மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொள்ளையர்களை அடையாளம் காட்ட 5 ஆண்டுகள் போதவில்லை.. இன்னும் 5 ஆண்டுகள் வேண்டும்.. இல கணேசன்

Google Oneindia Tamil News

Recommended Video

    இன்னும் 5 ஆண்டுகள் வேண்டும் - இல கணேசன்

    மதுரை: மக்களிடம் கொள்ளை அடித்தவர்களை அடையாளம் கண்டு நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என எண்ணி இருந்தோம், 5 ஆண்டுகளில் அந்த பணி முடியவில்லை என்றார் இல கணேசன்.

    மதுரையில் பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் தமிழ்நாடு பாரம்பரியமிக்கது, நாயன்மார்கள் வாழ்ந்த பூமி, தேசிய சக்தி, தெய்வீக சக்தி இணைந்தது தான் பாஜக.

    தமிழகத்தில் பாஜக வளரவில்லை என்றால் நாட்டில் வேறு எங்கும் பாஜக வளராது, பாஜக இறக்குமதி செய்யப்பட்ட கட்சி போன்று ப.சிதம்பரம் பேசி வருகிறார்.

    வெற்றி வாய்ப்பு

    வெற்றி வாய்ப்பு

    காங்கிரஸை எதிர்க்க துணிவு இல்லாமல் காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்துள்ளது. வலுவிழந்த காங்கிரஸ் கட்சியோடு ஸ்டாலின் கூட்டணி வைத்து உள்ளார். அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானிக்கு வெற்றி அதிகமாக உள்ளது.

    அமித்ஷா பிரசாரம்

    அமித்ஷா பிரசாரம்

    ராகுல்காந்தி அமேதியில் தோல்வியை தழுவார், பயத்தின் காரணமாக வயநாட்டில் ராகுல்காந்தி போட்டியிடுகிறார். தமிழகத்திற்கு பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் அமித்ஷா பிரசாரத்திற்கு வருகிறார்கள்.

    காங்கிரஸ் காலம்

    காங்கிரஸ் காலம்

    பாஜக ஆட்சியில் வேலை வாய்ப்பு அதிகரித்து உள்ளது, பாஜக ஆட்சி பொறுப்பு ஏற்கும் போது இந்தியாவின் நிலை மிக மோசமாக இருந்தது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மக்களுக்கு 1 ரூபாய் அனுப்பினால் 15 காசு மட்டுமே சென்றது.

    நீதிமன்றம்

    நீதிமன்றம்

    சென்னை மழை வெள்ளத்தின் பொழுது மத்திய அரசு சார்பில் ஒவ்வொரு மக்களுக்கும் 5 ஆயிரம் முழுமையாக சென்றது, மக்களிடம் கொள்ளை அடித்தவர்களை அடையாளம் கண்டு நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என எண்ணி இருந்தோம்.

    பாஜகவுக்கு வாய்ப்பு

    பாஜகவுக்கு வாய்ப்பு

    5 ஆண்டுகளில் அது முடியவில்லை, கொள்ளைக்காரர்களை அடையாளம் கண்டு சிறைக்கு அனுப்ப இன்னும் 5 ஆண்டுகள் பாஜகவுக்கு வாய்ப்பு தாருங்கள் என தெரிவித்தார்.

    English summary
    BJP MP Ila Ganesan says that we need another 5 years to punish the political robberers.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X