மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"மாஸ்டர் ஸ்கெட்ச்".. நடுரோட்டில் அலறிய கணவன்.. கோர்ட்டு வாசலில் கதறிய மனைவி.. குறுக்கே வந்த "மாமா"

கணவரை கூலிப்படை வைத்து ஊனமாக்கிய மனைவியை போலீசார் கைது செய்தனர்

Google Oneindia Tamil News

மதுரை: தன் கணவரை தாக்கியவர்கள் குறித்து சிபிசிஐடி விசாரணை வேண்டும் என்று கோர்ட்டிற்கு சென்று வழக்கையும் தொடுத்த மனைவி தற்போது கைதாகி உள்ளார். என்ன காரணம்?

மதுரை திருப்பாலை ஜிஆர் நகரை சேர்ந்தவர் செந்தில்குமார்.. இவருக்கு 35 வயதாகிறது.. இவர் என்ஜினியராக வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார்...

இவரது மனைவி பெயர் வைஷ்ணவி.. 24 வயதாகிறது.. ராமநாதபுரத்தை சேர்ந்தவர்.. இவர்களுக்கு திருமணம் முடிந்து ஒரு பெண் குழந்தை உள்ளது.

 ஹெல்மெட்

ஹெல்மெட்

கல்யாணம் ஆனதுமே மறுபடியும் செந்தில்குமார் வெளிநாட்டுக்கு சென்றுவிட்டார். வருஷத்துக்கு ஒருமுறைதான் ஊருக்கு வந்து போவாராம்.. அப்படித்தான், கடந்த மாதம் மதுரைக்கு வந்துள்ளார்.. 27-ந் தேதி மகளை பைக்கில் ஏற்றிக்கொண்டு போய் ஸ்கூலில் விட்டுவிட்டு, வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.. அப்போது பைக்கில் 2 பேர் வந்துள்ளனர்.. அவர்கள் ஹெல்மெட் அணிந்திருந்தனர். செந்தில்குமாரை பட்டாக்கத்தியால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர்..

 கோர்ட் வாசற்படி

கோர்ட் வாசற்படி

மறுபக்கம் திருப்பாலை போலீசாரும் நடந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்... இதனிடையே, செந்தில்குமாரின் மனைவி வைஷ்ணவி, தன்னுடைய கணவர் மீது தாக்குதலை நடத்தியது குறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என்று சொல்லி, கோர்ட்டில் கேஸ் போட்டார். எனவே போலீசாரும், செந்தில்குமார் மற்றும் வைஷ்ணவி இவர்கள் இருவரின் செல்போன் நம்பர்களை வைத்து, விசாரணையை ஆரம்பித்தனர்.. அப்போது, யாரோ ஒருவரிடம் வைஷ்ணவி பல மணி நேரம் பேசியது தெரியவந்தது...

 ஜாலி உல்லாசம்

ஜாலி உல்லாசம்

அந்த நபர் யார் என்று விசாரிக்கும்போது, வைஷ்ணவியின் தாய்மாமா மகன் வெங்கடேசன் என்பது தெரியவந்தது.. வெங்கடேசனுக்கு 25 வயதாகிறது.. இவரும் என்ஜினியராக வேலை பார்க்கிறார்.. இவர்கள் இருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.. செந்தில்குமார் வெளிநாட்டில் இருக்கும்போது, இவர்கள் 2 பேரும் ஜாலியாக இருந்துள்ளனர்.. இப்போது ஊருக்கு வந்துவிட்டால், இந்த ஜோடியால் சந்திக்க முடியவில்லையாம்.. மேலும், ஊருக்கு வந்தாலே, பைக் எடுத்துக் கொண்டு அடிக்கடி செந்தில்குமார் வெளியே சென்றுவருவதால், வைஷ்ணவிக்கு தொந்தரவாக இருந்துள்ளது..

 1 கால் 1 கை

1 கால் 1 கை

செந்தில்குமாரின் ஒரு கை, காலை வெட்டினால் அவரால் வீட்டை விட்டு வெளியே வரமுடியாது என்று வைஷ்ணவி அந்த பிளானை வெங்கடேசனிடம் சொல்ல, வெங்கடேசன் தனது நண்பரான, கூலிப்படையை சேர்ந்த சாந்தகுமாரிடம் சொல்ல, அதற்கு அவர் ரூ.1 லட்சம் ரூபாய் கேட்டாராம்.. உடனே வைஷ்ணவி, கணவனின் கை, காலை வெட்டி எடுக்க, தன்னுடைய நகையை, சிவகங்கையில் அடகு வைத்து ஒரு லட்சம் ரூபாய் தந்துள்ளார்..

வாசற்படி

வாசற்படி

அந்த பணத்தை வாங்கி கொண்டு, சாந்தகுமாரும், இன்னொருவரும் பைக்கில் வந்து செந்தில்குமாரை வெட்டி விட்டு தப்பி சென்றது தெரியவந்தது... இதையடுத்து, வைஷ்ணவி, வெங்கடேசனை போலீசார் கைது செய்துள்ளனர்.. கூலிப்படை தலைவன் சாந்தகுமார் உள்ளிட்டவர்களை தேடி வருகிறார்கள்.. இவ்வளவும் செய்துவிட்டு, தன் கணவரை தாக்கியவர்கள் குறித்து சிபிசிஐடி வேண்டும் என்று கோர்ட் வாசலை, எந்த தைரியத்தில் மிதித்தார் தெரியவில்லை இந்த வைஷ்ணவி..!!

English summary
Madurai Shocking incident and why did Police arrest young woman with her boyfriend
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X