திருப்பரங்குன்றம் தீபத்தூணில் மாலை 5 மணிக்கு தீபம் ஏற்றப்படும்! மலைக்கு கொண்டு செல்லப்படும் கொப்பரை!

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபமேற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் இன்று மாலை 5 மணிக்கு தீபமேற்றப்படும் என கோயில் நிர்வாகக் குழு பொறுப்பாளரும் ஓய்வு பெற்ற நீதிபதியுமான வைத்தியநாதன் அறிவித்துள்ளார். தீபமேற்றப்படும் கொப்பரைக்கு பூஜை செய்யப்பட்டதை அடுத்து அவற்றை மலைக்கு கொண்டு செல்லும் பணிகள் நடைபெறுகின்றன.

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என கடந்த திமுக ஆட்சியிலேயே இந்த வழக்கு நடந்தது. ஆனால் திமுகவோ வழக்கமாக ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோயிலிலேயே தீபம் ஏற்றியது. அது போல் இந்த ஆண்டு தவெக ஆட்சியிலும் தீபத்தூணில் தீபமேற்றும் விவகாரம் உச்சநீதிமன்றத்திற்கு சென்றது.

thirupparankundram madurai

அந்த வழக்கான நீதிபதிகள் அரவிந்த் குமார்,பாஞ்சோலி தலைமையிலான அமர்வில் கடந்த 23 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த ஒரு முறை மட்டும் 24 ஆம் தேதி கார்த்திகை தீபத்தின் போது தீபத்தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

உச்சிப் பிள்ளையார் கோயிலில் தீபம்

ஆனால் அன்றைய தினம் வழக்கமாக ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோவிலிலேயே தீபம் ஏற்றப்பட்டது. இதையடுத்து மதுரை ஆட்சியருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரணை நேற்று நடந்தது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம்..SC போட்ட ஆர்டர்! ஒட்டுமொத்த மலையையும் கண்ட்ரோலில் எடுத்த CRPF

தமிழக அரசை கடுமையாக விமர்சித்த உச்சநீதிமன்றம்

அப்போது உச்சநீதிமன்றம் தமிழக அரசை கடுமையாக விமர்சித்திருந்தது. மேலும் உச்சநீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றாததால் அரசியலமைப்பு சீர்குலைந்துவிட்டதாக நீதிபதிகள் வேதனை தெரிவித்திருந்தனர். இதையடுத்து திருப்பரங்குன்றம் தீபத்தூணில் நாளை (இன்று) தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டது. மேலும் திருப்பரங்குன்றம் மலையை மத்திய பாதுகாப்பு படை (சிஆர்பிஎஃப்) கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள உத்தரவிடப்பட்டது.

thirupparankundram madurai

சிஆர்பிஎஃப் வீரர்கள் வருகை

இதையடுத்து சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் படை வீரர்கள் மலையை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். காலை முதலே பக்தர்கள் மலை உச்சிக்கு செல்கிறார்கள். அவர்களிடம் தீவிர சோதனை நடத்தப்படுகிறது. அது போல் சிக்கந்தர் தர்காவில் தொழுகை நடத்த முஸ்லீம் சமூகத்தினரும் செல்கிறார்கள். அவர்களிடமும் சோதனை நடத்தபபடுகிறது.

அறங்காவலர் குழுவை கலைத்த உச்சநீதிமன்றம்

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றாததற்கு அறங்காவலர் குழுதான் காரணம் என மனுதாரர் தரப்பு வாதிட்டதால் அந்த குழுவை கலைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் கோயிலை நிர்வகிக்கவும் தீபம் ஏற்றுவதை கண்காணிக்கவும் ஓய்வு பெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் ஆகியோர் உச்சநீதிமன்றம் நியமித்தது.

ஓய்வு பெற்ற நீதிபதிகள்

இதையடுத்து இன்று காலை, சென்னையில் இருந்து முதல் விமானத்தில் வைத்தியநாதனும், பார்த்திபனும் பயணம் செய்து மதுரை விமான நிலையத்திற்கு வந்துள்ளனர். இவர்கள் அங்கிருந்து திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு சென்ற நிர்வாக பொறுப்பை ஏற்கிறார்கள். பிறகு அவர்கள் ஸ்தானிக பட்டர்களை சந்தித்து தீபமேற்ற நல்ல நேரத்தை பெறுகிறார்கள். அதன்படி இன்றைய தினம் தீபமேற்றப்படுகிறது.

எப்போது தீபம் ஏற்றப்படுகிறது?

தீபத்தூணில் இன்று மாலை 5 மணிக்கு தீபம் ஏற்றப்படும் என முன்னாள் நீதிபதி வைத்தியநாதன் தெரிவித்துள்ளார். கோயில் நிர்வாக பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் ஆகியோர் முன்னிலையில் இந்த தீபம் ஏற்றப்படுகிறது. தீபமேற்றுவதற்கான கொப்பரைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அவை மலைக்கு கொண்டு செல்லப்படுகிறது. அந்த கொப்பரையை ஓய்வு பெற்ற நீதிபதிகள் கொண்டு செல்கிறார்கள்.

மலை பகுதியில் முன்பு உச்சிப் பிள்ளையார் கோயில் வரை மின் விளக்குகள் போடப்பட்டிருந்த நிலையில் தற்போது தீபத்தூண் அருகேவும் மின் விளக்குகள் அமைக்கப்படுகிறது. அது போல் தீபமேற்ற வசதியாக தூணை சுற்றி மேடைகள் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+