மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்! கனிமொழி தந்த ஊக்கம்! நெகிழ்ந்து போன மாற்றுத்திறனாளி மாணவி!

கல்லூரி பட்டமளிப்பு விழாவில் 1,450 மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கிய கனிமொழி

Google Oneindia Tamil News

மதுரை: மதுரையில் நடைபெற்ற கல்லூரி பட்டமளிப்பு விழா ஒன்றில் மாற்றுத்திறனாளி மாணவிக்கு பட்டம் வழங்கிய கனிமொழி எம்.பி., என்ன உதவி தேவைப்பட்டாலும் தன்னை தாராளமாக அணுகலாம் எனக் கூறி அந்த மாணவிக்கு ஊக்கமளித்த நிகழ்வு நடந்துள்ளது.

மதுரையில் உள்ள யாதவா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட கனிமொழி எம்.பி., இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக நின்றுகொண்டே 1,450 மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கினார்.

Kanimozhi MP, who awarded a degree to a differently abled student at a college graduation ceremony held in Madurai

திமுக துணை பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின்னர் கல்லூரி மாணவ, மாணவிகளுடனான கலந்துரையாடல், பட்டமளிப்பு விழா, என இளம் தலைமுறைகளோடு அதிகம் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளும் வகையில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார் கனிமொழி.

இதனிடையே இன்று மதுரையில் நடைபெற்ற மகளிர் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பட்டங்கள் வழங்கிக் கொண்டிருந்த கனிமொழி எம்.பி., தஸ்லீமா நஸ்‌ரீன் என்ற உயரம் குறைவான மாற்றுத்திறனாளி மாணவியை பார்த்ததும் அக்கறையோடு அவரிடம் பேசி அன்பு பாராட்டியிருக்கிறார்.

இந்நிலையில் பி.ஏ. வரலாறு முடித்த தாம் இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் கீழ் தன்னார்வலராக பணியாற்றி வருவதாகவும் இது போன்ற திட்டங்களால் தன்னை போன்ற பலரும் பயன் அடைவதாக கூறியிருக்கிறார்.

புர்காவில் யாருன்னு பாருங்க! மசூதிக்கு போன தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி.! என்ன பின்னணி? புர்காவில் யாருன்னு பாருங்க! மசூதிக்கு போன தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி.! என்ன பின்னணி?

மாற்றுத்திறனாளி மாணவி தஸ்லீமா நஸ்‌ரீனுக்கு ஊக்கமளிக்கும் வகையில் பேசிய கனிமொழி, என்ன உதவி தேவைப்பட்டாலும் தன்னை அணுகலாம் எனக் கூறி அனுப்பி வைத்திருக்கிறார்.

மேலும், பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் மூர்த்தியிடமும் அந்த மாணவி உதவி கோரி வந்தால் செய்து கொடுக்குமாறு கனிமொழி கேட்டுக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

English summary
Kanimozhi MP, who awarded a degree to a differently abled student at a college graduation ceremony held in Madurai, encouraged the student by saying that she can freely approach him for whatever help she needs.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X