முட்டாள்கள் அல்ல.. ஓய்வு பெற்ற நீதிபதிகளிடம் கூறுங்கள்.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் பேசியது என்ன?
மதுரை: நாங்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல. இதை உங்களுடன் இருக்கும் வக்கீல்களிடமும், ஓய்வு பெற்ற நீதிபதிகளிடமும் தெரிவியுங்கள். எனது நீதித்துறை செயல்பாட்டில் யாரும் தலையிட முடியாது என்று வழக்கறிஞர் வாஞ்சிநாதனிடம் நீதிபதி ஜிஆர்சாமிநாதன் நேற்று வாதத்தின் போது கூறினார். மேலும் நீதிபதிகளை விமர்சித்து வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் வக்கீல் வாஞ்சிநாதன் மீது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமை நீதிபதி அமர்வுக்கு பரிந்துரை செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையில் சென்னை உயர்நீதிமன்ற கிளையில் நீதிபதியாக ஜி.ஆர்.சுவாமிநாதன் பணியாற்றி வருகிறார். இவர் ஒரு தரப்புக்கு சார்பாக உத்தரவுகளை பிறப்பிப்பதாக குற்றம்சாட்டியுள்ள மதுரையைச் சேர்ந்த வக்கீல் வாஞ்சிநாதன், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு புகார் மனு அனுப்பியதாக கூறப்படுகிறது.இந்த புகார் மனு சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக தகவல் பரவி வருகிறது.

போராட்டங்கள்
இந்த புகார் தொடர்பாக சில நாட்களுக்கு முன்பு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு வக்கீல் வாஞ்சிநாதனிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தது. இதுகுறித்து, ஓய்வு பெற்ற நீதிபதிகள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலர் வக்கீல் வாஞ்சிநாதனுக்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்தனர். இதே போல நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் ஆதரவு கருத்துக்களை தெரிவித்தார்கள்.இதனிடையே வக்கீல் வாஞ்சிநாதனுக்கும் ஆதரவாகவும், நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனின் முடிவுக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டங்களை வக்கீல்கள் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதிகள் நடத்தினார்கள்.
ஓய்வு பெற்ற நீதிபதிகள்
அப்போது ஓய்வு பெற்ற நீதிபதிகள் அரிபரந்தாமன், சந்துரு உள்ளிட்டோர் வக்கீல் வாஞ்சிநாதன் மீதான நடவடிக்கையை கைவிட வேண்டும் என்றும், இது தொடர்பான விசாரணையை ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு தொடரக்கூடாது என்றும் தெரிவித்து இருந்தார்கள். மேலும் பல்வேறு வக்கீல் சங்கங்களும் இதே கோரிக்கைகளை வலியுறுத்தின.
இந்த விவகாரம் தொடர்பாக மதுரையில் உள்ள சென்னை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், ராஜசேகர் ஆகியோர் நேற்று விசாரித்தனர். அப்போது வக்கீல் வாஞ்சிநாதன் ஆஜராகி இருந்தார். அங்கு ஏராளமான வழக்கறிஞர்கள் கூடியிருந்தனர். இதேபோல் கோர்ட் வளாகமே நிரம்பி வழிந்திருந்தது.
நீதிமன்றத்தில் ஒளிபரப்பான வீடியோ
அப்போது நீதிமன்றத்தில் ஒரு வீடியோ ஒளிபரப்பப்பட்டது. அந்த வீடியா எது என்றால், தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற அதிகாரத்தை முதல்வருக்கு வழங்குவதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டதற்கு கடந்த மே மாதம் ஐகோர்ட்டு தடை விதித்து இருந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு சம்பந்தமாக வக்கீல் வாஞ்சிநாதன் பேசிய வீடியோவாகும். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி இருந்தது. அந்த வீடியோதான் நேற்று நீதிமன்றத்தில் அனைவரும் முன்பாக காண்பிக்கப்பட்டது.
வக்கீல் வாஞ்சிநாதன் பதில்
பின்னர் வக்கீல் வாஞ்சிநாதனிடம் இந்த வீடியோவில், நீதித்துறையை கடுமையாக விமர்சனம் செய்து கருத்து தெரிவித்திருக்கிறீர்கள். அதற்கு உங்கள் பதில் என்ன? என உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கேட்டார். அதற்கு வாஞ்சிநாதன், "நீங்கள் ஏற்கனவே கேட்டதற்கு பதில் அளித்து உள்ளேன். இப்போது நீங்கள் ஒரு வீடியோவை ஒளிபரப்பி, அது குறித்து கேட்கிறீர்கள். வீடியோவில் எப்படி வேண்டுமானாலும் மாற்றம் செய்யலாம். வீடியோவை ஒளிபரப்பி, அதற்கு விளக்கம் கேட்பது முறையல்ல. மேலும் இது வழக்கு சம்பந்தம் இல்லாதது. வீடியோ தலைப்புக்கு நான் பொறுப்பல்ல. எழுத்துபூர்வமாக கேட்டால் பதில் அளிக்கிறேன். மேலும், உங்கள் (ஜி.ஆர்.சுவாமிநாதன்) மீது நான் தெரிவித்த புகாரை நீங்களே விசாரிக்க முடியாது" என்று கூறினார்.
