Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கண்கள் முழுக்க ஆனந்தம்.. முகம் பூரா பூரிப்பு.. உதயநிதிக்காக வீட்டு வாசலில் காத்திருந்த மு.க.அழகிரி

Subscribe to Oneindia Tamil

மதுரை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தன்னை பார்க்க வருவதை அறிந்த முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி அவரை காத்திருந்து வரவேற்றார்.

மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் மூத்த மகன் மு.க.அழகிரி. இவர் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது மத்திய அமைச்சராக இருந்தார். அதன் பிறகு கட்சியில் மு.க.ஸ்டாலின் முன்னிறுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தந்தை கருணாநிதியிடம் மோதல் போக்கை அழகிரி கொண்டிருந்ததாக தகவல்கள் வந்தன.

இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2014 ஆம் ஆண்டு திமுகவிலிருந்து மு.க.அழகிரியை அப்போதைய திமுக தலைவராக இருந்த கருணாநிதி நீக்கினார். இதன் பிறகு குடும்பத்தினர் எத்தனையோ முறை பேச்சுவார்த்தை நடத்தியும் அழகிரியால் திமுகவில் மீண்டும் சேர முடியவில்லை.

மதுரை

மதுரை

இதனால் மதுரையில் சில காலம் அரசியலில் தலையிடாமல் இருந்த மு.க.அழகிரி, தந்தை கருணாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த போதும் அவர் மறைந்த போதும் வந்திருந்தார். இதன் பிறகும் அழகிரியை திமுகவில் இணைக்க மறைந்த பேராசிரியர் க அன்பழகனிடம் கோரிக்கைகள் எழுந்தன. ஆனால் அவர் கருணாநிதி சொன்னது சொன்னதுதான் என கூறி கோரிக்கையை நிராகரித்துவிட்டார்.

மு.க.அழகிரி

மு.க.அழகிரி

இதன் பிறகு மு.க.அழகிரி தனிக் கட்சி தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஒவ்வொரு முறையும் அவர் வீட்டுக்கு அவரது ஆதரவாளர்கள் குவியும் போதெல்லாம் இந்த பேச்சுக்கள் எழுந்தன. இந்த நிலையில் தந்தையின் முதலாமாண்டு நினைவு நாள் அன்று தனது மனைவி காந்தி, மகன் துரை அழகிரியுடன் மெரினாவில் உள்ள நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

திமுகவை விமர்சித்த அழகிரி

திமுகவை விமர்சித்த அழகிரி

பல முறை திமுகவை கடுமையாக விமர்சித்தார் அழகிரி. 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திமுக படுதோல்வி அடையும் என தெரிவித்திருந்தார். ஆனால் அந்த தேர்தலில் திமுக கூட்டணி தமிழகத்தில் மொத்தம் 39 தொகுதிகளில் 38 இடங்களில் வென்றது. இதையடுத்து 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது.

தமிழக முதல்வர்

தமிழக முதல்வர்

இதையடுத்து தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்பு விழாவுக்கு அண்ணன் அழகிரிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவர் நிச்சயம் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக அவருடைய மகன் துரை அழகிரியும் மகள் கயல்விழியும் வந்திருந்தனர். அவர்களை ஸ்டாலின் குடும்பத்தினர் வரவேற்று உபசரித்தனர்.

 உதயநிதி துரை அழகிரி

உதயநிதி துரை அழகிரி

உதயநிதியும் துரை அழகிரியும் கைகுலுக்கி கட்டி அணைத்த சம்பவங்களும் நடந்தன. இந்த புகைப்படம் வைரலானது. இந்த சம்பவமே குடும்ப ஒற்றுமைக்கு அச்சாரம் போட்டது போல் இருந்தது. இதையடுத்து முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றதற்கு மு.க.அழகிரி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்திருந்தார்.

மதுரைக்கு சென்ற ஸ்டாலின்

மதுரைக்கு சென்ற ஸ்டாலின்

இந்த நிலையில் முதல்வராக பதவியேற்று முதல் முறையாக மதுரைக்கு ஸ்டாலின் ஒரு நிகழ்ச்சிக்காக சென்றிருந்தார். எனவே அவர் அழகிரி வீட்டுக்கு சென்று அவரை சந்திக்கக் கூடும் என அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். ஆனால் முதல்வர் மதுரை சென்ற போதிலும் அழகிரியின் வீட்டிற்கு செல்லவே இல்லை. இதன் பின்னர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானார்.

பதவியேற்பு விழா

பதவியேற்பு விழா

இந்த பதவியேற்பு விழாவிற்கு அழகிரிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் உதயநிதிக்கு துரை அழகிரி வாழ்த்து தெரிவித்திருந்தார். உதயநிதி அமைச்சராக பதவியேற்ற புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்தியிருந்தார். அண்மையில் சென்னையில் நடந்த கல்லூரி விழாவில் "நானும் என் அண்ணனும் இந்த பள்ளியில்தான் படித்தோம். எங்களை பள்ளியில் சேர்த்தது முரசொலிமாறன் மாமா" என முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா

இந்த நிலையில் மதுரையில் நேற்று நடந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவை தொடங்கி வைக்க விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்றிருந்தார். அப்போது அவர் அழகிரியின் வீட்டுக்குச் செல்வதாக முன்கூட்டியே அழகிரி குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்திருந்தார். இதனால் நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும் அடைந்த அழகிரி, தனது தம்பி மகனை வரவேற்க வீட்டு வாசலிலேயே காத்திருந்தார்.

உதயநிதியை கட்டி அணைத்து வரவேற்ற அழகிரி

உதயநிதியை கட்டி அணைத்து வரவேற்ற அழகிரி

உதயநிதியை கட்டி அணைத்து முகத்தில் அத்தனை பூரிப்புடன் வரவேற்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் வீட்டுக்கு சென்ற உதயநிதி, பெரியப்பா அழகிரி, பெரியம்மா காந்தியிடம் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார். பின்னர் இருவரும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர். இந்த சந்திப்பின் போது பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உட���ிருந்தார். உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானதும் அத்தை கனிமொழியிடமும் பாட்டி ராஜாத்தி அம்மாளிடமும் சிஐடி காலனி வீட்டிற்கு சென்று ஆசிர்வாதம் வாங்கியது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+