Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போலீஸ் தேர்வில் முதல் முறை உயரம் சரி, 2வது முறை உயரம் குறைவு.. ஐகோர்டில் இளம் பெண் வழக்கு

Subscribe to Oneindia Tamil

மதுரை: ஏற்கனவே நடந்த போலீஸ் தேர்வில் மனுதாரர்களின் உயரம் சரியாக இருந்த நிலையில், தற்போது நடந்த தேர்வில் மனுதாரர்களின் உயரம் குறைவாக இருப்பதாக கூறுவது வேடிக்கையாக உள்ளது. மனிதர்களின் உயரம் கூடத்தான் செய்யுமே தவிர குறையாது. எனவே மனுதாரர்களுக்கு மீண்டும் உயர அளவீடு நடத்த உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இளம் பெண் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் சிவகங்கையை சேர்ந்த ரமிலா என்ற இளம்பெண், தாக்கல் செய்த மனுவில் கூறுகையில், "கடந்த 21.8.2025 அன்று அறிவிப்பு தமிழகத்தில் இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களில் 2,833 இடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்த எழுத்துத்தேர்வில் நான் வெற்றி பெற்றேன். அதன்பின் உடல் தகுதி தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டேன்.

Height measurement in the police recruitment test A young woman files a case in High Court

அதில் உயர அளவீட்டு தேர்வுக்கு சென்றேன். அப்போது முதல் அளவீட்டில் என் உயரம் 157.4 செ.மீ. இருந்ததாக கூறப்பட்டது. மேல்முறையீடு செய்து மறு அளவீடு செய்தபோது 157.9 செ.மீ. உயரம் இருந்ததாக கூறப்பட்டது. ஆனால், போதிய உயரம் இல்லை என்று தெரிவித்து, என்னை தகுதிநீக்கம் செய்து சீருடை பணியாளர் தேர்வு வாரிய துணைக்குழு தலைவர் நோட்டீஸ் தந்தார்.

முன்னதாக 2023-ம் ஆண்டில் நடந்த போலீஸ் பணித்தேர்வில் என் உயரத்தை 159 செ.மீ. என அதிகாரிகள் பதிவு செய்து தகுதி செய்தனர். ஆனால், மொத்த மதிப்பெண் குறைவாக இருப்பதாக கூறி பணி மறுத்தனர். ஆனால் கடந்த ஆண்டு நடந்த காவலர் ஆள்தேர்வில் என் உயரம் குறைவாக தகுதிநீக்கம் செய்ததாக நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இப்படி வழங்கப்பட்ட நோட்டீசை ரத்து செய்ய நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். என் உயரத்தை மீண்டும் அளவீடு செய்து அதன் அடிப்படையில் அடுத்தடுத்த தேர்வுகளில் பங்கேற்கவும், அது வரை ஒரு பணியிடத்தை காலியாக வைக்கவும் சீருடை பணியாளர் தேர்வாணையத்திற்கு உத்தரவிட வேண்டும்" இவ்வாறு மனுவில் ரமிலா கூறியிருந்தார்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி சிவகங்கை மாவட்டம் சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த மதுமிதா என்ற பெண்ணும் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் வக்கீல் ஆஜராகி, ஏற்கனவே நடந்த போலீஸ் தேர்வில் மனுதாரர்களின் உயரம் சரியாக இருந்த நிலையில், தற்போது நடந்த தேர்வில் மனுதாரர்களின் உயரம் குறைவாக இருப்பதாக கூறுவது வேடிக்கையாக உள்ளது. மனிதர்களின் உயரம் கூடத்தான் செய்யுமே தவிர குறையாது. எனவே மனுதாரர்களுக்கு மீண்டும் உயர அளவீடு நடத்த உத்தரவிட வேண்டும் என வாதாடினார்.

நேற்றைய விசாரணை முடிவில், இந்த மனுக்களை போலீஸ் பணிக்கான உயரம் அளவீடு கோரி தாக்கலாகி நிலுவையில் உள்ள வழக்குகளுடன் சேர்ந்து விசாரணைக்கு பட்டியலிடும்படி நீதிபதி புகழேந்தி உத்தரவிட்டார். அடுத்த விசாரணையை வருகிற 18ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+