உங்களுக்கு பின்னால் இருப்பவர்கள்
அதற்கு நீதிபதி ஜிஆர் சுவாமி நாதன், "நாங்கள் தலைமை நீதிபதிக்கு புகார் அனுப்பியது குறித்து விசாரிக்கவில்லை. உங்கள் மீது இதுவரை எந்த நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீங்கள் வைத்த குற்றச்சாட்டில் தற்போதும் அதே நிலையில் இருக்கிறீர்களா? என விளக்கம் கேட்கத்தான் அழைத்தோம். அதுவும் மேல்முறையீட்டு வழக்கில் எதிர்மனுதாரர் ஒருவரின் வக்கீலாக நீங்கள் இருந்ததால் உங்களை அழைத்தோம். ஆனால் உங்கள் மீது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுத்ததாக நீங்களும், உங்களுக்கு பின்னால் இருப்பவர்களும் பேசி வருகிறார்கள்.
முட்டாள்கள் அல்ல
என் தீர்ப்பை விமர்சிக்க உங்களுக்கு முழு உரிமை உள்ளது. அதற்கு நானே ஆதரவு தெரிவிக்கிறேன். ஆனால், சாதி பாகுபாட்டுடன் தீர்ப்பு வழங்குவதாக என் மீது குற்றம்சாட்டுவது என்பது வித்தியாசமானது. அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. நாங்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல. இதை உங்களுடன் இருக்கும் வக்கீல்களிடமும், ஓய்வு பெற்ற நீதிபதிகளிடமும் தெரிவியுங்கள். எனது நீதித்துறை செயல்பாட்டில் யாரும் தலையிட முடியாது. சுப்ரீம் கோர்ட்டில் நீங்கள் அளித்திருக்கும் புகாருக்கும், இங்கு நடைபெறும் விசாரணைக்கும் சம்பந்தம் இல்லை.
நீதிபதிகள் குறித்து விமர்சனம்
தொடர்ந்து 4 ஆண்டுகளாக நீதித்துறையை, நீதிபதிகளை விமர்சனம் செய்து வருகிறீர்கள். அதற்கு ஆதாரமாக குறைந்தபட்சம் 50 வீடியோக்களை காட்ட முடியும். சமூக வலைதளங்களில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் சாதி ரீதியாக நடந்து கொள்கிறார் என்றும் தெரிவித்து இருக்கிறீர்கள். அதற்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்?" எனக் கேட்டனர். அதற்கு வாஞ்சிநாதன், "எழுத்துபூர்வமாக உத்தரவு பிறப்பிக்கும் பட்சத்தில் நான் பதில் அளிக்கிறேன்" என்றார். பின்னர் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், "வாய்மொழியாக பதில் அளித்தால் போதும். பதில் அளிக்க தயங்குவது ஏன்?' என்று கேட்டார்.
நீதித்துறை குறித்து விமர்சனம்
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறுகையில், வக்கீல் வாஞ்சிநாதன் தமிழக பல்கலைக்கழக வேந்தர் அதிகாரத்தை முதல்வருக்கு வழங்கும் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை விமர்சித்தும், பொது ஊடகங்களில் நீதித்துறையை விமர்சித்தும் பேசியுள்ளார்.
கோர்ட் அவமதிப்பு வழக்கு
முந்தைய விசாரணையின்போது இது குறித்து விளக்கமளிக்க வாஞ்சிநாதன் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டது. அதன்படி அவர் நேரில் ஆஜரானார். அப்போது அவர் மீது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டவில்லை. அவர் மீது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், இந்த விவகாரத்தில் தலைமை நீதிபதி தலையிட வேண்டும் என ஓய்வுபெற்ற நீதிபதிகள் கோரியது துரதிருஷ்டவசமானது. இன்றும்(நேற்று) வாஞ்சிநாதன் உரிய பதில் அளிக்கவில்லை. அவரின் இந்த செயல்பாடுகளை கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கையாக நாங்கள் கருதுகிறோம். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க தலைமை நீதிபதி அமர்வுக்கு பரிந்துரைக்கிறோம்" இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications