சந்தூர், தக்கலை, அம்பாசமுத்திரம், அரிமளம், வெம்பக்கோட்டை, பெலாந்துறை, காரியாப்பட்டி, சாத்தான்குளம், சித்தம்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், பெருஞ்சாணி அணை பகுதிகளில் 20 மில்லி மீட்டர் மழை பதிவானது.

இன்று நிலவரம் எப்படி
மேலும் தென் தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரையான மழை பெய்யக்கூடும். தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதேபோல் நாளை தென்தமிழக மாவட்டங்களோடு நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களின் சில இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் ஏப்ரல் 15, 16 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்பட மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை
தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50 கிமீ முதல் 60 கிமீ வேகத்தில் வீசும் என்பதால், மீனவர்கள் அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது. நேற்று உள்பட கடந்த 3 நாட்களாக தெற்கு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுகிறது.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு












Click it and Unblock the Notifications